Published:Updated:

டீசன்ட் டிசையர்!

டீசன்ட் டிசையர்!
பிரீமியம் ஸ்டோரி
டீசன்ட் டிசையர்!

ஃபர்ஸ்ட் லுக் - மாருதி சுஸூகி டிஸையர்ராகுல் சிவகுரு

டீசன்ட் டிசையர்!

ஃபர்ஸ்ட் லுக் - மாருதி சுஸூகி டிஸையர்ராகுல் சிவகுரு

Published:Updated:
டீசன்ட் டிசையர்!
பிரீமியம் ஸ்டோரி
டீசன்ட் டிசையர்!

மூன்றாவது தலைமுறை டிசையர் காம்பேக்ட் செடானின் டெஸ்ட்டிங் பணிகள் முடிந்தன. இதை 2017 மே 16-ம் தேதி களமிறக்கும் முடிவில் இருக்கிறது மாருதி சுஸூகி. இத்தனைக்கும் இந்தியாவில் காம்பேக்ட் செடான்களின் விற்பனை எண்ணிக்கையில் பெரியளவில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், இந்த செக்மென்ட்டின் ராஜாவாகத் தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் முயற்சியாகவே, புதிய டிசையரின் அறிமுகம் பார்க்கப்படுகிறது. இதுவரை 13.81 லட்சம் டிசையர் காம்பேக்ட் செடான் கார்களை விற்பனை செய்துள்ள மாருதி சுஸூகி, காம்பேக்ட் செடானின் 50 சதவிகித மார்க்கெட் ஷேரைத் தன்வசம் வைத்திருக்கிறது.

டீசன்ட் டிசையர்!

டிசைன்

பழைய காரின் பாக்ஸ் போன்ற டிசைனுடன் ஒப்பிடும்போது, புதிய டிசையரின் வளைவு நெளிவுகள் நிறைந்த தோற்றத்தில் (நீளம்: 3,995 மிமீ; உயரம்: 1,515 மிமீ; அகலம்: 1,735 மிமீ) ஒரு கவர்ச்சியும், முழுமையும் இருக்கிறது. இதற்கு முன்பைவிட 40 மிமீ கூடுதல் நீளம், 40 மிமீ குறைவான உயரம், 20 மிமீ கூடுதல் வீல்பேஸ், 15 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் காரணமாகச் சொல்லலாம். எனவே, டாக்ஸி மார்க்கெட்டைவிட சொந்தப் பயன்பாட்டுக்கான காராக டிசையர் காம்பேக்ட் செடானை மாருதி சுஸூகி பொசிஷன் செய்திருப்பது தெரிகிறது. பானெட் - வீல் ஆர்ச் - விண்ட் ஸ்க்ரீன் - ரூஃப் லைன் - பூட் எனப் புதிய டிசையரின் பக்கவாட்டுத் தோற்றமும் முன்பைவிட நீட்டாகவும், பேலன்ஸ்டாகவும் இருக்கிறது. அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாலோ என்னவோ, DRL உடனான புரொஜெக்டர் ஹெட்லைட் - அறுகோண வடிவ கிரில் - முன்பக்க ஃபெண்டர் ஆகியவற்றில் அதன் தாக்கம் தெரிகிறது. மேலும் கிரில், ஹெட்லைட், பனி விளக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில், க்ரோம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கிரில் டிசைனுடன் ஒப்பிடும்போது, முன்பக்க ஏர் டேமின் டிசைன் வழக்கமாகத்தான் இருக்கிறது. தவிர, காரின் பின்பகுதி, C-பில்லர் மற்றும் பூட் பகுதியுடன் முன்பைவிட அழகாகப் பொருந்தியுள்ளது. டெயில் கேட்டில் புதிதாக லிப் ஸ்பாய்லர் இருப்பதுடன், டெயில் லைட்டில் LED பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸும் முன்பைவிட 7 மிமீ குறைந்து, 163 மிமீயாக மாறியுள்ளது.

டீசன்ட் டிசையர்!

கேபின்

பெலினோ, இக்னிஸ் மற்றும் புதிய ஸ்விஃப்ட் போன்ற எடை குறைவான கார்கள் அனைத்துமே, திடமான ஸ்டீலால் தயாரிக்கப்படும் HearTect பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகின்றன. அதுபோலத்தான் டிசையரும் தயாரிக்கப்பட உள்ளது. எனவே, டிசையரின் முன்பக்கத்தைப் போல, டேஷ்போர்டிலும் ஸ்விஃப்ட்டின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கன்ட்ரோல்களுடன் கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், சென்டர் கன்ஸோல், க்ளோவ் பாக்ஸ், பக்கவாட்டு ஏ.சி வென்ட்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ -  ஆப்பிள் கார் ப்ளே - மிரர் லிங்க் உடனான 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், புதிய ஸ்விஃப்ட்டில் இருந்த வட்ட வடிவ தீம் இங்கே பின்பற்றப்படவில்லை. எனவே, செவ்வக வடிவில் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சென்டர் கன்ஸோலில் Wedge வடிவ ஏ.சி வென்ட், சதுர வடிவ ஏ.சி கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டில் வுட் ஃபினிஷ் & க்ரோம் வேலைப்பாடுகள், லெதர் சீட்ஸ், கறுப்பு - பீஜ் நிறத்தில் தரமான டூயல் டோன் பிளாஸ்டிக்ஸ் என கணிசமான மாற்றங்கள் தென்படுகின்றன. புதிய டிசையரில் இருக்கக்கூடிய மெலிதான ஆனால், சொகுசான இருக்கைகள் மற்றும் 50 மிமீ கூடுதல் லெக்ரூம் காரணமாக, முன்பைவிட அதிக இடவசதி இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரியர் ஏ.சி வென்ட்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. புதிய டிசையரின் பூட் ஸ்பேஸ், 376 லிட்டர் என்றளவில் இருக்கிறது. இது முன்பைவிட 60 லிட்டர் அதிகம்.

டீசன்ட் டிசையர்!

இன்ஜின் - கியர்பாக்ஸ்

தற்போது விற்பனையில் இருக்கும் டிசையர் காம்பேக்ட் செடானில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்/1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், புதிய டிசையரிலும் தொடர்கின்றன. பழைய காருடன் ஒப்பிடும்போது, புதிய டிசையர் சுமார் 85 கிலோ (பெட்ரோல்) - 105 கிலோ (டீசல்) வரை எடை குறைந்திருக்கிறது. எனவே, முன்பைவிட அதிக பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் கிடைக்கலாம். மேலும், சியாஸ் செடானில் இருப்பதுபோன்ற SHVS சிஸ்டமும், டிசையரில்

டீசன்ட் டிசையர்!

இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்!

2017 மே 16-ம் தேதி, 6 வண்ணங்கள் மற்றும் 8 வேரியன்ட்களில் அறிமுகமாகும் மாருதி சுஸூகியின் டிசையர், ஹோண்டா அமேஸ் - ஹூண்டாய் எக்ஸென்ட் - ஃபோர்டு ஆஸ்பயர் - டாடா ஜெஸ்ட் - ஃபோக்ஸ்வாகன் ஏமியோ ஆகிய காம்பேக்ட் செடான்களுடன் போட்டியிடுகிறது. இதில் ஆரம்ப வேரியன்ட்டைத் தவிர, மற்ற வேரியன்ட்கள் அனைத்திலும் மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகின்றன. மற்ற மாருதி கார்களைப் போலவே, விலை விஷயத்தில் டிசையர் கையைக் கடிக்காமல் இருக்கும். அதாவது, பழைய காரைவிடக் கொஞ்சம் கூடுதல் (6 - 11 லட்ச ரூபாய்) விலையில் வெளிவரப் போகும் டிசையர், பழைய காரைவிட அசத்தலாக இருக்கிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ISOFIX, Pretensioner சீட் பெல்ட் ஆகியவை அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக உள்ளது வரவேற்கத்தக்கது.