ஒரு இன்ஜினின் பயனுறுதிறனை(Efficiency) - செய்யப்பட்ட வேலைக்கும், கொடுக்கப்பட்ட வெப்ப ஆற்றலுக்குமான விகிதமாகக் கணக்கிடலாம்.

பயனுறுதிறன் (Efficiency)

இன்ஜினில் குறிப்பிட்ட அளவு எரிபொருளை எரிப்பதால் கிடைக்க வேண்டிய மொத்த ஆற்றலும், நமக்குத் தேவையான இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறதா என்றால், இல்லை. உள்ளே கொடுக்கப்படும் ஆற்றலில் 25 முதல் 30 சதவிகிதம் வரையான ஆற்றலே, வாகனத்தைச் செலுத்துவதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. மொத்த ஆற்றலும் எங்கே, எப்படிச் செலவாகிறது?

இன்ஜின் இழப்புகள் 62.4 சதவிகித எரிபொருளின் ஆற்றல் முழுவதும் இன்ஜினிலேயே செலவாகிறது. இன்ஜின் பாகங்களின் உராய்வு, காற்றினை உள்ளே - வெளியே பம்ப் செய்வதற்குத் தேவையான ஆற்றல், வீணாக வெளியேறும் வெப்பம் எனப் பலவிதங்களில் எரிபொருளின் ஆற்றல் வீணாகிறது. நவீன இன்ஜின் தொழில்நுட்பங்களான வேரியபிள் வால்வ் டைமிங் (VVT), டர்போ சார்ஜிங், சிலிண்டர் டீ-ஆக்டிவேஷன் (Deactivation) போன்ற முறைகளினால் இந்த இழப்புகள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜின்களைவிட டீசல் இன்ஜின்களில் இந்த ஆற்றல் இழப்பின் அளவு குறைவுதான். டீசல் இன்ஜினின் நவீனத் தொழில்நுட்பங்களினால் இந்த இழப்புகள் மேலும் கட்டுப்படுத்தப் படுகின்றன.

ஐடிலிங் இழப்புகள் (Idling losses)

நகரங்களில் கார் ஓட்டும் போது, டிராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, வாகனத்தை ஐடிலிங்கில் வைத்திருக்கும்போது குறிப்பிடத்தகுந்த அளவு ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. இவை 17.2 சதவிதம் என அளவிடப்படுகிறது. சமீபத்திய கார்களில், காரை நிறுத்தும்போது இன்ஜின் ஆஃப் ஆகிவிடும்படியும், தேவைப்படும் நேரத்தில் ஆக்ஸிலேட்டர்/கிளட்ச்சை அழுத்தினால், உடனே இன்ஜின் இயங்கும்படியும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இதனால், இந்த ஐடிலிங் இழப்புகளைக் குறைக்கலாம்.

ஆக்சஸரீஸ் (Accessories)

ஏர் கண்டிஷன், பவர் ஸ்டீயரிங், ரேடியேட்டர், விண்ட் ஷீல்ட் வைப்பர்ஸ் போன்ற அத்தியாவசிய உபகரணங்களின் இயக்கங்களுக்காக, 2.2 சதவிகித ஆற்றல் செலவழிக்கப்படுகிறது. பயனுள்ள ஆல்டர்னேட்டர் அமைப்புகள், பவர் ஸ்டீயரிங் பம்புகளை உபயோகிப்பதன் மூலம், எரிபொருளின் பயனுறுதிறனை ஒரு சதவிகிதம் வரை உயர்த்தலாம்.

டிரைவ்லைன் இழப்புகள் (Driveline losses)

இன்ஜின் ஆற்றல், டிரான்ஸ்மிஷன் வழியாகக் கடத்தப்படுகையில், இவ்வகை இழப்புகள் 5.6 சதவிகிதம் வரை ஏற்படுகின்றன. சமீபத்திய நவீனத் தொழிற்நுட்பங்களான ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (சுருக்கமாக AMT), டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) மற்றும் CVT (Continuously Variable Transmission) ஆகியவற்றின் வரவினால் இவ்வகை இழப்புகள் குறைக்கப்படுகின்றன.

ஏரோடைனமிக் ட்ராக் (Aerodynamic Drag)

குறிப்பிட்ட அளவு ஆற்றல், வாகனம் முன்செல்லும்போது எதிர்ப்படும் காற்றை விலக்கி வழியேற்படுத்திக் கொடுத்தலில் செலவிடப்படுகிறது. குறைவான வேகத்தில் செல்லும்போது குறைந்த ஆற்றலும், அதிகவேகத்தில் செல்லும்போது மிகஅதிக ஆற்றலும் செலவிடப்படுகின்றன. இந்த ஏரோடைனமிக் ட்ராக், காற்று எளிதாக விலகிச் செல்லும்படி லாவகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் குறைவாக இருக்கும். இவ்வகை இழப்புகள் 2.6 சதவிகிதம் வரை இருக்கும்.

ரோலிங் ரெஸிஸ்டென்ஸ் (Rolling Resistance)

இது வாகனத்தை டயர்கள் மூலம் முன்னே நகர்த்திச் செலுத்துவதற்குத் தேவைப்படும் ஆற்றலாகும். இது டயர்கள் தாங்கும் வாகனத்தின் பளுவுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். இவை பொதுவாக 4.2 சதவிகித அளவுகளில் இருக்கும். இவ்வகை இழப்புகளை, டயர்களை நவீனமாக வடிவமைப்பதன் மூலம் குறைக்கலாம். டயர் ட்ரெட் மற்றும் ஷோல்டர் (Tyre tread and shoulder) வடிவமைப்பு, டயர் பெல்ட் மெட்டீரியல் தேர்வு மற்றும் வடிவமைப்பு போன்றவை முக்கியப் பங்கு வகிக்கும்.

இனர்ஷியா மற்றும் ப்ரேக்கிங் இழப்புகள் (Inertia and Braking Losses)

வாகனத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு வாகனத்தின் நிலைமத்தைத் (Inertia) தாண்டிய ஆற்றல் தேவைப்படும். இது, வாகனத்தின் எடைக்கு நேர் விகிதத்தில் இருக்கும். குறைவான எடை கொண்ட வாகனத்தில் இந்த இழப்புகள் குறைவாக இருக்கும். குறைந்த எடை கொண்ட மெட்டீரியல்களை உபயோகித்து இந்த இழப்புகளைக் குறைக்கலாம். இவை போக பிரேக்கை அழுத்துவதால், இனர்ஷியாவைத் தாண்டுவதற்குச் செலுத்திய ஆற்றல் மறைந்துவிடும். மறுபடியும் வாகனத்தை முன்னோக்கி நகர்த்த இந்த ஆற்றல் மறுபடியும் தேவைப்படும். இவை 5.8 சதவிகிதமாகும்.

இந்த இழப்புகள் எல்லாம் போக, மீதமிருக்கும் ஆற்றல்தான் வாகனத்தின் வேகம், சக்தியைத் தீர்மானிக்கத் தேவையான ஆற்றலாகும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சதவிகிதக் கணக்கு, வாகனம் நகரத்தில் செல்வதற்கும், கிராமத்தில் செல்வதற்கும் ஏற்ப சிறிது மாறுபடும். எவ்வளவு தூரம் இந்த இழப்புகளைக் குறைக்கிறோமோ, அந்தளவுக்கு வாகனத்தின் எரிபொருள் திறன் சிறப்பாக உபயோகிக்கப்படும். பொதுவாகச் சொல்வதானால், வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும். மைலேஜை அதிகரிக்கத்தான் எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களும், குறைவான எடைகொண்ட, அதே சமயம் வலுவான கார் மற்றும் உதிரிப் பாகங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

- (எந்திரன் பேசுவான்)