இத்தாலியர்கள், கவர்ச்சியான வாகனங்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்றவர்கள். அந்த நாட்டைச் சேர்ந்த ஏப்ரிலியா தயாரிக்கும் பைக்குகள் வேகத்திலும், தொழில்நுட்பத்திலும் சொல்லி அடிப்பவை. எனவே, பணக்கார ஆட்டொமொபைல் ஆர்வலர்கள் மட்டுமே அதனை வாங்கக்கூடிய நிலை இதுவரை. தற்போது, SR 150 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக, இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. எப்படி இருக்கிறது அனைவருக்குமான ஏப்ரிலியா?

டிஸைன் & சிறப்பம்சங்கள்

டிஸைன்படி பார்த்தால், SR150 ஒரு ஸ்கூட்டர்தான். இருந்தாலும், ஏப்ரிலியா எவ்வாறு அதனை

அணுகியிருக்கிறது என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. கூர்மையான அலகை நினைவுப்
படுத்தும் முன்பக்கத்தில், இரட்டை ஹெட்லைட்ஸ் அழகாக பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. இது ஹேண்டில்பாரில் இல்லாமல் கீழே இருப்பதால், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஷார்ப்பான பிளாஸ்டிக் பாடி பேனல்களில் செய்யப்பட்டுள்ள ரேஸிங்கான கிராஃபிக்ஸ், SR150-ன் ஸ்போர்ட்டியான லுக்குக்குத் துணை நிற்கிறது. 14 இன்ச் அலாய் வீல்களில் பொருத்தப்பட்டுள்ள அகலமான டயர்கள், ஸ்கூட்டருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன. சுருக்கமாகச் சொல்வது என்றால், சாலையில் செல்லும் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்படி இருக்கிறது SR150. ஸ்கூட்டரில் உட்காரும்போது, உயரம் அதிகமானவர்களுக்கும் ஏற்ற ரைடிங் பொசிஷன் கிடைப்பது சொகுசாக இருந்தாலும், இடநெருக்கடி இருக்கிறதோ என்ற உணர்வு எழுகிறது. பிரேக் லாக் க்ளாம்ப் இல்லாதது, டிஜிட்டல் மீட்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருப்பது, பிளாஸ்டிக் தரம் ஆகியவை SR150 ஒரு பட்ஜெட் ஸ்கூட்டர் என்பதை நினைவுபடுத்துகிறது.

மேலும், சீட்டுக்கு அடியில் இருக்கும் இடத்துக்கு LED விளக்கு இல்லை. பெட்ரோல் டேங்க் மற்றும் பூட்டை ஒரே இடத்தில் இருந்து திறக்க முடியாது. USB சார்ஜிங் பாயின்ட்டும் இல்லை. பல 110சிசி ஸ்கூட்டர்களில் இருக்கும் சிறப்பம்சங்கள்கூட இதில் இல்லை. 6.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருப்பது மற்றும் USB சார்ஜிங் பாயின்ட்டை ஆக்சஸரீஸில் பெற முடியும் என்பது ஆறுதல். சீட்டுக்கு அடியில், Open Face ஹெல்மெட் வைப்பதற்கான அளவே இடம் இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான சைடு ஸ்டாண்டை, Compulsory Accessary ஆக சேர்த்திருக்கிறார்கள்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ஏப்ரிலியா SR150 ஸ்கூட்டரில், வெஸ்பா 150-ல் இருக்கும் அதே 3 வால்வு, 154.8 சிசி இன்ஜின்தான். ஆனால், SR150-க்குப் பொருந்தும்விதமாக, வெஸ்பாவில் இருப்பதைவிடப் பெரிய கிராங்க் கேஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பெரிய வீல்களுக்கு பவரைச் சீராக வெளிப்படுத்தும் விதத்தில் CVT கியர்பாக்ஸ் ரீ-ட்யூன் செய்யப்பட்டுள்ளது. வெஸ்பாவைப் போலவே 11.4bhp பவர் மற்றும் 1.15kgm டார்க்கை வெளிப்படுத்தும் SR150, இந்தியாவின் வேகமான ஸ்கூட்டராக ஏப்ரிலியா இருக்க வேண்டும் என்பதற்காக, பொறியாளர்கள் நன்கு உழைத்திருக்கிறார்கள். மெட்டல் பாடியைக்கொண்ட வெஸ்பாவைவிட, பிளாஸ்டிக் பாடி பேனல்களைக்கொண்ட ஏப்ரிலியாவின் எடை குறைவு என்பதால், 80 கி.மீ வேகத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ எட்டுகிறது SR150. ஸ்பீடோ மீட்டர் முள் 100 கி.மீ-யைத் தாண்டும்போது எழும் புன்சிரிப்பை அடக்க முடியவில்லை. துல்லியமான பவர் டெலிவரி காரணமாக, ஆரம்ப வேகங்களிலும் இதன் செயல்பாடு சூப்பர். ஆனால், இந்த ஸ்கூட்டர் ஐடிலிங்கில் இருக்கும்போது, ஹேண்டில்பாரில் அதிர்வுகள் தென்படுகிறது. அதேபோல் எக்ஸாஸ்ட் சத்தம் ஸ்போர்ட்டியாக இல்லை.

ஓட்டுதல் தரம் & கையாளுமை

வெஸ்பாவின் தனித்தன்மையான மோனோகாக் சேஸியுடன் ஒப்பிடும்போது, ஏப்ரிலியாவின் ட்யூப்லர் அண்டர்போன் சேஸி சிம்பிளானதுதான். ஆனால், வெஸ்பாவில் இல்லாத டெலிஸ்கோபிக் ஃபோர்க் SR150-யில் இருப்பதுடன், தடிமனான 120/70 R14 டயர்கள் இருப்பது மிகப் பெரிய பலம். இதன் முன்பக்கம் 220மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கம் 140மிமீ டிரம் பிரேக்குகள் உள்ளன. டிஸ்க் பிரேக்கின் செயல்பாடு அருமையாக இருக்கிறது. இதனால், எந்த வேகத்தில் சென்றாலும் பிரேக் பிடித்தால், ஸ்கூட்டரை உடனடியாக நிறுத்தக்கூடிய நம்பிக்கை ஓட்டுநருக்குக் கிடைக்கிறது. இதற்கு பெரிய வீல்கள் மற்றும் கிரிப்பான டயர்கள் உறுதுணையாக இருக்கின்றன. மேலும், திருப்பங்களில் அதிக வேகத்தில் தைரியமாகச் செல்வதற்கான உத்வேகத்தையும் இவை அளிக்கின்றன. ஸ்கூட்டரில் இரண்டு பேராகச் செல்லும்போதும், அதிக வேகத்திலும் இதன் நிலைத்தன்மை அசத்தல். சஸ்பென்ஷன் செட் செய்யப்பட்ட விதம் மற்றும் பெரிய சக்கரங்கள் சேர்ந்து, ஒரு பைக் ஓட்டும் அனுபவத்தைத் தருகிறது. ஆனால், கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, சஸ்பென்ஷனின் இறுக்கத்தை நம்மால் உணர முடிகிறது.

முதல் தீர்ப்பு

ஒரு வழக்கமான ஸ்கூட்டர் வாங்கு பவரை, ஏப்ரிலியா SR150 கவராது. ஏனெனில், சிறப்பம்சங்கள், சொகுசான ஓட்டுதல் தரம், இடவசதி, பைக்கின் விலையை நெருங்கக்கூடிய விலை என ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன. ஆனால், ஒரு ஸ்கூட்டரில் காணக் கிடைக்காத பெர்ஃபாமென்ஸ், கையாளுமை மற்றும் டிஸைனைக்கொண்டிருக்கும் ஏப்ரிலியா SR-150 உடன் 150சிசி பைக்குகளை ஒப்பிடும்போது, கொடுக்கும் பணத்துக்கு மதிப்பான வாகனமாக இருக்கிறது. சுமார் 75,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கும் இந்த ஸ்கூட்டரை Paytm தளத்தில் புக் செய்தால், 2,000 ரூபாய் டிஸ்கவுன்ட் உண்டு என்று அறிவித்திருக்கிறது ஏப்ரிலியா. ஒரு பைக்குக்கான அத்தனை குணாதிசயங்களைக்கொண்டிருக்கும் SR150-யை, ஈஸியாக ஓட்ட முடியும் என்பது ப்ளஸ். ஆக, இந்திய இளைஞர்களை ஒட்டுமொத்தமாக தன்வசம் ஈர்க்கக்கூடிய ஒரு தயாரிப்பு களமிறங்கிவிட்டது என்று சொல்லலாம்.