Published:Updated:

வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!

வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!
பிரீமியம் ஸ்டோரி
வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!

ஃபர்ஸ்ட் டிரைவ் - வால்வோ S60 POLESTARகா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!

ஃபர்ஸ்ட் டிரைவ் - வால்வோ S60 POLESTARகா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

Published:Updated:
வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!
பிரீமியம் ஸ்டோரி
வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!

வால்வோ என்றால், பாதுகாப்பு என்ற ஓர் அர்த்தமும் உண்டு. ஏனெனில், இந்த நிறுவனம்தான் பாதுகாப்பு தொடர்பான எல்லா விஷயங்களுக்கும் முன்னோடி. அதாவது, காரில் சீட் பெல்ட் என்ற விஷயத்தைக்கூட முதன்முதலாக அறிமுகம் செய்தது வால்வோதான். X வரிசையில் எஸ்யூவி மாடல்களும், V வரிசையில் ஹேட்ச்பேக் மாடல்களும், S வரிசையில் செடான் மாடல்களும் வால்வோ கார்களில் இருக்கின்றன. சமீபத்தில் செடான் காரில் தனது தெறி பெர்ஃபாமென்ஸ் காரான போல்ஸ்டார் மாடலை அறிமுகம் செய்தது வால்வோ. ஏற்கெனவே S வரிசை செடானில் S60, S90 மாடல்கள் இருந்தாலும், இந்த S60 போல்ஸ்டார் காருக்குத் தனிச் சிறப்பு உண்டு.

வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!

ஸ்வீடனில் இருக்கும் போல்ஸ்டார் ரேஸ் டீம், வால்வோ கார்களை ட்ராக்கு ஏற்ப ட்யூன் செய்துகொண்டிருந்தது. அப்படி டிராக்குக்காக உருவாக்கப்பட்ட அந்த கார்தான் போல்ஸ்டார். வால்வோ காரின் அதிரடி பெர்ஃபாமென்ஸுக்காக மட்டும் உருவான அந்த ரேஸிங் அணி, தனி நிறுவனமானது. கடந்த 2015-ம் ஆண்டு, அந்த நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது வால்வோ. எனவேதான், போல்ஸ்டார் கார் ட்ராக்கில் மட்டுமல்ல... சாலைக்கும் வந்துவிட்டது. கடந்த மாதம் கோவையில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே ரேஸ் ட்ராக்கில், வால்வோ S60 போல்ஸ்டார் காரை டிரைவ் செய்தோம். S60 செடான் காரில், 70 விதமான மாற்றங்கள் செய்யப்பட்ட கார்தான் S60 போல்ஸ்டார். 0 - 100 வேகத்தை எட்ட 4.7 விநாடிகள் போதும். டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ. இதில் இருக்கும் இன்லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 367 bhp சக்தி அளிக்கிறது. டார்க் 47 kgm. இந்த தெறி பெர்ஃபாமென்ஸுக்குக் காரணம், டர்போ சார்ஜர் மட்டுமல்லாமல், சூப்பர் சார்ஜரும் பொருத்தப்பட்டு இருப்பதுதான்.

காரின் முன்பக்க கிரில்லில் இருக்கும் போல்ஸ்டார் பேட்ஜ், இந்த காரைத்   தனித்துக் காட்டுகிறது. ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங், கொலிஷன் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், சிட்டி சேஃப்டி, பார்க் பைலட் அசிஸ்ட் என வாவ் சொல்லவைக்கின்றன. மேலும், பேடில் ஷிஃப்டருடன் கொண்ட 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், இந்த 4 வீல் டிரைவ் காருக்கு செம கூட்டணி. 1,756 கிலோ எடையுள்ள இந்த காரை ஸ்டார்ட்  செய்தால், இன்ஜின் உறுமல் மிரட்டுகிறது. காரணம், இரட்டை எக்ஸாஸ்ட் பைப்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!

ரேஸ் ட்ராக்கில் இருந்த காரில் ஏறி அமர்ந்ததும், காரை ஸ்டார்ட் செய்து முதலில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோலை ஆஃப் செய்தோம். ஏனென்றால், அப்போதுதான் ட்ராக்கில் வித்தை காட்ட முடியும்.

இந்த காரில் லான்ச் கன்ட்ரோல் மற்றும் ஸ்போர்ட்ஸ் + மோடு இருக்கிறது.

கோவை ரேஸ் ட்ராக் அளவில் சிறிதுதான் (2.1 கிமீ) என்றாலும், வளைவு நெளிவுகளுக்குப் பஞ்சம் இல்லை. அதில்தான் S60 போல்ஸ்டார், தான் ஒரு ரேஸ் கார் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்தியது. அதேபோல, 6 பிஸ்டன் கேலிப்பர் கொண்ட 371மிமீ பிரம்போ டிஸ்க் பிரேக்ஸ் செயல்படும் விதமும் அபாரம். ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மோடில் வைத்து ஓட்டினால், ஒரு ரேஸராகிவிட்ட உணர்வு. இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை `52.5 லட்சம் என்று அறிவித்திருக்கிறது வால்வோ. ஆன் ரோடு விலை எப்படியும் `65 லட்ச ரூபாய் வரையாவது ஆகும். இந்த விலைக்கு வேறு தெறி பெர்ஃபாமென்ஸ் கார் இல்லை. எனவே, வால்வோ S60 போல்ஸ்டார் விலை குறைவான பெர்ஃபாமென்ஸ் காராகத் தனித்து நிற்கிறது!