Published:Updated:

கொஞ்சம் பவர்... நிறைய பணம்!

கொஞ்சம் பவர்... நிறைய பணம்!
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் பவர்... நிறைய பணம்!

டெஸ்ட் டிரைவ் - கேடிஎம் டியூக் 250தொகுப்பு: இரா.கலைச் செல்வன்

கொஞ்சம் பவர்... நிறைய பணம்!

டெஸ்ட் டிரைவ் - கேடிஎம் டியூக் 250தொகுப்பு: இரா.கலைச் செல்வன்

Published:Updated:
கொஞ்சம் பவர்... நிறைய பணம்!
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் பவர்... நிறைய பணம்!

கேடிஎம் ஷோரூம்களில் கால் வைக்கும் கஸ்டமர்களுக்கு இந்தக் குழப்பமும், கேள்வியும் எப்போதுமே எழும். 2017-ம் ஆண்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் வெளிவந்த  டியூக்  200 (`1.66 லட்சம், சென்னை ஆன் ரோடு), பல மாறுதல்களோடு வெளியான டியூக் 390 (`2.58 லட்சம், சென்னை ஆன் ரோடு ) - ‘இந்த இரண்டில் எதை வாங்கலாம்? இந்த இரண்டுக்கும் ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்? இரண்டுக்கும் நடுவே ஒரு டியூக் இருந்தால், நன்றாக இருக்குமே?’ - தனது வாடிக்கையாளர்களின் குரல்களுக்கு காது கொடுத்ததன் பயனாக வந்ததுதான் டியூக் 250. 200 மாடலையும், 390 மாடலையும் கலந்துசெய்த கலவையான டியூக் 250 எப்படி இருக்கிறது?

கொஞ்சம் பவர்... நிறைய பணம்!

டிசைன் & இன்ஜினீயரிங்

‘டானுக்கெல்லாம் டான்’ என்று செல்லமாக அழைக்கப்படும் டியூக் 250, கேடிஎம்மின் மாஸ் ஹீரோ 1290 சூப்பர் டியூக்கின் டிசைனை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. புதுமையான டிசைன் என்றாலும், டியூக் பைக்குக்கான அடையாளங்கள் எதையும் சமரசம் செய்யாமல், பக்கா டியூக் தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய 13.5 லி டேங்க், ரைடருக்கு நல்ல கிரிப்பைத் தருகிறது. ரைடர் மற்றும் பில்லியனுக்கான சீட்கள், எக்ஸாஸ்ட் அமைக்கப்பட்டிருக்கும் இடம், 300 மிமீ ஃப்ரன்ட் டிஸ்க், 230 மிமீ பின்பக்க டிஸ்க், எலெக்ட்ரிக் ஆரஞ்ச் மற்றும் வெள்ளை நிறங்கள் என டிசைன் மற்றும் கட்டுமானத்தில் மிடுக்காக மிரட்டுகிறது கேடிஎம் 250.

இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ்

0 - 100 கி.மீ வேகத்தை 9.02 விநாடிகளில் கடக்கிறது. ஆனால், 115 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல ஏனோ பைக் கொஞ்சம் திணறத்தான் செய்கிறது. முதல் கியர் ரொம்பவே ஷார்ட்டாக இருப்பதால், டிராஃபிக்கில் அழுத்த வசதியாக இருக்கிறது. அதே சமயம், டாப் கியர் Taller Gear Ratio-வாக இருப்பது, காலியான சாலையில் சீறிப்பாய பெரிதும் உதவுகிறது. பைக்கின் வைப்ரேஷன் ஹேண்டில்பாரில் பரவாமல் இருப்பது சிறப்பு. வழக்கமாக கேடிஎம்களில் இருக்கும் ‘இன்ஜின் ஹீட’. பிரச்னை இதிலும் தொந்தரவு செய்கிறது.

கொஞ்சம் பவர்... நிறைய பணம்!

ரைடிங் & ஹேண்ட்லிங்

ஹேண்ட்லிங்குக்குப் பெயர்பெற்ற டியூக்குகளின் வரிசையில், 250 மாடலும் சோடை போகாமல் நிற்கிறது.

250 மாடலுக்கு 1357 மிமீ வீல்பேஸ் கொடுத்திருப்பது, டிராஃபிக்கில் சரசரவென கட் அடித்து ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கிறது. MRF - Revz C 1 டயர்கள், கொஞ்சம் சூடு பிடித்தால் போதும், தார்ச்சாலைகளில் கிரிப் கொடுப்பதில் கில்லியாக இருக்கிறது. அதே சமயம், குளிர்ந்த நிலையிலும், கான்கிரீட் சாலைகளிலும் கொஞ்சம் சறுக்கலாகத்தான் இருக்கிறது.

தீர்ப்பு

நெருக்கியடிக்கும் சிட்டி டிராபிக்கிலும், காலி ரோடுகளிலும் சீறிப்பாய செம சாய்ஸ். வாங்கும் விலைக்கு மதிப்பானதா என்பதில் கொஞ்சம் யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும். நல்ல ஸ்போர்ட்டியான பைக் வாங்க வேண்டும், பைசாவில் அத்தனை பிரச்னைகள் இல்லை என்றால், தாராளமாக டியூக் 250 வாங்கலாம்.