Published:Updated:

Accessories

Accessories
பிரீமியம் ஸ்டோரி
Accessories

தமிழ்

Accessories

தமிழ்

Published:Updated:
Accessories
பிரீமியம் ஸ்டோரி
Accessories

இரிடியம் ஸ்பார்க் ப்ளக் - NGK / BOSCH

தீப்பொறி திருமுகம்!

Accessories
Accessories

பெட்ரோல் கார்களின் பெர்ஃபாமென்ஸுக்கு ரொம்ப முக்கியமானது, ஸ்பார்க் ப்ளக். சொல்லப்போனால், இதற்கு SI (ஸ்பார்க் இக்னீஷன்) இன்ஜின் என்று இன்னொரு பெயரே உண்டு. இன்ஜின் சிலிண்டருக்குள் செலுத்தப்படும் எரிபொருள் + காற்று கலவையை சரியான நேரத்தில் எரியூட்டுவது ஸ்பார்க் ப்ளக்தான். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சில பைக்குகள், திடீரென ஸ்டார்ட் ஆகாமல் நடுரோட்டில் நிறுத்திப் பொறுமையைச் சோதிக்கும். இம்மாதிரி நேரங்களில் ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றிச் சுத்தம் செய்து மீண்டும் முயன்று பாருங்கள். ‘அழுத குழந்தை பால் குடித்துச் சிரித்தது மாதிரி’ சந்தோஷமாக பைக் கிளம்பத் தயாராக இருக்கும். ஸ்பார்க் ப்ளக்குகளில் இரிடியம் என்பது பிரீமியம் லெவல். அதாவது, பெர்ஃபாமென்ஸ் கார்களில்தான் இரிடியம் ஸ்பார்க் ப்ளக் பயன்படுத்துவார்கள். சாதா ஸ்பார்க் ப்ளக்குக்கும் இரிடியத்துக்கும் நிறைய வித்தியாசங்கள். இதன் முனையில் விலை மதிப்புமிக்க இரிடியம் உலோகம் இருப்பதால், தீப்பொறி திருமுகம் லெவலுக்கு வேலையைக் காட்டும். அதாவது, இந்த எலெக்ட்ரோட்களில் எரிதல் விரைவாகவும் பவராகவும் இருக்கும். இதன் காரணமாக, கார்பன் ஸ்மோக் அளவுகளில் மாறுதல் தெரியும். ஸ்மூத் ஆக்ஸிலரேஷனும் கூடுதல் மைலேஜும் நிச்சயம். சாதாரண ப்ளக்குகளைவிட இதன் ஆயுட்காலமும் அதிகம். அதேபோல், விலையும் அதிகம். சாதா பைக் ப்ளக் 100 ரூபாய்க்குள் இருந்தால், இரிடியம் ப்ளக்கின் விலை 600 ரூபாயைத் தாண்டும். காருக்கு என்றால், சிலிண்டர் எண்ணிக்கையைப் பொறுத்து ப்ளக்குகளின் நம்பரும் விலையும் மாறும். இதில் BOSCH மற்றும் NGK இரண்டும்தான் மோஸ்ட் வான்டட்!

ரூஃப் ரெயில் - ஆஸ்கார்

நானும் டால் பாய்தான்!

Accessories

டால் பாய் டிசைனுக்கு முக்கிய காரணகர்த்தா, ரூஃப் ரெயில். வேகன்-ஆர், ஸ்பார்க் போன்றவை சின்ன கார்கள்தான்; ஆனால், ஏதோ க்ராஸ்ஓவர் கார்கள்போல், ‘ஆஃப் ரோடிங் போலாமா’ என்பதுபோல் கெத்து காட்டக்கூடியவை. சாதாரண க்விட்டையும், ரூஃப் ரெயில் உள்ள க்ளைம்பர் க்விட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மை உங்களுக்குப் புரியும். கார்களின் டாப்பில் கேரியரையும் வைத்து, எக்கச்சக்க பொருள்களை ரூஃப் ரெயிலில் கட்டிவிட்டு, ‘கார்கோ விமானம்’ போல் பறக்கலாம். சிலர் ஆன்டெனாவைக்கூட ரூஃப் ரெயிலில் செருகி வைத்திருப்பார்கள். சிலர் உச்சகட்டமாக சைக்கிளையெல்லாம் ஏற்றிக்கொண்டு கிளம்புவார்கள். டிக்கியில் பொருள்களை வைப்பதைவிட, ரூஃபில் உள்ள கேரியரில் ஏற்றும்போது காரின் இன்ஃபோர்ஸ்மென்ட் பாதிக்கப்படாது. டிக்கியில் அதிகமாக பொருட்களை வைக்கும்போது, வீல் ஆர்ச்சுக்கும் டயருக்கும் உண்டான இடைவெளி குறைந்து, கார் சில நேரங்களில் தடுமாறும். ரூஃப் ரெயில்கள் தனியாகவே மார்க்கெட்டில் வந்துவிட்டன. ஆஸ்கார் என்னும் நிறுவனம் எடை குறைவான, உறுதியான ரூஃப் ரெயில்களைத் தயாரிப்பதாகச் சொல்கிறது. கார்களின் அளவுக்கு ஏற்ப விலையும் மாறுகிறது. ஒரு முக்கியமான விஷயம்: ரூஃப் ரெயிலில் அளவுக்கதிகமான பொருள்களை ஏற்றுவது காரின் ஏரோ டைனமிக்ஸைக் குறைத்து, காரின் நிலைத்தன்மையை நிச்சயம் பாதிக்கும்.

ஆன்ட்டி ஸ்லிப் மேட் - ஸ்பார்கோ

இனி வழுக்காது!

Accessories

சில கார்களில் பொருள்கள் வைக்க க்ளோவ் பாக்ஸ், கப் ஹோல்டர்கள் இருக்காது. போன் வைக்க, டோல்கேட் பில்கள் வைக்க, சில்லறைகள் வைக்க எல்லாவற்றுக்குமே அடிபிடியாகத்தான் இருக்கும். அவசரத்தில் சிலர் டேஷ்போர்டில் போனை வைத்துவிட்டு கார் ஓட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், சடன் பிரேக்குகளில் அல்லது திருப்பங்களில் போன், ஆஸ்திரேலிய பௌலர்களிடம் மாட்டிக்கொண்ட பந்து மாதிரி தூக்கி எறியப்பட்டிருக்கும். இந்தத் தொல்லைகளைச் சமாளிக்கத்தான் ஆன்ட்டி ஸ்லிப் மேட் இருக்கிறது. பெரிய தொழில்நுட்பமெல்லாம் இல்லை. ‘மவுஸ்பேட்’ போன்ற விஷயம்தான். ‘சொர சொர’ தன்மை கொண்ட மேட்டை, டேஷ்போர்டில் வைத்துவிட்டால் ‘பச்சக்’ என ஒட்டிக்கொள்வதோடு, ‘சீட் பெல்ட்’ மாதிரி பொருள்களையும் கீழே சரியாமல் பாதுகாத்துக்கொள்கிறது. இனி தைரியமாக ஆன்ட்டி ஸ்லிப் மேட் கொண்ட டேஷ்போர்டுகளில் பொருள்களை வைத்துவிட்டு காரில் பறக்கலாம்.