Published:Updated:

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

போட்டி - பெலினோ RS Vs அபார்த் புன்ட்டோ Vs ஃபோக்ஸ்வாகன் போலோ GT TSIதொகுப்பு: தமிழ்

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

போட்டி - பெலினோ RS Vs அபார்த் புன்ட்டோ Vs ஃபோக்ஸ்வாகன் போலோ GT TSIதொகுப்பு: தமிழ்

Published:Updated:
எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

ஹேட்ச்பேக்தான்; ஆனால், 0 - 100 கிமீ-யை 20 விநாடிகளுக்கு மேல் பொறுமையாக எட்டும் பாந்தமான ஹேட்ச்பேக் கார்கள் இல்லை. இவை ‘ஹாட் ஹேட்ச்பேக்’ கார்கள். அப்படிப்பட்டவைதான் அபார்த் புன்ட்டோவும் போலோ GT-யும். புன்ட்டோவைப் பற்றித் தெரியும்தானே. இந்தியாவின் அதிவேக பெட்ரோல் ஹேட்ச்பேக்குகளில் ஒன்று. பவர் 147 bhp. 0 - 100 கிமீ-யை வெறும் 9.3 விநாடிகளில் எட்டும் தெறி பெர்ஃபாமென்ஸ் கொண்டது. GT-யும் சளைத்ததல்ல; 0 - 100-ஐ 11.2 விநாடிகளில் எட்டிவிடும். ‘இதோ, நானும் வந்துட்டேன்’ என்று இந்த ஹாட் ஹேட்ச்பேக் வரிசையில் பெலினோ வண்டியில் ஏறியிருக்கிறது. பெயர்: மாருதி சுஸூகி பெலினோ RS. (Racing Sport.) 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் இன்ஜின், 102 bhp பவருடன் உறுமுகிறது பெலினோ RS. அபார்த்துக்கும் போலோவுக்கும் ‘பெலினோ RS’ டஃப் கொடுக்குமா? மூன்று ஹாட் ஹேட்ச்பேக்குகளுக்கும் நடந்த செம ஹாட் போட்டி இதோ.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

வெளியே, உள்ளே...

சாதாரண கார்கள் போலவேதான் இருக்கின்றன இவை மூன்றும். அதிலும் போலோவில், முன்பக்க கிரில்லில் ‘GT’ என்கிற க்ரோம் கிரில் இல்லையென்றால், சாதா போலோ என்று நினைத்துவிடுவார்கள். கறுப்பு நிற மிரர்கள், கறுப்பு ஸ்பாய்லர், கொஞ்சூண்டு வித்தியாசப்படும் அலாய் வீல்களை வைத்தும் ‘இது GTதானே’ என்று கண்டுபிடிக்கலாம். மற்றபடி, ‘கூல்’ டிசைனில் க்யூட்டாக இருக்கிறது போலோ GT.

இதுவே அபார்த்தைப் பார்த்தால், ‘ஏதோ ஸ்போர்ட்ஸ் கார் மாதிரி இருக்கே’ என்றுதான் கேட்கத் தோன்றும். அத்தனையும் ஸ்போர்ட்டி அம்சங்கள். அலாய் வீல்களே இதற்குச் சாட்சி. விங் மிரர்கள், பனி விளக்குகள், பானெட்டின் மூக்கு, அடிப்பக்க கிளாடிங் என்று அங்கங்கே சிவப்பு நிற ஸ்ட்ரிப்புகள் என்று டிசைனில் ‘நான் ஹாட் மச்சி’ என்கிறது அபார்த் புன்ட்டோ.

‘நான் கூலும் இல்லை; ஹாட்டும் இல்லை’ என்று மீடியம் ஸ்டைலில் கலக்குகிறது பெலினோ RS. கன் மெட்டல் கிரே கிரில், கறுப்பு நிற அலாய் வீல்கள் என்று ஸ்போர்ட்டி ஃபீல். அதிலும் அந்த ‘DRL’. தூரத்தில் இருந்து வரும்போது அத்தனை அழகு. இதில் மனம் மயங்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.

1.2 பெலினோவில் இருந்த ரியர் பம்பர், RS-ல் மாறியிருக்கிறது. இந்த மூன்று கார்களின் டிசைனில் எது உங்களுக்குப் பிடிக்கிறது என்பதை வைத்தே, உங்கள் கேரக்டரை முடிவு பண்ணலாம் என்பதுபோல், ஒவ்வொரு காரும் ஒவ்வொரு அப்பீலில் ஜொலிக்கிறது.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

உள்பக்கத்திலும் பழசுக்கும் புதுசுக்கும் பெரிதாக மாற்றங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணைப் பறிக்கும் சிவப்பு-மஞ்சள் கலரை, அபார்த்தில் சீட்களுக்கும் கியர் லீவருக்கும் தையல் வேலைப்பாடுகளில் பயன்படுத்தி, அற்புதமாகக் கையாண்டிருக்கிறது ஃபியட்டின் டிசைன் டீம். ஃபியட் பேட்ஜுகள் இருக்கும் இடத்திலெல்லாம் அபார்த் பேட்ஜ்கள். புல் பிளாக் தீம், அபார்த்துக்கு அபாரம்.

டாப் எண்ட் 1.2 பெலினோவின் இன்டீரியர்தான் பெலினோ RS-லும். செம பிராக்டிக்கலாகவும், இடவசதி தாராளமாகவும் இருக்கின்றன. பெலினோவில் எங்கு உட்கார்ந்தாலும் இந்த பிராக்டிக்கல் ஃபீலிங்கை உணர முடிகிறது. 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆப்பிள் கார் ப்ளே, GPS, ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப் என வசதிகளில்... மகிழ்ச்சி! GT-யிலும் அபார்த்திலும் டச் ஸ்க்ரீன் மாடல் வந்துவிட்டது. நாம் டெஸ்ட் செய்த மாடல்கள் பழசு.

போலோவின் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்ஸ் கார் என்பதைச் சொல்கிறது. ரோடு விஸிபிளிட்டியும் சூப்பர். நமக்கு ரொம்பப் பிடித்தது, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான். ஓட்டும்போது, நல்ல கியர் கன்ட்ரோல் கிடைக்கிறது. பெலினோவில் டிரைவிங் பொசிஷன் தாழ்வு; சீட்டுகள் சாஃப்ட். இதற்கு அப்படியே நேர் எதிர், அபார்த். கொஞ்சம் உயரமானவர்கள் என்றால், கூரையில் தலை இடித்துவிடுமோ என்று பயந்தாலும் பயப்படலாம். டிரைவிங் பொசிஷன் அத்தனை உயரம். கிராஸ்ஓவர் ஓட்டுகிறோமோ என்று சந்தேகம் வந்துவிட்டது. பெடல்களையும் நாம் நினைப்பதுபோல் எளிதில் அடைய முடியவில்லை. ‘ஸ்டீயரிங் வீல் உயரமாக இருக்கிறதே; அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்’ என்றால், ஸ்டீயரிங் ‘ரீச்’ ஆப்ஷன் இல்லை. வெறும் டில்ட் மட்டும்தான். முன்பக்கம் ஒரே ஒரு கப் ஹோல்டரும், கொஞ்சூண்டு இடவசதியும்தான். பின்பக்க சீட்கள் சொகுசு. இதில் ரியர் ஏ.சி வென்ட் இருப்பது, அபார்த்தில் மட்டும்தான்.

போலோவில் பின்பக்க சீட், ரொம்ப டைட். பூட் ஸ்பேஸும் அதேபோல்தான்.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

280 லிட்டர்தான். ஆனால், அபார்த்தை ஒப்பிடும்போது, 14 லிட்டர் அதிகம். நல்லவேளை, ஹோல்டர்கள் அங்கங்கே இருக்கின்றன. இதுபோன்ற எந்தப் பிரச்னைகளும் பெலினோ RS-ல் இல்லை. நவீன அடிப்படை அம்சங்கள் எல்லாமே பெலினோவில் உண்டு. பின்பக்கம் சீட்கள் நல்ல வசதி. பூட்டிலும் அதே. 339 லிட்டர். ஹேட்ச்பேக்குகளிலேயே நல்ல இடவசதி என்று சொல்லலாம். அதனால்தான் இதை பிராக்டிக்கலான கார் என்று சொன்னோம்.

இன்ஜின்

ஹாட் ஹேட்ச்பேக்குகளுக்கு முக்கியமே இன்ஜின்தான். அதனால்தான் இந்த 1.0 லிட்டர் இன்ஜினுக்கு ‘பூஸ்டர் ஜெட்’ என்று பெயர் வைத்திருக்கிறது மாருதி. 3 சிலிண்டர் பூஸ்டர் ஜெட்டை முதன்முதலில் எக்கோஸ்போர்ட்டில் அறிமுகப்படுத்தி கவனம் ஈர்த்தது ஃபோர்டுதான். ஆனால், மாருதி ‘வாவ்’ என்று வியக்கவைத்துவிட்டது. காரணம், டர்போ சார்ஜர். 3 சிலிண்டரில் டர்போ சார்ஜரைச் சேர்த்து
விட்டால், நினைத்ததைவிட பெர்ஃபாமென்ஸ் கிடைக்குமே என்கிறது மாருதி. 102bhp பவர், 15.0 kgm டார்க் என்று இன்ஜின் ட்யூனும் செய்யப் பட்டிருக்கிறது. 1,600 rpm-ல் இருந்தே இன்ஜின் விழித்துக் கொள்கிறது. 2,000-த்துக்குப் பிறகுதான் ‘இந்த டர்போ தீயென்று தெரிகிறது’ என்பது புரிகிறது. அதேநேரத்தில் 3 சிலிண்டர் என்பதால், ‘தடதட’ அதிர்வும் கொஞ்சூண்டு தெரிகிறது. 5,000 ஆர்பிஎம் வரை ஜாலியாக RS-ஐ ஓட்டினேன். 0-100 கிமீ-யை 10.25 விநாடிகளில் கடந்து ‘விர்ர்’ எனப் பறந்தது பெலினோ.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

போலோவில் இருப்பது 105 bhp பவர். பெலினோ RS-ஐ விட 3 bhpதான் அதிகம். இதில் மட்டும்தான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். இந்த 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸை உலகின் பெஸ்ட் கியர்பாக்ஸ் வரிசையில் சேர்க்கலாம். அப்படிப்பட்ட ரெஸ்பான்ஸ். இந்த டர்போவில் DI (டைரக்ட் இன்ஜெக் ஷன்) மோட்டார் இருக்கிறது. கூடவே டார்க்கும் 17.5 kgm. பெர்ஃபாமென்ஸில் மாஸ் காட்டுகிறது. போலோ போன்ற டைரக்ட் இன்ஜெக் ஷன் டர்போவுக்கு, இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் பெஸ்ட் என்பதை உணர்ந்தோம்.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

அபார்த்தின் இன்ஜின் கதை வேற மாதிரி. ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்கிற ரூல் புக்கை உடைத்து எறிகிறது அபார்த். 147 bhpயை இந்த 1,198 கிலோ காருக்கு கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. ‘வாவ்’ என்று வியந்து முடிப்பதற்குள் 4.17 விநாடிகளில் 60 கி.மீ வேகத்தைக் கடந்திருந்தது அபார்த் புன்ட்டோ. 0 - 100 கி.மீ-யை குறைவான வேகத்துக்குள் (9.3 விநாடிகள்) கடக்கும் ஃபாஸ்ட் ஹேட்ச்பேக், அபார்த்தான். இந்த வேகப் பாய்ச்சலுக்கு 1,400 சிசியும், 21.2 kgm டார்க்கும் முக்கியக் காரணம். இது டீசல் செடான்களில் இருக்கும் டார்க்குக்கு இணையான விஷயம்.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

கையாளுமை, ஓட்டுதல்

இன்ஜினில் சபாஷ் வாங்கும் நேரம், கையாளுமையில் நம்மை ரொம்பவே மெனக்கெட வைக்கிறது அபார்த். ஸ்டீயரிங்கில் இருந்து ஆரம்பிக்கலாம். மற்ற இரண்டில் இருப்பது எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்டீயரிங். புன்ட்டோவில் ஹைட்ராலிக். அதனால், பார்க்கிங்கின்போது ஹெவியாக இருக்கிறது. இதுவே மலைச்சாலைகளில் அபார்த்தான் சமர்த்து. ஆனால், பிரிட்ஜ்ஸ்டோன் டயர்கள் அவ்வளவாக கிரிப் இல்லை. கிளட்ச்சும் ஹெவி. கியர்பாக்ஸும் தொய்வாக இருப்பதுபோல் இருக்கிறது. ஒரு நல்ல விஷயம் - புன்ட்டோவில் பெரிய குறையே டர்போ லேக்தான்; அபார்த்தில் அது சுத்தமாக இல்லை. டர்போ முழித்ததும் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. பொதுவாக, ஃபியட் கார்களில் கட்டுமானத் தரமும் ஸ்டெபிலிட்டிதான் சிறப்பம்சமே. உறுதியான சேஸி செட்-அப் இருந்தாலும் கார்னரிங்கில் ரெவ் பண்ணினால், அபார்த்தில் லேசாக பாடி ரோல் இருப்பதுபோல் தெரிகிறதே? ஒருவேளை, உயரமான சீட்டிங் பொசிஷன்கூட நமக்கு அப்படித் தோன்றவைக்கிறதோ என்னவோ? ஆனால், எல்லா தடைகளையும் ஜாலியாகக் கடக்க உதவுகிறது அபார்த்தின் சஸ்பென்ஷன் செட்-அப். நெடுஞ்சாலையில் அபார்த்தில் பறக்கும்போது த்ரில்லிங் அன்லிமிட்டெட்.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

போலோவில் ஃபன் அவ்வளவு கிடைக்கிறது. கிரிப்பான டயர்கள், ஆட்டோ கியர், எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்டீயரிங் எல்லாமேதான் இதற்குக் காரணம். குறுகலான திருப்பங்களில்கூட ஜாலியாகத் திரும்புகிறது போலோ GT. நெடுஞ்சாலைகளில் ஸ்போர்ட் மோடில் வைத்து GTவிரட்டுங்களேன். ஆசம்! GT என்றால் கிராண்ட் டூரிஸ்மோ. அதாவது, ஹை பெர்பாஃமென்ஸ் கார் என்று அர்த்தம். அதை நிரூபிக்கிறது போலோ GT.

பழைய பெலினோவில் இருந்து சேஸி, ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் போன்றவற்றில் மாற்றங்கள் செய்திருக்கிறது மாருதி.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

1.2 பெலினோவைவிட 60 கிலோ எடை கூடியிருக்கிறது. RS-ன் எடை 950 கிலோ. இதற்காக சஸ்பென்ஷன் டைட்டாக முறுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டெபிலிட்டியில் ஓகே!

ற்கெனவே சொன்னதுபோல் பூட் ஸ்பேஸ், இடவசதி என்று பெலினோ செம பிராக்கடிக்கலான கார்.

எது ஹாட் ஹேட்ச்பேக்? - சபாஷ்... ஹாட்டான போட்டி!

ஆனால், இங்கே நடப்பது ஹாட் ஹேட்ச்களுக்கான போட்டி. மாருதியின் பூஸ்டர்ஜெட் இன்ஜினை அதற்காகக் குறை சொல்ல முடியாது. இருந்தாலும் 2,000 rpm வரை டர்போ வேலை செய்யத் தயங்குகிறது. அதிலும் போலோ GT போன்ற பெர்ஃபாமென்ஸ் கார்களையே ஆக்ஸிலரேஷன் டெஸ்ட்டில் பின்னுக்குத் தள்ளுவது என்றால் சும்மாவா? அதுவும் குறைந்த விலையில். ஆனால், ஃபன் டிரைவில் மற்ற இரண்டு கார்களைக் காட்டிலும் பெலினோ ஏதோ குறை வைப்பதுபோலவே இருக்கிறது.

போலோவில் இந்த ஃபன்தான் ப்ளஸ். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், தீயாக வேலை பார்க்கிறது. பெர்ஃபாமென்ஸும் வேண்டும்; அதுவும் ஆட்டோமேட்டிக் அனுபவம்தான் வேண்டும் என்பவர்கள், போலோ ஜிடி-யை விட்டுவிடாதீர்கள். மற்றபடி, இந்த பெர்ஃபாமென்ஸ் காரில் பூட் ஸ்பேஸ், இடவசதி என்று பெலினோ போல பிராக்டிக்கலான விஷயங்களை எதிர்பார்ப்பவர்கள் ஒதுங்கிவிடலாம்.

அபார்த்தில், பிராக்டிக்கலுக்குச் சுத்தமாக இடமில்லை. ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லை; எர்கானமிக்ஸ் சரியாக அமைக்கப்படவில்லை; இன்ஃபோடெயின்மென்ட்டும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை; டேஷ்போர்டில் மனம் மயக்கும் விஷயங்கள் அவ்வளவாக இல்லை. இதுபோக பார்த்துப் பழகிய கார் அபார்த் புன்ட்டோ. சின்னக் குறைகள் இருந்தாலும், மெக்கானிக்கலாக சொல்லி அடிக்கிறது அபார்த். இன்ஜினை ஆன் செய்துவிட்டு ஸ்டீயரிங்கைப் பிடித்தால், ஆஃப் செய்யும்வரை ‘பச்சக்’ என நம் மனசில் ஒட்டிக்கொண்டு இறங்க மறுக்கிறது இதன் டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ். உறுதியான சேஸியும், ஸ்டிஃப் சஸ்பென்ஷனும், எப்படிப்பட்ட கார்னரிலும் மோசமான சாலைகளிலும் கம்ஃபர்ட் ஃபீல் கிடைக்க வைக்கிறது. விலை அதிகம்தான். அதேநேரம், ‘ஓர் இடத்துக்கு சீக்கிரம் போகணும்’ என்று முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. அபார்த்தே பார்த்துக்கொள்ளும். பெர்ஃபாமென்ஸிலும் சரி; பிக்-அப்பிலும் சரி - சபாஷ் அபார்த்!