21-வது நூற்றாண்டின் வெற்றிகரமான பாஸெஞ்சர் வாகனம் என்று டொயோட்டா இனோவாவைச் சொல்லலாம். ஏனெனில், இந்த கார் விற்பனையில் இருந்த 10 ஆண்டுகளில், எந்த எம்பிவி காராலும் இதனை வீழ்த்த முடியவில்லை. அதேசமயத்தில், இனோவாவின் விலை அதிகரித்துக்கொண்டே இருந்தது என்றாலும், இதற்கான ரசிகர் வட்டமும் அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு காரின் அடுத்த தலைமுறை வாகனத்தை, பழைய வாகனத்தின் பலங்களுடன் காலத்துக்கு ஏற்ற புதிய அம்சங்களைச் சேர்த்துத் தயாரிப்பது என்பது மிகப் பெரிய சவால். ஆனால், அதை டொயோட்டாவின் இன்ஜினீயர்கள் குழு சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். பிரீமியம் டிஸைன், தரமான கேபின், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என அசத்தலாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இனோவா க்ரிஸ்டா, லக்ஸுரி எம்பிவி எனும் செக்மென்ட்டையே புதிதாக ஆரம்பித்திருக்கிறது.

இந்த கார் அறிமுகமான புதிதில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட டாப் வேரியன்ட்கள்தான் நிறைய புக் செய்யப்பட்டன. மேலும், அதிக அளவில் விற்பனையாகும் டாப்-10 பட்டியலில் இருந்த விலை அதிகமான காரும் இதுதான். இதையெல்லாம் பார்க்கும்போது, மக்கள் இதற்கு ஆரவாரமான வரவேற்பை அளித்துள்ளது தெளிவாகிறது. எனவேதான் பவர்ஃபுல்லான 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி இடம்பெற்றுள்ள மாடலை டெஸ்ட் டிரைவ் செய்துள்ளோம்.

டிஸைன் & தொழில்நுட்பம்

கார் பார்ப்பதற்கு பழைய இனோவாவையே நினைவுபடுத்தினாலும், ஒவ்வொரு பாடி பேனல்களும் புதிது. காரின் முன்பகுதியில் எஸ்யுவிகளில் இருப்பது போன்ற க்ரோம் கிரில், ஷார்ப்பான புரொஜெக்டர் ஹெட்லைட், V வடிவ பானெட் ஆகியவை சேர்ந்து, இனோவா க்ரிஸ்டாவுக்கு கெத்தான தோற்றத்தைத் தருகின்றன. பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் பாடி லைன்கள் மற்றும் D-பில்லர், காரின் ஸ்டைலிங்கை உயர்த்துகின்றன. பின்பக்கத்தில் இருக்கும் L-வடிவ டெயில் லைட், காரின் அகலத்தை உணர்த்துகிறது. பெரிய வீல் ஆர்ச்சுகளுக்குக் கீழே இருக்கும் 17 இன்ச் அலாய் வீல்கள், காரின் தோற்றத்துடன் பொருத்துகின்றன.

புதிய இனோவா க்ரிஸ்டா பார்ப்பதற்கு மாடர்ன் ஆகவும், ஸ்மார்ட் ஆகவும் தெரிந்தாலும், மெக்கானிக்கலாகப் பழைய காரைப்போலவே இருக்கிறது. தடிமனான ட்யூபுலர் செக்ஷன்களைக்கொண்ட லேடர் சேஸி மற்றும் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் அமைப்பு ஆகியவற்றை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் பழைய காரில் இருந்தது போன்றதுதான் என்றாலும், அவை ஓட்டுதலை முன்னேற்றும் வகையில் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. பழைய இனோவாவுடன் ஒப்பிடும்போது, புதிய இனோவா க்ரிஸ்டாவின் வீல்பேஸில் மாற்றம் இல்லாவிட்டாலும், நீளம் மற்றும் அகலம் அதிகரித்திருக்கிறது. எனவே, பழைய காரைவிட 170 கிலோ எடை அதிகமாகி இருக்கிறது.

கேபின் & சிறப்பம்சங்கள்

ஒரு பிரீமியம் காரின் கேபின் எப்படி இருக்குமோ, அப்படி கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அற்புதமான டிஸைனைக்கொண்டிருக்கும் கறுப்பு வண்ண டேஷ்போர்டில் செய்யப்பட்டுள்ள மர வேலைப்பாடுகள் ரசனைக்குரியதாக இருக்கின்றன. சென்டர் கன்ஸோல், டோர் பேட், சைடு வென்ட்கள் ஆகிய இடங்களில் இருக்கும் சில்வர் ஃபினிஷ், க்ளாஸ் ரகம். Tan லெதர் இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. LED மூட் லைட்டிங்கை, இரவு நேரப் பயணத்தில் ரசிக்கலாம். ஆனால், டேஷ்போர்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பளபளப்பான பிளாஸ்டிக்குகள், இறுக்கமான ரகத்தைச் சேர்ந்தவை என்பது மைனஸ்.

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, நேவிகேஷன், ரிவர்ஸ் கேமரா உடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், சென்டர் கன்ஸோலில் மல்ட்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, 7 காற்றுப் பைகள், எக்கோ - பவர் மோடுகள் என ஒரு லக்ஸுரி காரில் இருக்கும் அத்தனை சிறப்பம்சங்களும் புதிய இனோவா க்ரிஸ்டாவில் இருக்கின்றன. (காரின் ட்ரிப் கம்ப்யூட்டரில், நாம் பயன்படுத்திய எரிபொருளின் அளவுடன், அதன் ரூபாய் மதிப்பும் தெரிவது ப்ளஸ்.) பவர் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க இருக்கைகள் பெரிதாக இருப்பதுடன், போதுமான சப்போர்ட்டையும் அளிக்கின்றன.

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோபோல, முன்பக்க இருக்கைகளை பின்னால் இருப்பவர் நகர்த்த முடியும். மேலும், சீட்டுகளின் பின்னே இருக்கும் மடிக்கக்கூடிய ட்ரே பயனுள்ளதாக இருக்கிறது. அதிக லெக்ரூம் காரணமாக, நடுவரிசை இருக்கைகளின் சொகுசு அதிகரித்துள்ளதுடன், கடைசி வரிசை இருக்கையையும் எளிதாகச் சென்றடைய முடிகிறது. தவிர, இங்கும் இடவசதியில் முன்னேற்றம் தெரிகிறது. 20 பாட்டில் ஹோல்டர்கள் இருந்தாலும், ஒரே ஒரு யுஎஸ்பி ஸ்லாட் இருப்பது நெருடல். இரட்டை க்ளோவ் பாக்ஸ் இருந்தாலும், அவை அளவில் சிறிதாக இருக்கின்றன. காரின் அதிக நீளம், பூட் ஸ்பேஸுக்கு உதவியிருக்கிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த காரில் இருந்தது, டொயோட்டாவின் புதிய GD சீரிஸ் இன்ஜின்களுள் ஒன்றான 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்தான். DOHC, 16 வால்வுகள், சிறிய ஆனால் வேகமான டர்போ சார்ஜர், இன்ஜினின் ஆயுட்காலம் வரை இயங்கக்கூடிய டைமிங் செயின் என பழைய இனோவாவைவிட அசத்தலாக இருக்கிறது புதிய இனோவா க்ரிஸ்டாவின் இன்ஜின். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டும் கிடைக்கும் இந்த இன்ஜினில் நார்மல், எக்கோ, ஸ்போர்ட் ஆகிய டிரைவிங் மோடுகள் உள்ளன. இவை காரின் ஃப்யூலிங் மற்றும் ஏ.சியின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன.

மூன்று டிரைவிங் மோடிலும், இன்ஜின் ரெட்லைன் அடிக்க முடிகிறது என்றாலும், எவ்வாறு அதிக ஆர்பிஎம்மை அவை எட்டுகின்றன என்பதில் வித்தியாசம் இருக்கிறது. ஷார்ட் கியரிங் கொண்ட பழைய இனோவா, ஆரம்ப வேகங்களிலும் ரெஸ்பான்ஸிவாக இருக்கக்கூடிய தன்மை கொண்டது. ஆனால், டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸில் பின்தங்கியிருந்தது. ஆனால், அதே ஷார்ட் கியரிங் காரணமாக, அதிக வேகத்தில் செல்லும்போது காரின் மைலேஜ் சரிந்தது. புதிய இனோவா க்ரிஸ்டாவின் எடை அதிகரித்திருந்தாலும், 0 - 100 கி.மீ வேகத்தை பழைய காரைவிட 6 விநாடிகள் முன்னதாக, அதாவது 11.46 விநாடிகளிலேயே எட்டிவிடுவது ஆச்சரியம்.

பவர் மோடில் வைத்து ஓட்டும்போது, அதிகப்படியான ஆக்ஸிலரேஷன் கொடுக்கும்போது பர்ன்-அவுட் சாகசம் செய்ய முடிகிறது! காரில் இருக்கும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் இயக்கம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், குறைவான வேகத்தில் இருந்து அதிரடியாக வேகத்தை அதிகரித்தால், கியர்கள் உடனடியாக மாறத் தயங்குகின்றன. நார்மல் மோடில் கியர்கள் விரைவாக அப்ஷிஃப்ட் ஆவதால், ஸ்போர்ட் மோடில் ஓட்டுவது சிறப்பான அனுபவமாக இருக்கும். பேடில் ஷிஃப்ட்டர்கள் இல்லையென்றாலும், மேனுவலாக கியர் மாற்ற முடிவது ஆறுதல். கியர்பாக்ஸிலும் நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோடு இருப்பது வியப்பளிக்கிறது. எனவே, எந்தவித செட்டிங்கிலும் நமது விருப்பத்துக்கு ஏற்ப காரை ஓட்டலாம் என்பது வரப்பிரசாதம். ஸ்போர்ட் டிரைவிங் மோடு - நார்மல் கியர்பாக்ஸ் மோடு எனும் செட்டிங்கில் ஓட்டும்போது, இனோவா க்ரிஸ்டாவின் செயல்திறன் மனநிறைவைத் தரும்படி இருந்தது. ஆனால், அதிக ஆர்பிஎம்களில் இன்ஜின் அதிக சத்தம் போடுவது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஸ்போர்ட் மோடில்தான் காரின் உச்சகட்ட பெர்ஃபாமென்ஸை அனுபவிக்க முடியும். எதிர்பார்த்தபடி எக்கோ மோடில் காரின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் டல்லாக இருக்கிறது; நார்மல் மோடு பேலன்ஸ்ட்டாக இருக்கிறது.

ஓட்டுதல் தரம் & கையாளுமை

சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பழைய காரைவிடப் புதிய காரின் ஓட்டுதல் தரம் முன்னேறியிருப்பதாக டொயோட்டா கூறியுள்ளது. அதற்காக, ஒரு செடான் காரின் ஓட்டுதலுடன் இதனை ஒப்பிட முடியாது. மோசமான சாலைகளில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை, சஸ்பென்ஷன் சிறப்பாக உள்வாங்கிக் கொள்கிறது. ஆனால், சீரற்ற சாலைகளில் செல்லும்போது, சாலையின் தன்மையை காருக்குள்ளே உணர முடிகிறது.

குறைவான வேகங்களில் காரின் ஸ்டீயரிங் எடை அதிகமாக இருக்கிறது; அதிக வேகத்தில் செல்லும்போது, ஸ்டீயரிங்கின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. திருப்பங்களில் செல்லும்போது பாடி ரோல் இருப்பது, காரில் இருக்கும் பயணிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது. காரின் அதிக எடை, அதிக வேகங்களில் நிலைத்தன்மைக்கு மட்டும் உதவிகரமாக இருக்கிறது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ், வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால், சாய்வான பகுதிகள் நிறைந்த மலைச் சாலைகளில் காரை நம்பிக்கையாக ஓட்ட முடிகிறது. எக்கோ மோடில் வைத்து காரை ஓட்டும்போது, நகருக்குள் லிட்டருக்கு 9.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 13.2 கி.மீ மைலேஜ் தருகிறது புதிய இனோவா க்ரிஸ்டா ஆட்டோமேட்டிக்.

தீர்ப்பு

பழைய இனோவாவுடன் ஒப்பிடும்போது இடவசதி, சொகுசு, தரம், பிராக்டிக்கல் அம்சங்கள் ஆகியவற்றில் கணிசமாக முன்னேறியிருக்கும் புதிய இனோவா க்ரிஸ்டா, பவர் மற்றும் சிறப்பம்சங்களிலும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆனால், பழைய காரைவிட எடை அதிகரித்துள்ளதால், புதிய காரின் கையாளுமை முன்பைப் போல எளிதாக இல்லை. எனவே, நகருக்குள் இந்த காரை ஓட்டுவது சற்று சிரமமாக இருக்கலாம். மேலும், இன்ஜின் சத்தம் பெரிய மைனஸ். ஒரு பிரீமியம் எஸ்யுவி அல்லது செடான் வாங்கக்கூடிய விலையில் புதிய இனோவா க்ரிஸ்டாவை பொசிஷன் செய்துள்ளது டொயோட்டா (2.8 Z - 25.88 லட்சம், சென்னை ஆன் ரோடு).

ஆனால், குடும்பம் அல்லது நண்பர்களுடன் சொகுசாகப் பயணிக்க வேண்டும் என்றால், இதுவே பெஸ்ட் சாய்ஸ் எனத் தோன்றுகிறது. டொயோட்டாவின் நம்பகத்தன்மை மற்றும் ரீ-சேல் மதிப்பு ஆகியவை, அதற்கு உறுதுணையாக இருக்கின்றன.