Published:Updated:

அப்டேட் ஆல்ட்டிஸ்!

அப்டேட் ஆல்ட்டிஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அப்டேட் ஆல்ட்டிஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

அப்டேட் ஆல்ட்டிஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:
அப்டேட் ஆல்ட்டிஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அப்டேட் ஆல்ட்டிஸ்!

டொயோட்டாவின் கரோலா ஆல்ட்டிஸ், எக்ஸிக்யூட்டிவ் செடான் செக்மென்ட்டின் ராஜாவாக இருக்கும் கார். ஹூண்டாய் எலான்ட்ரா, ஸ்கோடா ஆக்டேவியா போன்றவை களத்தில் இறங்கவும், தன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள அப்டேட்களுடன் வந்திருக்கிறது ஆல்ட்டிஸ்.

கிரில், ஹெட்லைட்ஸ், முன்பக்க பம்பர் ஆகியவை புதிதாகக் கொடுக்கப் பட்டிருந்தாலும், ஆல்ட்டிஸுக்கே உண்டான அடிப்படை டிசைன் மாறவில்லை. பின்பக்கம் புதிய டீட்டெயிலிங் கொண்ட டெயில் லைட்ஸ் மட்டுமே புதுசு.

அப்டேட் ஆல்ட்டிஸ்!

காரின் உள்பக்கத்தில், டேஷ்போர்டு டிசைன் மாறவில்லை. ஆனால், சென்டர் கன்ஸோலின் அமைப்பில் மாற்றங்கள் உள்ளன. சில பாகங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தின் திரை பெரிதாகியிருக்கிறது. ஏ.சி கன்ட்ரோல்கள் புதிது. பக்கவாட்டில் வட்டவடிவில் ஏ.சி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் மவுன்ட்டட் கன்ட்ரோல்ஸும் புதிதாக உள்ளன. பின்பக்கம் 12V சாக்கெட்டுக்குப் பதிலாக, இரண்டு USB போர்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. புது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் டச் ஸ்க்ரீன் ரெஸ்பான்ஸிவ்வாக இருக்கிறது. நேவிகேஷன், மிரர் லிங்க், வாய்ஸ் ரெகக்னிஷன் போன்ற அம்சங்களும் உள்ளன. ஆனால், இனோவா க்ரிஸ்டாவில் இருப்பது போன்ற கச்சிதமான சிஸ்டம் இல்லை. ஆனாலும், இது பயன்படுத்த எளிதாகவே இருக்கிறது. நாம் டெஸ்ட் செய்த VL டாப்  வேரியன்ட்டில் எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ் டபிள் டிரைவர் சீட், க்ரூஸ் கன்ட்ரோல், வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப்ஸ், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், எலெக்ட்ரிக்கல் விங் மிரர்கள், LED ஹெட்லைட்ஸ், ரியர் வியூ கேமரா ஆகிய வசதிகள் உள்ளன.

அப்டேட் ஆல்ட்டிஸ்!

ஆனால், போட்டி கார்களில் உள்ள சன்ரூஃப், 2-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ஆகிய வசதிகள் ஆல்ட்டிஸில் மிஸ்ஸிங்.

பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை 7 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, பிரேக் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகிய வசதிகள் இருக்கின்றன. மெக்கானிக்கலாக காரில் எந்த மாற்றங்களும் இல்லை. நாம் டெஸ்ட் செய்த 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் செம ஸ்மூத். காரின் ஓட்டுதல் தரம் சூப்பர். ஸ்டெபிலிட்டி சீராக இருக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் என்றாலும் புது காரில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கரோலா ஆல்ட்டிஸ் ஒரு நல்ல பேக்கேஜ். டிரைவிங் செய்யப்போவதில்லை... நல்ல, நம்பகமான எக்ஸிக்யூட்டிவ் செடான் வேண்டுமென்றால், கரோலா ஆல்ட்டிஸைத் தேர்ந்தெடுக்கலாம்.