Published:Updated:

களமிறங்குகிறது காம்பஸ்!

களமிறங்குகிறது காம்பஸ்!
பிரீமியம் ஸ்டோரி
களமிறங்குகிறது காம்பஸ்!

ஃபர்ஸ்ட் லுக் - ஜீப் காம்பஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

களமிறங்குகிறது காம்பஸ்!

ஃபர்ஸ்ட் லுக் - ஜீப் காம்பஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
களமிறங்குகிறது காம்பஸ்!
பிரீமியம் ஸ்டோரி
களமிறங்குகிறது காம்பஸ்!

லக அளவில் எஸ்யூவி கார்களுக்குப் பிரசித்திபெற்ற ஜீப் நிறுவனத்துக்கு, காம்பஸ் ஒரு முக்கியமான வாகனமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இதுதான் அது இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யவிருக்கும் விலை குறைவான கார்!

டிசைன்

பிஎம்டபிள்யூவின் X1 எஸ்யூவி இருக்கும் அதே சைஸில்தான் காம்பஸ் இருக்கிறது. மினி கிராண்ட் செரோக்கி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் காம்பஸ் எஸ்யூவி, போட்டியாளர்களிடமிருந்து தனித்துத் தெரியக்கூடிய டிசைனைக் கொண்டுள்ளது. பெரிய கிரில், சதுரமான வீல் ஆர்ச், கீழ் நோக்கிச் சரியும் ரூஃப், Shark Fin போன்ற D-பில்லர் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜீப்பின் சிறிய - அகலமான எஸ்யூவியான ரெனிகாடே தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் காம்பஸ் எஸ்யூவி தயாரிக்கப்படுகிறது. ஆனால், அதனுடன் ஒப்பிடும்போது, கூடுதல் இடவசதிக்காக நீளமான வீல்பேஸ் மற்றும் சற்று மாற்றியமைக்கப்பட்ட Independent சஸ்பென்ஷன் ஆகியவை உள்ளன.

களமிறங்குகிறது காம்பஸ்!

கேபின், இடவசதி

இந்தியாவில் தயாரிக்கப்படும் காம்பஸ் எஸ்யூவியின் கேபினை, இதுவரை ஜீப் நிறுவனம் வெளியிடவில்லை.  ஆனால் டூயல் டோன் கலரில், மெட்டல் வேலைப்பாடுகளுடன் அது இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். Mud, Sand, Snow, Rock ஆகிய மோடுகளைக் கொண்டிருக்கும், Select Terrain டயல், ரேஞ்ச்ரோவர் கார்களில் இருப்பதுபோல உள்ளது. இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தைகளிலும் காம்பஸ் கால் பதிக்கிறது என்பதால், இருக்கை சொகுசிலும் கவனம் செலுத்தியிருக்கிறது ஜீப். எனவே, எதிர்பார்த்தபடியே முன்பக்க இருக்கைகளின் இடவசதி, தொடை மற்றும் முதுகுக்கான சப்போர்ட் ஆகியவை அற்புதமாக இருக்கின்றன. பின்பக்க இருக்கைகளும் சரியான உயரத்தில் இருப்பதால், காருக்குள்ளே நுழைவது எளிதாக இருக்கிறது. மேலும், அதிகமான லெக்ரூம் முதுகு சப்போர்ட் என அவை அசத்துகின்றன.

களமிறங்குகிறது காம்பஸ்!

இன்ஜின் - கியர்பாக்ஸ்

பெட்ரோல்/டீசல் என இரு இன்ஜின் ஆப்ஷன்கள் இருந்தாலும், எஸ்யூவிகளில் டீசல் இன்ஜின்தான் மோஸ்ட் வான்டட். காம்பஸ் எஸ்யூவியில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின், 170bhp பவரையும் - 35kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், வருங்காலத்தில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மற்றுமொரு இன்ஜினான 1.4 லிட்டர் MultiAir பெட்ரோல் இன்ஜின், 160bhp பவரையும் - 26kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதுவும் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது என்பதுடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/ 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜினின் சீரான பவர் டெலிவரி மற்றும் மைலேஜுக்கு, கேம் ஷாஃப்ட் மற்றும் வால்வுகளுக்கு இடையே டர்போசார்ஜர் மற்றும் எலெக்ட்ரோ ஹைட்ராலிக் Solenoid, வேரியபிள் வால்வு டைமிங் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்

Sport, Latitude, Limited எனும் மூன்று வேரியன்ட்களில், காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உத்தேசமாக 20 - 25 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம் விலை) களமிறங்க உள்ள காம்பஸ் எஸ்யூவி பிரியர்களுக்கு அற்புதமான பரிசு!