Published:Updated:

செம ஆக்டிவ்!

செம ஆக்டிவ்!
பிரீமியம் ஸ்டோரி
செம ஆக்டிவ்!

டெஸ்ட் ரிப்போர்ட் - ஹோண்டா ஆக்டிவா 125 BS-4தமிழ் , படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

செம ஆக்டிவ்!

டெஸ்ட் ரிப்போர்ட் - ஹோண்டா ஆக்டிவா 125 BS-4தமிழ் , படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
செம ஆக்டிவ்!
பிரீமியம் ஸ்டோரி
செம ஆக்டிவ்!

பெயர் ‘பிச்சை’ என்று இருக்கும்; ஆனால், கூகுளின் CEO-வாக இருப்பார். ‘பாரி’ என்று பெயர் இருக்கும்; ஆனால், பர்ஸ் எடுக்கவே யோசிப்பார். இப்படி முரண்பாடுகள் கொண்ட உலகத்தில், பெயருக்கு ஏற்றபடி இருக்கும் அம்சங்கள் கொண்டவை சில மட்டும்தான் இருக்கும். அப்படி ஒரு ஸ்கூட்டர்தான் ஆக்டிவா. பெயருக்கு ஏற்றாற்போல், வெளிவந்த 1999-ல் இருந்து இன்று வரை ஸ்கூட்டர் மார்க்கெட்டில் செம ஆக்டிவாக இருக்கிறது. அதுவும் டாப்-10 பட்டியலில் முதல் இடத்தில். மாதம் 2 லட்சம் எண்ணிக்கையில் விற்பனையாகிற ஆக்டிவாவில், அப்படி என்னதான் இருக்கிறது?

செம ஆக்டிவ்!

110, 125 என்று இரண்டு இன்ஜின்களில் பறக்கும் ஆக்டிவாவுக்கு இன்னொரு பெருமை உண்டு. ‘இந்தியாவின் முதல் 125 சிசி ஸ்கூட்டர்’ இதுதான். ஆயிரம் ஸ்கூட்டர்கள் வந்தாலும், இப்போதும்கூட ‘ஆக்டிவா

செம ஆக்டிவ்!

வாங்கலாமா’ என்ற டயலமாவில் இருப்பவர்களுக்காக, சென்னை முழுக்க புதிய BS-4 ஆக்டிவாவில் ஓர் ஆக்டிவ் டிரைவ்.

ஸ்டைல்

முன்பு ‘மொழுக்’ என்றிருந்த டிசைன், 125சிசி ஆக்டிவாவில் செம ஷார்ப்.  ஆங்காங்கே க்ரோம்கள் கண்ணடிக்கின்றன. உலோகத்திலான கட்டமைப்பு கொஞ்சம் ஸ்ட்ராங்தான். எனவே, பெண்களைக் கருத்தில்கொண்டு ஃபைபர் பாடியில் தயாரானதுதான் ஆக்டிவா-i. ஆனால், ஆக்டிவாவின் ஸ்பெஷலே - ‘யுனிசெக்ஸுவல் ஸ்கூட்டர்’ என்பதுதான். அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும். மெட்டல் பாடி கொண்ட இந்த 125-ன் எடை 108 கிலோ.

முன்பக்கம் பார்க்கிங் லைட் LED-ல் கொடுத்திருப்பது செம அழகு. தூரத்தில் வரும்போதே ‘ஆக்டிவா வருது’ என்று கண்டுபிடிக்கலாம். டிஜிட்டல்/அனலாக் மீட்டர் நல்ல அகலம். டிஜிட்டல் சிங்கிள் ட்ரிப் மீட்டர் உண்டு. எல்லாம் சில்வர் குடுவைக்குள் கச்சிதமாக இருக்கின்றன. ஹாலோஜன் ஹெட்லைட் இரவில் நல்ல வெளிச்சம். இதில் ‘ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன்’. அதாவது ஹெட்லைட் எப்போதுமே லோ-பீமில் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கும். ஃப்ளோர்போர்டு அகலமாக இருப்பதால், பல்க் பார்ட்டிகள்கூட முழங்கால் இடிக்காமல் ரைடிங் பண்ணலாம். முன்பக்கம் பொருள்கள் வைத்துக்கொள்ள இடம் இல்லை. சீட்டுக்கு அடியில் 18 லிட்டர். சின்ன ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டை வைத்து லாக் பண்ணிக்கொள்ளலாம். 5 ஸ்போக் அலாய் ரிம்கள் ஸ்டைலிஷ்.

செம ஆக்டிவ்!

எல்லாம் ஓகே. பிரேக் லாக் க்ளாம்ப் விஷயத்தில் மட்டும் ஹோண்டா சமரசம் ஆகாதது ஏனோ? டாப் வேரியன்ட்டிலாவது இதை ஓர் ஆப்ஷனாகக்கூட கொடுத்திருக்கலாம். மேடு பள்ளங்களில் பார்க் பண்ணுவது கொஞ்சம் கஷ்டமே!

வசதிகள்

ஆக்டிவா 125-ல் AHO ஆப்ஷன் உண்டு. சாதாரண கம்யூட்டர்களுக்கு இது வசதியா, தொந்தரவா என்பதை வாடிக்கையாளர்கள்தான் சொல்ல வேண்டும். பார்க்கிங் லைட்டுகள் LED, வேறு எந்த ஸ்கூட்டர்களிலும் இல்லாத ஆப்ஷன். கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம், மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரி, ட்யூப்லெஸ் டயர், அலாய்வீல் போன்ற அம்சங்கள் ஆக்டிவாவின் பெயரைக் காப்பாற்றுகின்றன. மொபைல் சார்ஜிங் பாயின்ட், சைடு ஸ்டாண்ட் போன்றவையெல்லாம் எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில்தான் வருமாம்.

செம ஆக்டிவ்!

மற்றபடி டிவிஎஸ், ஹீரோ போன்ற மற்ற ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது ஆக்டிவாவில் சில முக்கியமான வசதிகள் இல்லைதான். சீட்டில் இருந்து இறங்காமல் பெட்ரோல் போட முடியவில்லை. ஒரே சாவி - பல வேலைகள் பார்க்கும் ஸ்மார்ட் கீ ஃபங்ஷன் இல்லை. பாஸ் லைட் இல்லை. சைடு ஸ்டாண்ட், சர்வீஸ் இண்டிகேட்டர் இல்லை. இப்படி நிறைய இல்லைகள்.

கையாளுமை

‘எர்கானமிக்ஸ்’ விஷயத்தில் ஆக்டிவாவை அடித்துக் கொள்ள முடியாது. சரியாக பொசிஷன் செய்யப்பட்ட ஹேண்டில் பார்கள், அகலமான சீட்கள், கைக்கு எட்டும் சிம்பிளான கன்ட்ரோல் ஆப்ஷன்கள். எல்லாமே பக்கா. பில்லியன் ஃபுட்ரெஸ்ட் அலாயில் வருகிறது என்கிறார்கள். மற்றபடி லீவர்களின் தரம் ஓகே.

சஸ்பென்ஷன் விஷயத்தில் ஹோண்டா விழித்துக் கொண்டதற்கு தேங்க்ஸ். பழைய ஸ்கூட்டர்களில் சாதாரண ஹைட்ராலிக் சஸ்பென்ஷன்தான். ஆக்டிவா 4ஜி, மேடு பள்ளங்களில் நம்மை எகிறியடிக்கும். ஆனால், ஆக்டிவா 125-ல் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்பக்கம் ரியர் ஷாக் அப்ஸார்பர் சூப்பர் ரைடிங்குக்கு கேரன்ட்டி. மேடு பள்ளங்களில் அதிகம் ‘பவுன்ஸ்’ ஆகவில்லை. ரைடு குவாலிட்டி கம்ஃபர்ட். டாப் வேரியன்ட்டில் முன்பக்கம் 190 மிமீ டிஸ்க் பிரேக்கும், 130 மிமீ பின்பக்கம் டிரம் பிரேக்கும் இருக்கின்றன. ஆக்டிவாவின் ஹைலைட்டே இந்த டிஸ்க் ஆப்ஷன்தான். இதுபோக, ஹோண்டாவின் டிரம் பிரேக்கில் CBS சிஸ்டம் வேறு.

செம ஆக்டிவ்!

இன்ஜின்

இந்தியாவின் முதல் 125 சிசி ஸ்கூட்டரின் 124.9 சிசி இன்ஜின்தான் ஆக்டிவாவின் பலம். சிங்கிள் சிலிண்டர், 8.5 bhp பவர், 1.0 kgm டார்க். 110 சிசி ஆக்டிவாவைவிட 0.5 bhpதான் அதிகம். காலை நேரங்களில் கார்புரேட்டர் இன்ஜினுக்கு உதவி புரிய, ஹேண்டில் பாருக்குக் கீழே சோக் நாப் உண்டு. BS-4 இன்ஜின், புகை கக்குவதே தெரியவில்லை. 0-60 கி.மீ வேகத்தை 9.29 விநாடிகளில் கடக்கிறது ஆக்டிவா 125. செல்ஃப் ஸ்டார்ட் இருந்தாலும், அவசரத்துக்கு கிக் ஸ்டார்ட் ஆப்ஷனும் இருக்கிறது. மற்ற ஸ்கூட்டர்களில் ஸ்பாஞ்ச் ஏர்ஃபில்டர் இருக்க, இதில் விஸ்கஸ் பேப்பர் ஃபில்டர். ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம். ரீஃபைண்டு பவர் டெலிவரி, ஆக்ஸிலரேட்டரை முறுக்கும்போது தெரிகிறது. மிட் ரேஞ்சில் நல்ல ஸ்ட்ராங். நம் ஊர்ச் சாலைகளில் ஈஸியாக ஓவர்டேக் செய்யலாம். 90 கி.மீ டாப் ஸ்பீடில் சென்னையில் ஆடாமல் அசையாமல் பறந்தது ஆக்டிவா.

மைலேஜ்

செம ஆக்டிவ்!தனது HET தொழில்நுட்பம், ஆக்டிவாவின் மைலேஜுக்கு பெரிதும் உதவுவதாகச் சொல்கிறது ஹோண்டா. நமது ஓட்டுதல் முறைக்கு, ஒரு லிட்டருக்கு ஆவரேஜாக 45.5 கி.மீ மைலேஜ் கொடுத்தது ஆக்டிவா 125.

க்டிவாவை ஓட்டும்போது ஒரு ப்ரீமியம் ஃபீல் தெரிவது நிஜமே. அதற்காக இதன் சென்னை ஆன்-ரோடு விலை ரூபாய் 72,981 என்பது கொஞ்சம் அதிகம்தான். இது 125 சிசி பைக்கின் விலை. ‘பரவாயில்லை’ என்று விலையைக் கருத்தில் கொள்ளாமல், ஆக்டிவாவைத் தேடி ஓடுபவர்கள் இருக்கிறார்கள். சர்வீஸ், ஸ்பேர்ஸ், பராமரிப்பு என்று எல்லா விஷயத்திலும் ‘ஆக்டிவா வாங்கினா எந்தத் தொந்தரவும் இருக்காது’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதுதான் இதற்குக் காரணம்.