Published:Updated:

ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?

ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?
பிரீமியம் ஸ்டோரி
ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் எடிஷன் தொகுப்பு: இரா. கலைச்செல்வன்

ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் எடிஷன் தொகுப்பு: இரா. கலைச்செல்வன்

Published:Updated:
ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?
பிரீமியம் ஸ்டோரி
ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?

‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதைப்போல, பல மாற்றங்களோடு களமிறங்கியுள்ளது புதிய ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் எடிஷன். கறுப்பு நிற ‘ஹனி கோம்ப்’ கிரில், பழைய ஃபிகோவின் க்ரோம் ஃபினிஷிங் இருந்த இடங்களிலெல்லாம் கறுப்பு நிறம், குறிப்பாக காரின் கூரை, இரண்டு பக்க மிரர்கள், அலாய் வீல் ஆகியவற்றில் கறுப்பைக் கொண்டுவந்ததில், ‘தனியொருவனாக’ தனித்து நிற்கிறது புதிய ஃபிகோ ஸ்போர்ட்ஸ்.

காரின் இன்ட்டீரியரிலும்கூட கறுப்பு நிறம் தான். ஸ்டீயரிங் வீல் கவர், சீட், கியர் பூட் போன்றவற்றில் கறுப்பு நிறத்தின் இடையே இருக்கும் மெல்லிய சிகப்பு நிற நூல் தையல்கள் புதுவித அழகைக் கொடுக்கின்றன. ஃபிகோவின் டைட்டானியம் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் மாடலில், EBD சிஸ்டத்தோடு இணைந்த ஏபிஎஸ், முன்பக்கம் இரண்டு காற்றுப்பைகள், எலெக்ட்ரிக் மிரர் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்கள் மாறாமல் அப்படியே இடம் பெற்றிருக்கின்றன. அடிக்கும் வெயிலுக்கு ‘ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்’ வசதிகொண்ட ஏ.சி பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.

ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?

நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 100bhp பவரும் 21.5Kgm டார்க்கும் வெளிப்படுத்துகிறது. அதேசமயம், நான்கு சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 88 bhp பவரும், 11.2Kgm டார்க்கும் வெளிப்படுத்துகிறது. இரண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்தான்; ஆட்டோமேட்டிக் வேரியன்ட் இல்லை.

பழைய ஃபிகோவைவிட 14 கிலோ எடை கூடி 1,055 கிலோவாக நிற்கிறது புதிய ஃபிகோ ஸ்போர்ட்ஸ் எடிஷன். இருந்தும், 95bhp/டன் என்ற பவர் விகிதத்தில் ஒப்பிடும்போது எடை கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. வழக்கமான 175மிமீ டயர்களைவிட பெரிதுபடுத்தப்பட்டு இருக்கும், 195 மிமீ டயர்கள் வளைவுகளில் திரும்பும்போது நல்ல கிரிப் கொடுக்கிறது. கிளட்ச் பிடிப்பது ஒரு பக்கம் கடினமாக இருந்தாலும், ரிலீஸ் செய்யும்போது நல்ல ஸ்ப்ரிங் ஆக்‌ஷன் இருக்கிறது. பிரேக் பெடல்  காலுக்கு கச்சிதமான வசதியைத் தருகிறது.

ஸ்போர்ட்ஸ் ஃபிகோவில் என்ன ஸ்பெஷல்?

ஃபிகோ டைட்டானியத்தைவிட, இந்தப் புதிய ஃபிகோ ஸ்போர்ட்ஸ் 58,000 ரூபாய் கூடுதல் விலைகொண்டிருக்கிறது. விலைக்கேற்ற வகையில் டைட்டானியத்தை விட சிறப்பான ஓட்டுதலைக் கொண்டுள்ளது. ‘ஃபியஸ்டா S மாடலில் இருந்து என்ன மாறுபட்டு இருக்கிறது? அத்தனை வசீகரமானதா இந்த ஃபிகோ ஸ்போர்ட்ஸ்’ போன்ற கேள்விகளுக்குள் போகாமல், மீடியம் பட்ஜெட்டில் ஸ்போர்ட்ஸ் ஃபீலை அனுபவிக்க விரும்புபவர்கள், ஃபிகோ ஸ்போர்ட்ஸைத் தாராளமாக வாங்கலாம்.