Published:Updated:

மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!

மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!
பிரீமியம் ஸ்டோரி
மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!

பழைய கார் மார்க்கெட் - மாருதி ஸ்விஃப்ட் தமிழ் , படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!

பழைய கார் மார்க்கெட் - மாருதி ஸ்விஃப்ட் தமிழ் , படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!
பிரீமியம் ஸ்டோரி
மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!

சில எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு -  செகண்ட், தேர்டு ரிலீஸ்களின்போதுகூட தியேட்டர்களில் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்டுவார்கள் . மாருதி ஸ்விஃப்ட்,  புதுசிலும் சரி; பழைய மார்க்கெட்டிலும் சரி - அப்படிப்பட்ட ரகம்தான்.

‘‘இப்போதான் முதன்முதலா கார் வாங்கப் போறேன்! மூன்று லட்ச ரூபாய் பட்ஜெட்...’’ என்று சென்னையைச் சேர்ந்த கண்ணன் என்கிற பாலாஜி, நம்மிடம் ஐடியா கேட்டபோது... மைக்ரா, போலோ, கிராண்ட் i10, ஃபிகோ என்று லோ-பட்ஜெட் கார்களின் பட்டியலை நீட்டினோம். ‘‘ஸ்விஃப்ட்தான் சார் என்னோட சாய்ஸ். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. எங்க வீட்லேயும் எல்லோரோட சாய்ஸும் ஸ்விஃப்ட்தான்!’’ என்று ‘ஆத்தா வைய்யும்’ என்பதுபோல் அடம்பிடித்தார்.

மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!

ஒருவகையில் பாலாஜியின் அடமும் சரிதான். போலோ போன்ற பெட்ரோல் கார்கள், ஸ்டைலிலும் டிரைவிங்கிலும் பெப்பியாக இருந்தாலும், ஸ்விஃப்ட் அளவுக்குச் சிக்கனப் பேர்வழி கிடையாது. போலோவின் பம்பர் 7,000 ரூபாயாக இருந்தால், ஸ்விஃப்ட்டின் பம்பர் விலை 3,500 ரூபாயாகத்தான் இருக்கும். அதேபோல், லிஸ்ட்டில் இருக்கும் மற்ற கார்களைவிட, மைலேஜ், டிரைவிங், பராமரிப்பு போன்ற எல்லா விஷயங்களிலும் நிம்மதிக்கு கேரன்ட்டி தரும் ஸ்விஃப்ட். அதனால்தான் ஸ்விஃப்ட்டைத் தேடி ஓடி வருகிறார்கள் பாலாஜி போன்றவர்கள்.

பெட்ரோல் ஸ்விஃப்ட்தான் அவரின் சாய்ஸாக இருந்தது. ‘‘டீசல் காரைவிட பெட்ரோல்தான் நம்மோட ஆல்டைம் ஃபேவரைட். விலையும் கம்மி; பராமரிப்பும் ஈஸி. இன்னும் கொஞ்ச நாள்ல டீசல் விலைக்கு பெட்ரோலும் வந்துடும் பாருங்க!’’ என்று அவர் சொன்னதை வழிமொழிந்தார், சென்னையில் பழைய கார் ஷோரூம் நடத்திவரும் ‘ராஜாபாதர் கார்ஸ்’ உரிமையாளர் ராஜாபாதர் மோகன்.

‘‘இப்போதான் ஒரு ஸ்விஃப்ட் வந்துச்சு. பெட்ரோல்; 67,000 கி.மீ ஓடியிருக்கு... 2006 மாடல்; 2.60 ரூபாய் சொல்றாங்க!’’ என்று ஒரு பழைய கிரே கலர் ஸ்விஃப்ட்டைக் காண்பித்தார். வழக்கம்போல் லேசான கீறல்கள், தேய்மானங்கள் அங்கங்கே இருந்தாலும், புதிதாக மாற்றப்பட்ட நான்கு டயர்களும் ஸ்விஃப்ட்டை கெத்தாகவே காட்டியது. ZXI என்பதால், 15 இன்ச் டயர்கள் இருந்தன. இதுவே VXI-ல் 14 இன்ச்தான். பொதுவாக பழைய கார் வாங்குபவர்கள், 50,000 கி.மீ முதல் 80,000-க்கு மேல் ஓடியிருந்தால், டயர்களும் மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் செக் செய்வது நல்லது. சிலர் ஸ்டெஃப்னியை மறந்துவிடுவார்கள். அதேபோல், டயர்களின் ஏதோ ஓர் ஓரம் மட்டும் தேய்ந்திருந்தால், வீல் அலைன்மென்ட் சரியில்லை என்று அர்த்தம். ‘‘பொதுவாக அலாய் வீல் கொண்ட கார்களில் வீல் அலைன்மென்ட் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை’’ என்றார் ராஜாபாதர்.

மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!

சிலருக்கு, ‘கார் ஏதும் அடிபட்டிருக்கிறதா? விபத்து ஏற்பட்டிருக்கிறதா’ என்று சந்தேகம் வரும். அதைக் கண்டுபிடிக்க ஒரு முக்கியமான டிப்ஸ் கொடுத்தார் ராஜாபாதர். ‘‘கார்களின் கதவுகளைத் திறந்து, அதன் பீடிங்கை கைகளால் தடவிப் பார்க்க வேண்டும். குட்டிக் குட்டியாக சில பஞ்ச்கள், அதாவது பள்ளங்கள் இருந்தால் அது விபத்தில் அடிபடாத கார். விபத்தில் அடிபட்டிருந்தால், அந்த பீடிங் மொழுக்கென இருக்கும். இதேபோல், டிக்கி முதல் மற்ற ஏரியாக்கள் அனைத்திலும் இதைச் சோதனை செய்ய வேண்டும்’’ என்றார்

ஸ்விஃப்ட்டில் ஒரு மிகப் பெரிய குறையே - அதன் பூட் ஸ்பேஸ்தான். க்விட், டட்ஸன் போன்ற குட்டி கார்களிலேயே 300 மற்றும் 222 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்க, அதைவிடப் பெரிய காரான ஸ்விஃப்ட்டில் இருப்பது வெறும் 205 லிட்டர்தான். அதேபோல் வீல்பேஸும் 2,430 மிமீதான் என்பதால், பின் பக்க இடவசதியும் கொஞ்சம் நெருக்கடியாகவே இருக்கும். ஆனால், இந்தக் குறைகளையெல்லாம் ஓட்டுதல் விஷயத்தில்   ஈடுகட்டிவிடும்் ஸ்விஃப்ட். கிராண்ட் i10, மைக்ரா, டட்ஸன் போன்ற கார்களைவிட ஸ்விஃப்ட்டை ஓட்டுவதற்கு செம ஜாலியாக இருக்கும். ‘‘எனக்குத் தெரியும்; அதான் ஸ்விஃப்ட் தேர்ந்தெடுத்திருக்கேன். ஒரு ரைடு போலாமா?’’ என்று சாவியை வாங்கிப் பார்த்துவிட்டு, தி.நகரில் இருந்து அடையார் வரை ஒரு ரவுண்டுக்குக் கிளம்பினார் பாலாஜி. ‘‘ஸ்விஃப்ட்டின் டீசல் இன்ஜின்தான் ஃபியட்டோடது. பெட்ரோல் மாருதியோடது. புதிய ஸ்விஃப்ட்டில் இருப்பது மாருதியின் 1.2 லி K-Series இன்ஜின். பழசில் சாதாரண 1.2 லி இன்ஜின். ஆரம்பத்தில் இருந்தே ஸ்விஃப்ட்டின் பெட்ரோல் பவர் 87bhpதான். ‘‘மைலேஜ் சிட்டிக்குள்ள கண்டிப்பா 14 வரும். ஹைவேஸில் நிச்சயம் 18 கிடைக்கும்’’ என்றார் ராஜாபாதர். ஒரு காரின் நிலைத்தன்மையை நெடுஞ்சாலையிலும், ஓட்டுதல் தரத்தை நெருக்கடியான போக்குவரத்திலும் அறியலாம். ஆனால், காரின் கையாளுமையை குட்டிக் குட்டி ரிவர்ஸ்களிலும், சின்னச் சின்ன சந்து பொந்துகளிலும்தான் உணர முடியும். அதனால், காரை ரிவர்ஸ் எடுத்து, குறுகலான சந்துக்குள் செலுத்தி பாலாஜியை சோதனை செய்யச் சொன்னார் ராஜாபாதர். இந்த மாதிரி நேரங்களில் எக்ஸாஸ்ட்டில் இருந்து கறும்புகை வருகிறதா; வெள்ளைப் புகை வருகிறதா என்பதையும் சோதனை செய்து கொள்ளலாம்.

மெட்ரோ சிட்டிக்கு பெட்ரோல் ஸ்விஃப்ட்!

பாலாஜிக்கு, ஸ்விஃப்ட்டைவிட மனசில்லை. விலை பற்றிய விஷயங்களை விசாரித்தார். 2.70 லட்ச ரூபாய்; 2.65 லட்ச ரூபாய்க்கு முடிக்கலாம் என்று பேசப்பட்டது. 2014 ஸ்விஃப்ட் பெட்ரோலின் விலையே கிட்டத்தட்ட 5.5 லட்ச ரூபாய்க்கு வரும்போது, 2006 மாடல் ஸ்விஃப்ட்டுக்கு 2.70 லட்ச ரூபாய் என்பது சரியான விலைதான். மேலும் இது மூன்றாவது ஓனர் என்பதால், இன்னும் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ZXI மாடல் என்பதால், பவர் விண்டோஸ், ஸ்டீரியோ, அலாய் என்று பல ஆப்ஷன்கள். மறுநாள் ராஜாபாதருக்கு போன் செய்தபோது, ‘‘பாலாஜி, 2.20 லட்ச ரூபாய்க்கு அந்த ZXI ஸ்விஃப்ட்டை டெலிவரி எடுத்துட்டாருங்களே!’’ என்றார்.

இந்த அதிரடிதான் பழைய கார் மார்க்கெட்டில் ஸ்விஃப்ட்டின் ஸ்பெஷல்!

வாசகர் தீர்ப்பு...

‘‘அதிகமா  பயணம் செய்வீர்கள் என்றால் டீசல்; குறைவாக என்றால் பெட்ரோல் - இதுதான் கார் வாங்குவதற்கான அடிப்படை. ஆனால், என்னைப் பொறுத்தவரை, சென்னை போன்ற மெட்ரோ சிட்டிக்கு, பெட்ரோல்தான் பெஸ்ட் சாய்ஸ். நான் ஏற்கெனவே ஸ்விஃப்ட் ஓட்டியிருப்பதால், வேறு கார்கள் மீது எனக்கு ஈடுபாடு இல்லை. இதே விலைக்கு போலோகூட கிடைத்தது. ஆனால், ஸ்விஃப்ட்டைத் தாண்டி மனசு போகவில்லை. அடையாறு வரைக்கும் போயிட்டுவந்தேன். அற்புதமான எக்ஸ்பீரியன்ஸ். வீல்பேஸும், பூட் ஸ்பேஸும்தான் ஸ்விஃப்ட்டின் மைனஸ். ஆனா, செம டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குதே! இன்னும் 1 லட்சம் கி.மீ வரை இதை ஜாலியா ஓட்டுவேன்!’’