Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

Published:Updated:
மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

வெற்றிக் கூட்டணியின் வரலாற்றைச் சொல்லும் புத்தகம்!

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை மிகச் சிறப்பாக இருப்பதற்கு டிவிஎஸ் மற்றும் அசோக் லேலாண்ட் ஆகிய நிறுவனங்களின் வெற்றிகரமான கூட்டணியும் ஒரு முக்கியக் காரணம். இந்த நிறுவனங்கள் மூலமாக தமிழகத்தின் சாலைப் போக்குவரத்துச் சரித்திரத்தை எடுத்துச் சொல்லும் ‘காலச் சக்கரம்’ (விகடன் பிரசுர வெளியீடு) என்கிற புத்தக வெளியீடு நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.

மோட்டார் நியூஸ்

‘‘தொழில் நுட்பங்கள் மாறினாலும், எங்களுக்கும் வாடிக்கையாளர்களுடனான நெருங்கிய உறவு என்றென்றும் தொடரும்’’ என்று சொல்லி நெக்குறுகினார் டிவிஎஸ் அண்டு சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்ஆர்.தினேஷ், சிறப்புரை ஆற்றிய சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, ‘‘எங்கள் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த சிறு விபத்தும் நடக்கவில்லை. இதுபோல, எல்லோரும் கவனமாக இருந்து விபத்துகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தார். ‘‘எங்களுக்குக் கடன் தந்து, எங்களை ஆளாக்கியதுடன், எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டது டிவிஎஸ் நிறுவனம்’’ என்றார் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ஆர்.குமாரசுவாமி.

மோட்டார் நியூஸ்

‘‘அசோக் லேலாண்ட் நிறுவனம் இன்றைக்குத் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் வளரக் காரணம் டிவிஎஸ்தான்’’ என்றார், பஸ் உரிமை யாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தர்மராஜ்.

இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா, ‘‘வாடிக்கையாளர்களின் சேவைக்கு அதிமுக்கியத்துவம் தரும் டிவிஎஸ் நிறுவனத்துடனான எங்கள் உறவு எப்போதும் தொடரும்’’ என்றார்.

இந்தப் புத்தகத்தைப் பிரசுரித்து  வெளியிட்ட விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் உட்பட சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புடன் தொடர்பு உடைய பலரும் இந்த நிகழ்ச்சிக்கு  வந்திருந்தனர். டிவிஎஸ் மற்றும் அசோக் லேலாண்ட் நிறுவனங் களுடான அவர்களுடைய நீண்ட நாள் உறவினை வெளிப்படுத்து வதாக இருந்தது இந்த நிகழ்ச்சி!

- ஏ.ஆர்.குமார்,  படம்: க.பாலாஜி

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

நம்பிக்கை விருதுகள்!

ஆனந்த விகடன் நடத்திய ‘நம்பிக்கை விருதுகள்’ நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் படு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாடா டியாகோ, சென்ற ஆண்டுக்கான ‘சிறந்த கார்’ விருதை வென்றது. இந்த விருதை டாடா மோட்டார்ஸ் சார்பில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த சிங்காரவேலு பெற்றுக் கொண்டார். அதேபோல சென்ற ஆண்டுக்கான சிறந்த பைக்காக, பஜாஜ் நிறுவனத்தின் V15 பைக் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விருதைன் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் குருபிரசாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஆட்டோமொபைல் படிப்பும் வேலை வாய்ப்பும்!

கோவையில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி வளாகத்தில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஆட்டோமொபைல் படிப்பு, வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கத்தை மோட்டார் விகடனுடன் இணைந்து நடத்தியது, இந்தக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை.

மோட்டார் நியூஸ்

கருத்தரங்கில் ஏராளமான பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். ஆட்டோமொபைல் துறையின் சிறப்புகள் குறித்துப் பேசி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார் குமரகுரு கல்லூரியின் முதல்வர் ஆர்.எஸ்.குமார். தொடர்ந்து பேசிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைவர் சிவகுமார், டிசைன் பிரிவு குறித்தும் அதில் உள்ள பல்வேறுவிதமான தொழில் பிரிவுகள் குறித்தும் விளக்கினார். அடுத்துப் பேசிய அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவர் சத்தியசீலன், ஆட்டோமொபைல் துறையின் நவீன மாற்றங்கள், தேவைகள் குறித்துப் பேசினார். இறுதியாகப் பேசிய பாஷ் நிறுவனத்தின் ஹைப்ரிட் பிரிவைச் சேர்ந்த நந்தகுமார், அடுத்துவரவிருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும், ஹைபிரிட் தொழில்நுட்பங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். சுமார் 300-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

BS-IV பஸ் மற்றும் டிரக்குகளைக் களமிறக்கியது பாரத் பென்ஸ்!

கடந்த ஏப்ரல் 1, 2017 முதலாக, இந்தியாவில் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்புடைய வாகனங்களை மட்டுமே அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கேற்ப உலகத் தரத்தில் தயாரிக்கப்பட்ட பஸ் மற்றும் டிரக்குகளைக் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது பாரத் பென்ஸ் நிறுவனம்.

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

ஏ.சி, LED DRL உடனான ஹெட்லைட், டியூப்லெஸ் டயர், அலுமினியம் பாடி, ஏபிஎஸ், ஆன்ட்டி ரோல் பார் உடனான சஸ்பென்ஷன், SCR - AdBlue போன்ற தொழில்நுட்பங்கள் கொண்ட 6.4 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங், 1,00,000 கி.மீ-க்கு ஒருமுறை மாற்றக்கூடிய இன்ஜின் ஆயில் - கியர்பாக்ஸ் ஆயில் ஆகிய வசதிகள், இந்த இரண்டு வாகனங்களுக்கும் பொதுவானதாக இருக்கின்றன.