Published:Updated:

ஸ்டைல் லாஜி ரெடி!

ஸ்டைல் லாஜி ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டைல் லாஜி ரெடி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ரெனோ லாஜி ஸ்டெப்வேதொகுப்பு: தமிழ்

ஸ்டைல் லாஜி ரெடி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ரெனோ லாஜி ஸ்டெப்வேதொகுப்பு: தமிழ்

Published:Updated:
ஸ்டைல் லாஜி ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டைல் லாஜி ரெடி!

எஸ்யூவி அல்லது க்ராஸ்ஓவர் ஸ்டைலிங்குக்குதான் இப்போது மார்க்கெட். ரெனோ லாஜி, எம்யூவிதான். இப்போது கிளாடிங்குகள், 16 இன்ச் ‘பனாச்சே’ அலாய் வீல், புதிய பம்பர்கள் என்று எஸ்யூவிபோல் ஒரு ஸ்டெப் மேலே போய் மிரட்டுகிறது. இதற்குப் பெயர் ‘லாஜி ஸ்டெப்வே'.

ஸ்டைல் லாஜி ரெடி!

இன்ஜின் விஷயத்தில் பழைய லாஜிதான். அதே 1.5 லிட்டர் K9K, 85bhp பவர், 24.8 kgm டார்க் கொண்ட டீசல் இன்ஜின்தான். அப்படியென்றால், 110 bhp மாடல்? அதுவும் இருக்கிறது. மகிழ்ச்சி என்னவென்றால், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வருகிறது. இது டாப் எண்டில் மட்டும்தான். டார்க் பிரௌன், பீஜ் மற்றும் பியானோ கறுப்பு ஃபினிஷிங்கில் சென்டர் கன்ஸோல், சூப்பர் ஸ்டைலிஷ். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பொறுத்தவரை மீடியா-NAV சிஸ்டம்தான். ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் இல்லை. அதற்குப் பதிலாக, இதில் தனியாக கண்டென்ஸரையும் ஏர் புளோயரையும் முதல் வரிசையில் சேர்த்திருக்கிறார்கள். இதனால் கூலிங் எக்ஸ்ட்ரா. மூன்றாவது வரிசையில் இரண்டு இளவட்டங்கள் நன்றாக உட்காரலாம். உயரமான ஃப்ளோரிங் சிஸ்டத்தால், சீட்டிங் பொசிஷன் உயரமாக இருப்பதுபோல் தெரிகிறது.

ஸ்டைல் லாஜி ரெடி!

நகர டிராஃபிக்கில், ரெனோ இன்ஜினில் வழக்கம்போல் டர்போ லேக் எரிச்சலூட்டுகிறது. 2,000-த்தைத் தாண்டிவிட்டால், பவர் டெலிவரி ஸ்மூத். நமக்குத் தெரிந்து பழைய லாஜியில் ஹெவி கிளட்ச், காலைப் படுத்தி எடுக்கும். இதில் கிளட்ச் லைட்டாகி இருக்கிறது. பம்பர் டு பம்பர் டிராஃபிக்கில்கூட கால் வலிக்கவே இல்லை. சஸ்பென்ஷனும் சூப்பர். டாக்ஸி வாடிக்கையாளர்களைக்கூட லாஜி, கவராமல் இருந்து வந்தது. ‘7 சீட்டர் காரா, எர்டிகாவுக்குப் போயிரலாம்’ என்று மாருதிக்குத் தாவிக்கொண்டிருந்தார்கள். முரட்டுத்தனமான தோற்றம், தாராளமான இடவசதி, பவர்ஃபுல் டீசல் இன்ஜின், சிறந்த மெக்கானிக்கல் பேக்கேஜ் என்று ‘லாஜி ஸ்டெப்வே’ இனி பிரைவேட் வாடிக்கையாளர்களைக்கூட வசப்படுத்தலாம். எர்டிகா இல்லை; இனோவா க்ரிஸ்டாவுக்கே லாஜி ஸ்டெப்வே போட்டியாக அமைந்தாலும் ஆச்சர்யமில்லை.