Published:Updated:

இங்கிலாந்தின் இசைப்பறவை!

இங்கிலாந்தின் இசைப்பறவை!
பிரீமியம் ஸ்டோரி
இங்கிலாந்தின் இசைப்பறவை!

டெஸ்ட் டிரைவ் - ராயல் என்ஃபீல்டு புல்லட் 350ராகுல் சிவகுரு, படங்கள்: மீ.நிவேதன்

இங்கிலாந்தின் இசைப்பறவை!

டெஸ்ட் டிரைவ் - ராயல் என்ஃபீல்டு புல்லட் 350ராகுல் சிவகுரு, படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
இங்கிலாந்தின் இசைப்பறவை!
பிரீமியம் ஸ்டோரி
இங்கிலாந்தின் இசைப்பறவை!

டட் டப... டட் டப டட்... எனத் தனது வருகையை அறிவிக்கும் ராயல் என்ஃபீல்டின் புல்லட் 350 பைக், எல்லோருக்குமான பைக்காக மாறிவிட்டது. காலங்கள் மாறினாலும், தேர்ந்த இசைக்கலைஞனின் இசையைப் போன்ற இதன் லயமான துடிப்பு, பலரை அடிமையாக்கி வைத்திருக்கிறது; இளைஞர் களை இன்னும் இன்னும் வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ‘ONE RIDE 2017’ நிகழ்வில், புல்லட்டில் சாரதியாக வலம் சென்றோம். புல்லட்டின் சிறப்பு இதன் சத்தம் மட்டுமா? இல்லை... வேறு பல விஷயங்களும் உள்ளன...

இங்கிலாந்தின் இசைப்பறவை!

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

புல்லட்டின் பாரம்பர்ய வடிவமைப்பை, புதிய புல்லட் 350 அப்படியே தன்வசம் கொண்டிருக்கிறது. அதுதான் கிளாஸிக் 350 மாடலில் இருந்து இதைத் தனித்துத் காட்டுகிறது. ஆனால், புதிதாகத் தெரிவதற்காக சிலவற்றைச் சேர்த்திருக்கிறார்கள்.  க்ரோம் கவர் கொண்ட ஹெட்லைட் - பார்க்கிங் லைட், இண்டிகேட்டர்கள் மற்றும் பேட்டரி பாக்ஸ் ஆகியவை கிளாஸிக் தோற்றத்தில் இருந்தாலும், வட்ட வடிவில் இருக்கும் ரியர்வியூ மிரர்களுக்கு க்ரோம் பூச்சு இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த 4ஜி டிஜிட்டல் யுகத்தில், க்ரோம் பட்டையுடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான் புல்லட் 350 பைக்கில் இருக்கிறது. தண்டர்பேர்டு பைக்கில் இருக்கும் டேக்கோ மீட்டர் மற்றும் ஃப்யூல் கேஜ் இதில் இல்லை. அதற்குப் பதிலாக ஆம்பியர் (பேட்டரி) மீட்டரைக் கொடுத்திருக்கிறார்கள். புல்லட் அடையாளங்களில் ஒன்றான 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்கில் வரையப்பட்டிருக்கும் கோடுகள், பிரஷ் கொண்டு கையால் வரையப்பட்டவை. பழைய புல்லட் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த ஃபினிஷ் மற்றும் தரத்தில் முன்னேற்றம் தெரிகிறது; ஆனாலும், பைக்கின் விலையுடன் ஒப்பிடும்போது, இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

புல்லட் 350-ல் இருப்பது, எலெக்ட்ரா - கிளாஸிக் - தண்டர்பேர்டு ஆகிய பைக்குகளில் இருக்கும் அதே 350சிசி இன்ஜின்தான். எனவே, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - லிக்விட் கூலிங் இல்லை. அதற்குப் பதிலாக, இந்த ஏர் கூல்டு ட்வின்-ஸ்பார்க் இன்ஜின், 29மிமீ Constant Vacuum கார்புரேட்டரையே பயன்படுத்துகிறது. கம்யூட்டர் பைக்கிலேயே அடிப்படை அம்சமாக இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் இதில் இல்லை. கிக்கரைச் சரியாக அடித்ததும், புல்லட்டின் டிரேட் மார்க் சத்தம் அதிரடிக்கிறது. 19.8bhp பவரை 5250 ஆர்பிஎம்மிலும், 2.8 kgm டார்க்கை 4000 ஆர்பிஎம்மிலும் இது வெளிப்படுத்துகிறது. இதனுடன் 5-ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. குறைவான ஆர்பிஎம்களிலேயே அதிக டார்க் கிடைப்பதுதான் இதன் ப்ளஸ். நகரப் பயன்பாட்டின் போதும், நெடுஞ்சாலையில் சுமார் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்யும்போதும் அருமையான அனுபவத்தைத் தருகிறது.

இங்கிலாந்தின் இசைப்பறவை!

ஆனால், முன்னே செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்வதற்காக ஆக்ஸிலரேட்டரைக் கூட்டினால், பைக்கின் அதிக எடை காரணமாக வேகமெடுப்பதில் சுணக்கம் தெரிகிறது. தவிர, இந்த நேரத்தில் பவர் குறைபாடும், அதிக அதிர்வுகளும் அப்பட்டமாகத் தெரிகின்றன. வழக்கமான பைக்குகளுடன் ஒப்பிடும்போது, புல்லட் 350-ன் கிளட்ச் சற்று அதிக எடையுடன் இருக்கிறது. மேலும், கியர் மாற்றுவதற்கும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

சிங்கிள் டவுன் ட்யூப் ஃப்ரேம்தான் புல்லட் 350 பைக்கின் முதுகெலும்பு. முன்பக்கத்தில் வழக்கமான 35மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் 5 பாயின்ட் அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்ஸார்பரும் உண்டு. சீட்டிங் பொசிஷன், நீண்ட நேரம் மற்றும் தூரம் உட்கார்ந்து ஓட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. சிங்கிள் பீஸ் இருக்கையின் குஷனிங் வசதியாகவே உள்ளது. ஹிமாலயன் போல மோனோஷாக் சஸ்பென்ஷன் இல்லாவிட்டாலும், நகரச் சாலைகளிலும் சரி; நெடுஞ்சாலையிலும் சரி; ஓட்டுதல் தரம் சொகுசாகவே இருக்கிறது.

அவென்ஜர் க்ரூஸ் 220 பைக்கில் இருப்பதுபோல, பின்னால் அமர்ந்திருப்பவருக்கு பேக்ரெஸ்ட் வசதி கொடுத்திருக்கலாம். புல்லட் 350, ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் அல்ல; டூரிங் / க்ரூஸர் பைக்தான். ஆகவே, பைக்கை விரட்டாமல், நிதானமாகவே ரசித்து ஓட்டும்போதுதான், இந்த பைக்கின் அசத்தலான ஓட்டுதலை முழுமையாக அனுபவிக்க முடியும்.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 19 இன்ச் சியட் டயர்கள் மெலிதாக இருக்கின்றன. ஏபிஎஸ், சிபிஎஸ் என பிரேக் தொழில்நுட்பம் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னும் டிரம் பிரேக்கையே நம்பியிருக்கிறது புல்லட் 350. இவ்வளவு பெரிய பைக்கை நினைத்த நேரத்தில் நிறுத்துவதற்கு, முன்பக்கம் 7 இன்ச் டிரம் பிரேக்கும் - பின்பக்கம் 153 மிமீ டிரம் பிரேக்கும் போதவில்லை. ராயல் என்ஃபீல்டு பைக்கிலேயே குறைவான எடையுள்ள பைக் புல்லட் 350தான் (183 கிலோ). செல்ஃப் ஸ்டார்ட், டிஸ்க் பிரேக்ஸ், தடிமனான டயர்கள் போன்ற விஷயங்கள் இல்லாததே இதற்குக் காரணம். இவையெல்லாம் ஒன்று சேரும்போது, கொஞ்சம் துடிப்புமிக்க ஹேண்ட்லிங் கிடைக்கிறது. அதற்காக இதனை ஸ்போர்ட்டியான ஸ்ட்ரீட் பைக்குகளுடன் ஒப்பிடக் கூடாது.

முதல் தீர்ப்பு

புல்லட் 350 மாடல் மூலம், தனது வரலாற்றுப் பக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. பழைய புல்லட்டின் சிறப்பம்சங்கள் கெடாமல், அதேபோல், காலத்துக்கு ஏற்றதுபோல சில மாற்றங்களுடன்கூடிய ஒரு பைக்காக இருக்கிறது புல்லட்-350. BS-IV விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் புல்லட் 500 பைக்கில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தைச் சேர்த்துவிட்டது. எனவே, புல்லட் 350 பைக்தான் ராயல் என்ஃபீல்டு பைக்குக்கே உரிய அத்தனை விஷயங்களையும் கொண்டிருக்கிறது. ஆனால், பைக்கின் விலையுடன் ஒப்பிடும்போது, வசதிக் குறைபாடுகள் இருப்பதைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.