Published:Updated:

நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!

நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!
பிரீமியம் ஸ்டோரி
நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - கவாஸாகி Z900 & நின்ஜா 650தொகுப்பு: ராகுல் சிவகுரு

நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - கவாஸாகி Z900 & நின்ஜா 650தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!
பிரீமியம் ஸ்டோரி
நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!

டந்த ஐந்து ஆண்டுகளில், கவாஸாகி இந்தியாவில் அறிமுகப்படுத்திய நின்ஜா 650, ER-6n, Z800 என அனைத்தும் ஆற்றல் மிக்க டூ-வீலர்கள். அதிலும் நின்ஜா 650, ER-6n ஆகியவை, பிரீமியமான ஓட்டுதல் அனுபவத்தை அசத்தலான விலையில் வழங்கின. அதிரடியாகப் பவரை வெளிப்படுத்தும் இன்ஜினுடன், அட்டகாசமான கையாளுமையையும் ஒருசேரக்கொண்டிருந்த Z800 பைக்கும், அற்புதமாக பொசிஷன் செய்யப்பட்டிருந்தது. தற்போது 2017-ல், பஜாஜின் டீலர் நெட்வொர்க்கில் இருந்து பிரிந்துவிட்டாலும், முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டிருக்கும் நின்ஜா 650 உடன், ER-6n மற்றும் Z800 ஆகிய பைக்குகளுக்கு மாற்றாக, முற்றிலும் புதிய Z650 & Z900 பைக்குகளைக் களமிறக்கி, தனது திறமையை மீண்டும் ஒருமுறை பலமாகப் பறைசாற்றியிருக்கிறது கவாஸாகி. கட்டுமஸ்தான ஹல்க் போன்ற இந்தப் பச்சை நிற அழகன்கள், ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறார்கள்?

நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!

Z சீரிஸில், மற்றொரு அழகான பைக்தான் இந்த Z900. ஹெட்லைட்டைச் சுற்றிய பிகினி ஃபேரிங் தொடங்கி, பைக்கின் பின்பக்கம் மற்றும் எக்ஸாஸ்ட் பைப்பின் டிசைன் என அனைத்தும் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 123.6bhp பவரை வெளிப்படுத்தும் புதிய 948சிசி, இன்லைன் 4 சிலிண்டர் BS-IV இன்ஜின், Z1000 பைக்கின் இன்ஜினை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைவான கிளட்ச் சுக்கும், அதிகப்படியான இன்ஜின் பிரேக்கிங்கும் கிடைப்பதற்கு ஏதுவாக, அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் அமைப்பு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பவர் டெலிவரி சீராக இருப்பதுடன், ஆரம்பத்தில் அம்பியாக இருக்கும் இன்ஜின், 6,000 ஆர்பிஎம்மைத் தாண்டியவுடன் அந்நியன் அவதாரம் எடுத்துவிடுகிறது. இன்ஜினின் க்ராங்ஷாஃப்ட்டின் உதவியுடன் இயங்கும் Secondary பேலன்ஸர், அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறது.

நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!
நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!

புத்தம் புதிய, எடை குறைவான (13.5 கிலோ) ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமைக்கொண்டிருக்கும் Z900 பைக்கின் எடை, முறையே 208 கிலோ மற்றும் 210 கிலோ (ஏபிஎஸ் உடன்) என்றளவில் உள்ளது. சீட் உயரமும் 794 மிமீதான் என்பதால், உயரம் குறைந்த ரைடர்களும் இந்த பைக்கை எளிதாக ஓட்ட முடியும் என்கிறது கவாஸாகி. இதன் முன்பக்கத்தில் இருக்கும் இரட்டை 300மிமீ Nissin டிஸ்க் பிரேக்ஸ், 4 பிஸ்டர் கேலிப்பரின் உதவியுடன் செயல்படுகின்றன. Z900-ன் சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, முன்பக்கம் Rebound & Preload-க்கு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய 41 மிமீ USD ஃபோர்க் மற்றும் பின்பக்கத்திலும் Rebound & Preload-க்கு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய Horizontal மோனோஷாக் உள்ளன. மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒன்று சேரும்போது, ரெஸ்பான்ஸிவான மற்றும் ஸ்போர்ட்டியான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கிறது. திருப்பங்களில் பைக்கைச் செலுத்தும்போதும், ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக்கில் முழு பலத்தைக் காட்டும்போதும், ரைடருக்கும் முழு திருப்தி கிடைப்பது உறுதி.

நெக்ஸ்ட் லெவல் கவாஸாகி!

இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் டூரர் செக்மென்ட்டில், முக்கியமான ஒரு பைக்தான் நின்ஜா 650. ஆல்ரவுண்டராகத் திகழும் இந்த பைக், தற்போது 2017-ம் ஆண்டில் உறுதியான, எடை குறைவான (15 கிலோ) புதிய ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - புதிய பின்பக்க சஸ்பென்ஷன் - அலுமினியத்தால் ஆன மேம்படுத்தப்பட்ட Gull-Arm ஸ்விங் ஆர்ம், BS-IV விதிக்கு அப்டேட் செய்யப்பட்டிருக்கும் இன்ஜின் எனப் பல மாற்றங்களுடன் இந்தியாவில் கால்பதித்துள்ளது. அசப்பில் பார்ப்பதற்கு ZX-10R பைக்கைப் போலவே இருக்கும் நின்ஜா 650, முன்பைவிட 19 கிலோ எடை குறைந்திருக்கிறது. மேலும், இதில் பொருத்தப்பட்டுள்ள 68bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 649சிசி, பேரலல் ட்வின் இன்ஜின், மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸுக்கு (3,000 ஆர்பிஎம் முதல் 6,000 ஆர்பிஎம் வரை) முக்கியத்துவம் கொடுத்து ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜின், ஸ்லிப்பர் கிளட்ச் அமைப்பையும் கொண்டிருப்பது ப்ளஸ். நின்ஜா 650 பைக்கின் முன்பக்க 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கில் மாற்றம் இல்லாவிட்டாலும், பின்னால் இருக்கக்கூடிய Linkless Horizontal மோனோஷாக் சஸ்பென்ஷன், ZX-10R பைக்கில் இருப்பதுபோன்ற செட்-அப் என்பது கவனிக்கத்தக்கது. இத்தகைய கணிசமான மாற்றங்களால் முன்பைவிடப் பக்குவப்பட்டிருக்கும் நின்ஜா 650 பைக்கின் எர்கனாமிக்ஸ் மற்றும் இன்ஜின் டியூனிங் காரணமாக, அனைத்து விதமான ரைடர்களுக்கும் ஏற்ற பைக்காக இதனை மாற்றியிருக்கிறது கவாஸாகி. முன்பக்கத்தில் இருக்கக்கூடிய இரட்டை டிஸ்க் பிரேக்ஸ், பழைய பைக்குடன் ஒப்பிடும்போது, அசத்தலான ஃபீட்பேக்கை அளிக்கின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, புதிய நின்ஜா 650 பைக்கின் நேக்கட் ஸ்ட்ரீட் வெர்ஷனான Z650 பைக்கும், அட்டகாசமான தயாரிப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது. எப்படி Z800 பைக்குக்கு Z900 சரியான மாற்றாக இருக்கிறதோ, அதே போல நின்ஜா 650 பைக்குக்கும் அடுத்த தலைமுறை மாடல் சிறப்பானதாகவே அமைந்திருக்கிறது.