ஜப்பானில் தான் ஏற்கெனவே விற்பனை செய்யும் மிட்சுபிஷி மான்ட்டெரோ எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது மிட்சுபிஷி. காரின் வெளிப்பக்கம் மற்றும் உள்பக்கத்தில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பக்கம் கிரில், க்ரோம் பட்டையுடன் புதிய டிஸைனில் பிரம்மாண்டமாக இருக்கிறது. புதிய பானெட் அதற்குத் துணையாக இருக்கிறது. மேலும், LED டே டைம் ரன்னிங் லைட் மற்றும் பின்பக்க பனி விளக்கு அளிக்கப்படுகிறது. புதிய பம்பர்கள் மற்றும் பாடி கிளாடிங், காரின் தோற்றத்துக்கு உதவுகின்றன.

முன்பு, 17 இன்ச் டயர் இருந்த நிலையில், தற்போது அது 18 இன்ச் டயராக மாற்றப்பட்டுள்ளது. அலாய் வீல்களும் புதிது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 202 மிமீயில் இருந்து, 235 மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய மான்ட்டெரோவில் இருந்த அதே 3.2 லிட்டர் 4 சிலிண்டர் DI-D டீசல் இன்ஜின்தான் என்றாலும். 189bhp பவர் மற்றும் 44.1kgm டார்க் வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. தவிர, மெட்டல், மரம், பியானோ பிளாக் வேலைப்பாடுகள் நிறைந்த கேபினில், ஸ்டீயரிங் வீலில் க்ரூஸ் கன்ட்ரோல், ஆடியோ கன்ட்ரோல், ஆட்டோமெட்டிக் ஏ.சி மற்றும் வென்ட்கள், பவர் ஸ்லைடிங் சன்-ரூஃப், ராக்ஃபோர்டு ஆடியோ சிஸ்டம் (Rockford Audio System), கிளாஸ் ஆன்டெனா, அலுமினியம் பெடல், டூயல் ஸ்டேஜ் SRS Airbags, 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஸ்போர்ட்ஸ் மோடு உடனான 4WD சிஸ்டம், லெதர் இருக்கைகள் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.

பழைய மான்ட்டெரோவே 40 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் CKD முறையில் புதிய மான்ட்டெரோ விற்பனைக்கு வருகிறது. அதனால், இதன் எக்ஸ் ஷோரூம் விலையே (68.45 லட்சம்) 70 லட்சத்தை நெருங்குகிறது. ஜுன் மாதம் முதலே டீலர்கள் புக்கிங் பணிகளைத் துவக்கிவிட்டார்கள் (10 லட்ச ரூபாய் செலுத்தி புக் செய்யலாம்). எனவே, மான்ட்டெரோவை பிரபலப்படுத்தும் முயற்சியாக, இந்தியாவில் சண்டிகரில் முதன்முறையாகவும், இரண்டாவதாக கோவையிலும், மூன்றாவதாக கொச்சியிலும் உள்ள தனது ஷோரூம்களில், ப்ரீ லான்ச் டிஸ்ப்ளே முறையில் இந்த எஸ்யுவியைக் காட்சிபடுத்தியுள்ளது மிட்சுபிஷி.