Published:Updated:

முரட்டுக் குதிரைகள்!

முரட்டுக் குதிரைகள்!
பிரீமியம் ஸ்டோரி
முரட்டுக் குதிரைகள்!

ஒப்பீடு - அட்வென்ச்சர் பைக்குகள்தொகுப்பு: ராகுல் சிவகுரு

முரட்டுக் குதிரைகள்!

ஒப்பீடு - அட்வென்ச்சர் பைக்குகள்தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
முரட்டுக் குதிரைகள்!
பிரீமியம் ஸ்டோரி
முரட்டுக் குதிரைகள்!

ட்வென்ச்சர் பைக்குகளை ப்ரீடேட்டர் வகை விலங்குகளுடன் ஒப்பிடலாம். டுகாட்டி மற்றும் டிரையம்ப் நிறுவனங்களின் முரட்டுத்தனமான அட்வென்சர் பைக்குகளான மல்ட்டிஸ்ட்ராடா 1200 எண்டியுரோ மற்றும் டைகர் 1200 எக்ஸ்ப்ளோரர் XC ஆகியவற்றை ஒப்பிட்டு, சக்தி - பன்முகத் திறமை - மதிப்பு அடிப்படையில் எது பெஸ்ட் என்று பார்க்கலாம்.

முரட்டுக் குதிரைகள்!

டிசைன்

இந்த இரண்டு அட்வென்ச்சர் பைக்குகளும், பெரிய சைஸ் எஸ்யூவி கார்களே பொறாமைப்படும் அளவுக்குத் திடகாத்திரமாக இருக்கின்றன. டுகாட்டியின் எண்டியுரோ பைக்கில், மல்ட்டிஸ்ட்ராடா சீரிஸ் பைக்குகளுக்கே உரித்தான பறவையின் கூம்பு போன்ற ஷார்ப்பான இரட்டை ஹெட்லைட்கள் மற்றும் மேனுவலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய உயரமான ஃப்ளை ஸ்க்ரீன், பின்பக்க வடிவமைப்பு ஆகியவை இதிலும் தொடர்கிறது. கிட்டத்தட்ட பைக்கின் நடுப்பகுதியில் இருக்கும் பல்க்கான 30 லிட்டர் பெட்ரோல் டேங்க், சீட்டுகளுடன் இணையும் விதம் அழகு. என்டியுரோவுடன் ஒப்பிடும்போது, டைகர் எக்ஸ்ப்ளோரர் பைக்கின் டிசைன் கவர்ச்சியாக இல்லைதான். ஆனால், இங்கும் பெரிய இரட்டை ஹெட்லைட்கள் மற்றும் உயரமான விண்ட் ஸ்க்ரீன் ஆகியவை இருக்கின்றன. ஆனால், டிரையம்ப்பின் விண்ட் ஸ்க்ரீனை அட்ஜஸ்ட் செய்வது கடினமாக இருக்கிறது. பெட்ரோல் டேங்க்கின் அளவும், டுகாட்டியைவிடக் குறைவுதான் (20 லிட்டர்).

வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்

எக்ஸ்ப்ளோரர் பைக்கின் விண்ட் ஸ்க்ரீனுக்குப் பின்னால் இருக்கும் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை, ஹேண்டில்பாரில் இருக்கும் பட்டன்கள் வாயிலாகத்தான் கன்ட்ரோல் செய்ய முடியும். தவிர, இங்கு காட்சிபடுத்தப்பட்டிருக்கும் பைக், 2014-ம் ஆண்டைச் சேர்ந்தது என்பதால், சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளில் என்டியுரோ பைக்கைவிடப்  பின்தங்கியிருக்கிறது. இதில் 3 ஸ்டேஜ் டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் ஆன்/ஆஃப் செய்யக்கூடிய ஏபிஎஸ் தவிர வேறு எதுவும் இல்லை; பவர் மோடுகள் - எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் - TFT டிஸ்ப்ளே எனப் பல லேட்டஸ்ட் அம்சங்கள் மிஸ்ஸிங். எனவே, பைக்கில் அதிகமாக எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் இருக்கக் கூடாது என்பவர்களை, எக்ஸ்ப்ளோரர் பைக் நிச்சயம் கவரும்.

முரட்டுக் குதிரைகள்!

மல்ட்டிஸ்ட்ராடா பைக்கில் இதுபோன்ற குறைகள் ஏதும் இல்லை. தெளிவான மற்றும் எளிதில் செட் செய்யக்கூடிய TFT டிஸ்ப்ளே, ஹை (ஸ்போர்ட் - டூரிங்) மற்றும் லோ (அர்பன் - என்டியுரோ) எனும்
4 ரைடிங் மோடுகள், ஏபிஎஸ், வீலிங் கன்ட்ரோல், 8 ஸ்டேஜ் டிராக்‌ஷன் கன்ட்ரோல் என எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜாக இருக்கிறது என்டியுரோ. மேலும், இடதுபக்க ஹேண்டில்பாரில் இருக்கும் கன்ட்ரோல்கள் வாயிலாக, இன்ஜின் இயங்கும் விதம் தொடங்கி SkyHook சஸ்பென்ஷனின் செட்டிங் வரை அனைத்தையும் செய்ய முடியும் என்பது ப்ளஸ். ஹை ரைடிங் மோடுகளில், இன்ஜினின் முழுமையான 160bhp பவரும், லோ ரைடிங் மோடுகளில் 100bhp பவரும் வெளிப்படுகின்றன. தவிர, சஸ்பென்ஷனின் Preload அளவுகளை, 24 வகையில் செட் செய்ய முடிகிறது என்பதுடன், எண்டியுரோ மோடில் பைக்கை ஓட்டும்போது, ஹில் ஹோல்டு வசதியும் தானாகச் சேர்ந்துகொள்கிறது.

எக்ஸ்ப்ளோரர் பைக்கின் எக்ஸாஸ்ட், மேல் நோக்கி இருந்தாலும், அதன் தோற்றத்தில் எந்த புதுமையும் இல்லை. தடிமனான கிராப் ரெயில், செங்குத்தான LED டெயில் லைட்டுக்கு வழிவகுக்கிறது. இங்கிருக்கும் இரண்டு பைக்கிலும் 19 இன்ச் ஸ்போக் வீல்களே இருக்கின்றன என்றாலும், உயரத்தில் வெல்வது என்னவோ எண்டியுரோ பைக்தான். இந்த ஸ்போக் வீல்களின் தனித்தன்மையான வடிவமைப்பு காரணமாக, அவற்றில் டியூப்லெஸ் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. எண்டியுரோவில் இருக்கும் இருபக்க ஸ்விங் ஆர்ம், ஆஃப் ரோடு செல்லும்போது பைக்கின் நிலைத்தன்மைக்கு துணைநிற்கிறது. இந்த பைக்கில் இருக்கக்கூடிய ஒற்றை எக்ஸாஸ்ட், L-Twin இன்ஜின் கொண்ட டுகாட்டி பைக்குகளுக்கே உரித்தான சத்தத்தை வெளிப்படுத்துகிறது.

முரட்டுக் குதிரைகள்!

எர்கனாமிக்ஸ்

எண்டியுரோவின் பெரிய பெட்ரோல் டேங்க்கை, முழுவதும் நிரப்பிவிட்டு பைக்கை எடுக்கும்போது, ஹெவியான உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதனுடன் ஒப்பிடும்போது, டைகர் எக்ஸ்ப்ளோரர் 1200 XC பைக்கில் இந்தப் பிரச்னை ஏற்படவில்லை. இதற்கு ஒருவகையில் 837 மிமீ & 857 மிமீ என இரு அளவுகளில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய சீட்டின் உயரமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹேண்டில்பார் - விண்ட் ஸ்க்ரீன் - சீட் - பெட்ரோல் டேங்க் ஆகியவை வடிவமைக்கப்பட்ட விதத்தினால், டிரையம்ப்பில் ரைடருக்குப் பக்காவான சீட்டிங் பொசிஷன் கிடைக்கிறது.

எண்டியுரோவின் சீட் உயரமான 850 மிமீ என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனை அட்ஜஸ்ட் செய்யமுடியாது என்பதால், உயரமானவர்களுக்கு மட்டுமே இந்த பைக் வசதியாக இருக்கும் எனத் தோன்றலாம். ஆனால், பைக்கில் செட்டில் ஆனபிறகு, அந்த எண்ணம் தவிடுபொடியாகி விடுகிறது. இங்கும் ஹேண்டில்பார் - விண்ட் ஸ்க்ரீன் - சீட் - பெட்ரோல் டேங்க் ஆகியவை, ரைடருக்குச் சிறப்பான சீட்டிங் பொசிஷன் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, நீண்ட நேரம் தொடர்ந்து இந்த பைக்கை ஓட்டும்போது டயர்டாக உணர்ந்தால், உடனே ஃபுட் பெக்கில் கால் வைத்துக்கொண்டு, பைக்கில் நின்றுகொண்டே பயணம் செய்யலாம்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

எண்டியுரோ பைக்கில், டுகாட்டி ஸ்பெஷல் DVT (Desmodromic Valve Timing) இருப்பதால், 2,000 ஆர்பிஎம்-ல் இருந்தே சிறப்பான இழுவைத்திறன் கிடைக்கிறது. ஆனால், மற்ற டுகாட்டி பைக்குகளைப் போலவே, இங்கும் 4, 5, 6-வது கியரில் ஃபால்ஸ் நியூட்ரல் பிரச்னை தொடர்கிறது. திராட்டில் ரெஸ்பான்ஸ் ஷார்ப்பாக இருப்பதுடன், 6,000 ஆர்பிஎம் தாண்டும்போது பவர் பீறிடுகிறது. 160bhp பவர் இருந்தாலும், ஆஃப் ரோடு செல்லும்போது, 100bhp பவரை வெளிப்படுத்தும் எண்டியுரோ மோடில் பைக்கைச் செலுத்துவது நலம்.

டைகர் பைக்கின் இன்லைன் 3 சிலிண்டர், DOHC, 1213சிசி ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின், 137bhp பவர் மற்றும் 12.1kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இங்கு ரைடு பை வொயர் திராட்டில் மற்றும் குறைவான பராமரிப்புக்குப் பெயர் பெற்ற ஷாஃப்ட் டிரைவ் அமைப்பும் இடம்பெற்றுள்ளன. இதெல்லாம் ஒன்று சேரும்போது, ஆன் ரோடு பெர்ஃபாமென்ஸ் செம ஷார்ப். ஆனால், டுகாட்டி போல ரைடிங் மோடுகள் இங்கே இல்லை என்பதால், ஆஃப் ரோடில் இவ்வுளவு பவரைக் கட்டுப் படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம், பைக்கின் டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் தனது பணியைச் சரியாகச் செய்கிறது. இன்ஜின் சத்தம் மிரட்டல் ரகம்.

ஓட்டுதல் அனுபவம்

நெடுஞ்சாலையில் அசத்தும் எக்ஸ்புளோரர், ஆஃப் ரோடிங்கில் அந்தளவுக்கு நம்மை ஈர்க்கவில்லை. ஆனால், இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருக்கும் இந்த பைக், ஆஃப் ரோடிங்கைவிட திருப்பங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது. ரைடர் தேர்ந்தெடுக்கும் ரைடிங் மோடுகளுக்கு ஏற்ப, தன்னை அம்பியாகவோ, ரெமோவாகவோ, அந்நியனாகவோ அப்படியே மாறிவிடுவது, மல்ட்டிஸ்ட்ராடா பைக்கின் பாராட்டப் படவேண்டிய அம்சம். ஆனால், இந்த பைக்கின் பெரிய பெட்ரோல் டேங்க், இன்ஜினைச் சுற்றிப் படரும் காற்றின் அளவைக் குறைத்துவிடுகிறது. எனவே, நெரிசல்மிக்க சாலைகளில் இந்த பைக்கை ஓட்டும்போது, தொடைகளில் இன்ஜின் சூடு படுகிறது. ஆனால், நெடுஞ்சாலைகளில் மூன்று இலக்க வேகங்களில் செல்லும்போது இந்தப் பிரச்னை இல்லை. பல எடை குறைவான ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு, இந்த கட்டுடல் நாயகன் கடும் சவால் அளிக்கிறது. எண்டியுரோ மோடில், ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கன்ட்ரோலை அதற்கேற்ப செட் செய்து கொண்டால், எண்டியுரோ பைக்கில் ஆஃப் ரோடிங் செய்வது, செம ஃபன்னாக இருக்கிறது.

முரட்டுக் குதிரைகள்!

தீர்ப்பு

முரட்டுக் குதிரைகளில் ஒன்றான டைகர் 1200 எக்ஸ்புளோரர் XC, ஒரு பக்காவான ரைடர் ஃப்ரெண்ட்லி பைக். ஒரு பிரீமியம் அட்வென்ச்சர் டூரர் பைக்கின் முக்கிய தகுதியான சொகுசான ஓட்டுதல், இந்த பைக்கில் இருக்கிறது. ஆனால், இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, வசதிகளில் மிகவும் பின்தங்கியிருக்கிறது எக்ஸ்ப்ளோரர். மல்ட்டிஸ்ட்ராடா எண்டியுரோவைப் பொறுத்தவரை, ஓர் ஆஜானுபாகுவான பைக்கைச் சுலபமாக ஓட்ட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இருக்கிறது. ஆனால், உங்கள் பட்ஜெட்டில் இந்த பைக் அடங்கினாலும், இது நகரப் பயன்பாட்டுக்கும் - அனைவருக்கும் ஏற்ற பைக் இல்லை. ஏனெனில், இந்த பைக்கில் இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, போதிய அனுபவம் தேவை!

எக்ஸ்ப்ளோரர் ஒரு கிளாஸிக் அட்வென்ச்சர் பைக்; எண்டியுரோ ஒரு லேட்டஸ்ட் பைக். ஆனால், எப்படிப்பட்ட நிலப்பரப்பிலும் எண்டியுரோ பைக்கை நம்பிப் பயணிக்க முடியும் என்பது ப்ளஸ். இதன் காரணமாகவே, இந்த பைக் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது. ஆனால், எனது பைக்கில் எலெக்ட்ரானிக்ஸ் குறைவாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு, எக்ஸ்ப்ளோரர் சரியான சாய்ஸாக இருக்கும்.