Published:Updated:

எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!

எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!

ஃபேஸ்லிஃப்ட் - ஹூண்டாய் எக்ஸென்ட்தொகுப்பு: தமிழ்த் தென்றல்

எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!

ஃபேஸ்லிஃப்ட் - ஹூண்டாய் எக்ஸென்ட்தொகுப்பு: தமிழ்த் தென்றல்

Published:Updated:
எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!

ரு ஹூண்டாய் கார்... அது கிராண்ட் i10 ஆகவும் இருக்கலாம்; எக்ஸென்ட் ஆகவும் இருக்கலாம். இரண்டுக்கும் முன்பக்கம் எந்த வித்தியாசமும் இருக்காது. நீளத்தை வைத்துத்தான் அது கிராண்ட் i10 ஹேட்ச்பேக்கா அல்லது எக்ஸென்ட் செடானா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இனி அந்தப் பிரச்னை இல்லை. ஆம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எக்ஸென்ட்டின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வந்துவிட்டது. புதிய எக்ஸென்ட்டில் என்னென்ன மாறியிருக்கின்றன?

எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!

வெளியே

மொத்தமாக மாறிவிட்டது எக்ஸென்ட். அறுகோண கிரில், அதிலும் அந்த க்ரோம் ஃபினிஷ் செம போல்டு. கீழ்நோக்கி விழும் அருவியின் தாக்கத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் இதற்கு ‘கேஸ்கேடிங் கிரில்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். கீழே பனி விளக்குகள்; அதற்கு மேலே ஸ்ப்ளிட் DRL புது முயற்சி. ஐரோப்பிய i10 காரின் கட்டுமானத் தரத்தை அடிப்படையாக வைத்துத் தயாராகியிருக்கிறது புதிய எக்ஸென்ட். வீல் பேஸ் அதே 2,425 மிமீதான். ஆனால், சின்ன ஸ்ட்ரெட்சிங் செய்ததாகச் சொல்கிறார்கள். இதனால், பின்பக்கம் லெக் ரூம் அதிகமாகும் என்கிறது ஹூண்டாய்.

மொத்தத்தில், டிசைனே எக்ஸென்ட்டுக்குப் புதிய அடையாளத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பின்பக்கமும் நிறைய மாற்றங்கள். புதிய டெய்ல் லைட்டுகள், ஆடி ஸ்டைல். கொஞ்சம் ஓவரோ என்று தோன்றும். ஆனால், அகலமான பம்பர், காரை கொஞ்சம் ஆஜானுபாகுவாகத்தான் காட்டுகிறது. மற்றபடி 15 இன்ச் டயர்களைத் தவிர, பக்கவாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

உள்ளே

காலத்துக்குத் தகுந்தாற்போல் பெரிய மாற்றம் ஒன்று உள்ளே நடந்திருக்கிறது. குட்டிக் குட்டி கார்கள் எல்லாம் டச் ஸ்க்ரீனில் - அதுவும் பெரிய சைஸில் வந்து கொண்டிருக்க... வசதிகளை அள்ளித் தரும் ஹூண்டாய் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் இருந்ததற்காகப் பாராட்டுகள். ஆம், எக்ஸென்ட்டை இனிமேல் 7 இன்ச் டச் ஸ்க்ரீனில் பார்க்கலாம். அதுவும் காஸ்ட்லியான எலான்ட்ராவில் இருந்த சாஃப்ட்வேர் சிஸ்டம். ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட ஏகப்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகள். பழைய காரில் ரியர்வியூ மிரரில் இருந்த ரிவர்ஸ் கேமரா, இனி டச் ஸ்க்ரீனில் தெரியும். கார் ப்ளே இருப்பது, பாதுகாப்பாகவும் உணரவைக்கும்.

கேபின் தரத்தில் மாற்றமில்லை. ஆனால், ஃபிட் அண்டு ஃபினிஷ் விஷயத்தில் முன்னேற்றம் தெரிகிறது. டேஷ்போர்டு பிரீமியம் கார் போலத் தெரிகிறது. அதிலும் ஸ்டீயரிங் வீலும் கன்ட்ரோல்களும் அருமை. ‘அப்படியே மைக்கை அவர்கிட்ட குடுங்க’ என்று கோபிநாத் சொல்வதுபோல், அதே தரத்தை கியர் லீவருக்கும் பாஸ் பண்ணியிருக்கிறார்கள். க்ரோம், லெதர் மற்றும் ஃப்ளெக்ஸி கிளாஸ் ஃபினிஷிங்கில் கியர் லீவர், பிடிக்கும்போதே ரிச்சாக இருக்கிறது. பின்பக்க சீட் உட்கார வசதியாகவும் உயரமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. பின்பக்கம் ‘ஏஸிவென்ட்’ இருந்தும், லெக்ரூம் குறையவில்லை. ஆனால், மூன்று பேர் வசதியாக உட்கார முடியவில்லை.  சீட் வசதியாக  இருந்தாலும், முதுகுக்கான சப்போர்ட் சாய்மானமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம்.

எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!

இன்ஜின், டிரைவிங்

சில கார்களை தோற்றத்தில் மட்டும் மாற்றிவிட்டு, ‘நல்லாத்தானே இருக்கு’ என்று இன்ஜின் விஷயத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால், இன்ஜின் ட்யூனிங்கிலும் நல்ல மாற்றம் தெரிகிறது எக்ஸென்ட்டிடம். பழைய எக்ஸென்ட்டில் கிராண்ட் i10-ல் இருந்த அதே 1.1 லிட்டர், 3 சிலிண்டர் இன்ஜின் இருந்தது. புதுசில் 1,186 சிசி கொண்ட 3 சிலிண்டர் டீசல் இன்ஜின். பழசைவிட 4 bhpஅதிகம், அதாவது 75bhp பவர். டார்க்கிலும் முன்னேற்றம். பழசு 18.4 kgm; புதுசு 19.0. கியர்பாக்ஸ் அதே 5 ஸ்பீடு மேனுவல்.

இன்ஜினை ஸ்டார்ட் செய்ததும், கியர் லீவரில் லேசான அதிர்வு தெரிந்தது. கீழே ஃப்ளோர் செக் ஷனிலும் படர்ந்து, பெடல்களிலும் இன்ஜினின் இதயத் துடிப்பு தொடர்ந்தது. ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்து 2,000 rpm-ஐக் கடந்ததும் ஒரு ஃபன் கிடைக்கிறது. நிச்சயம் பழைய காரைவிட பெர்ஃபாமென்ஸில் நல்ல முன்னேற்றம். பழைய எக்ஸென்ட் 0 - 100 கி.மீ-யை 18.61 விநாடிகளில் கடக்கும். புதுசு 15.58 விநாடிகள்தான் எடுத்தது. 3,500 rpm-தான் இதன் 'டெட் எண்ட்' போல. அதற்குப் பிறகு எக்ஸென்ட் மந்தமாகிறது. 3,500-க்கு மேல் இன்ஜினில் ‘கல கல’ சத்தம்தான்.

பெட்ரோல் இன்ஜின் இதற்கு நேர் எதிர். இதன் 3 சிலிண்டர், 1.2 லிட்டர் ‘காப்பா’ இன்ஜின் நல்ல ஸ்மூத். கியர்பாக்ஸிலேயே இதுவும் தெரிந்துவிடுகிறது. டீசல் அளவுக்கு அதிர்வுகளெல்லாம் இல்லை. இதில் 5 ஸ்பீடு மேனுவல், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்று இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இது 83 bhpபவரையும், 11.6 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

வசதிகள்

வழக்கம்போல் வசதிகளில் எக்ஸென்ட், எக்ஸலென்ட். பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் கீ, 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் AV சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட், ரிவர்ஸ் கேமரா, ரியர் பார்க்கிங் சென்ஸார், ஏபிஎஸ், இரண்டு காற்றுப்பைகள், ரியர் ஏ.சி வென்ட், பாட்டில் ஹோல்டர்கள், டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட் என்று வசதிகளை அள்ளித் தெளித்திருக்கிறது ஹூண்டாய்.

ஓட்டுதல், கையாளுமை

முன்பக்கம் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட், பின் பக்கம் டார்ஸன் பீம் என்று அதே செட்-அப்தான். ஆனால், ஓட்டுதலில் நல்ல முன்னேற்றம். சஸ்பென்ஷன் ரிங்குகளுக்கு இடையில் நல்ல இடைவெளி இருப்பதால்,

எக்ஸென்ட்... எக்ஸெலன்ட் மாற்றங்கள்!

ஓட்டை ஒடிசலான பகுதிகளில் ஜாலியாகச் செயல்படுகிறது. பழைய காரில் ‘தட் தட்’ என்று தரைகளில் டயர் அடிபடும் சத்தம் இதில் கேட்கவில்லை. ஆனால், படுமோசமான மேடு பள்ளங்களில் சஸ்பென்ஷன் வேலை செய்வது கேட்கவே செய்கிறது. ஸ்டீயரிங்கும் ஹேண்ட்லிங்கும் நைஸ். ஆச்சர்யமாக, கார்னரிங்கில் ஃபன் டு டிரைவ் தெரிகிறது. 407 லிட்டர் பூட் ஸ்பேஸ், செம டூர் அடிக்கலாம்.

பிராக்டிக்கலாகவும் சரி; பிரீமிய மாகவும் சரி - `10 லட்சத்துக்குள் அசத்துகிறது எக்ஸென்ட். ‘A Complete Family Sedan’ என்று ஹூண்டாய் சொல்வதை வழிமொழியலாம்.