Published:Updated:

இது என்னோட பென்ஸ்!

இது என்னோட பென்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இது என்னோட பென்ஸ்!

ரீடர்ஸ் ரெவ்யூ - டாடா ஹெக்ஸாதொகுப்பு: வெ.வித்யா காயத்ரி , படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

இது என்னோட பென்ஸ்!

ரீடர்ஸ் ரெவ்யூ - டாடா ஹெக்ஸாதொகுப்பு: வெ.வித்யா காயத்ரி , படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
இது என்னோட பென்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இது என்னோட பென்ஸ்!

நான் பணி நிமித்தம் அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணிப்பேன். எனவே, அதற்கு கார் அவசியத் தேவையாகிவிட்டது. முதலில் டாடா சஃபாரி வைத்திருந்தேன். அந்த கார் எனக்கு முழுத் திருப்தியை அளிக்கவில்லை. அதன் பின்னர் என் நண்பர்களின் பரிந்துரையின் பேரில் டாடா ஹெக்ஸா கார் பற்றிக் கேள்விப்பட்டேன். ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்' என்பார்களே... அதுபோல், ஹெக்ஸாவைப் பார்த்த உடனே நான் மயங்கிவிட்டேன்.

இது என்னோட பென்ஸ்!

ஷோரூம் அனுபவம்

கோயம்புத்தூரில் உள்ள டாஃபேயில் ஹெக்ஸா காரை புக் செய்யச் சென்றேன். மேனுவல், ஆட்டோமேட்டிக் இரண்டையும் பற்றி எடுத்துச் சொன்னார்கள். எனக்கு மேனுவல்தான் மிகவும் பிடித்திருந்தது. டிரைவிங்குக்கு எப்போதுமே அதுதான் பெஸ்ட். 11,000 ரூபாய் முன்பணம் செலுத்தி மேனுவல் ஹெக்ஸாவை புக் செய்தேன். சொன்ன நேரத்தில் எனக்கு காரை டெலிவரி செய்தார்கள். நான் ரொம்ப ஹேப்பி!

பிடித்தவை

எனது பழைய டாடா சஃபாரியோடு ஒப்பிடும்போது, ஹெக்ஸா உறுதியான கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. ஹெக்ஸாவுக்குப் பலமே அதன் கம்பீரமான தோற்றம்தான். சில கார்களில் டிசைன் மிரட்டலாக இருக்கும். ஆனால், உள்ளே அடிபிடிச் சண்டையாக இருக்கும். முதுகுவலி, கால்வலியெல்லாம் வரும். ஆனால், ஹெக்ஸாவில் உள்ளேயும் இடவசதி சூப்பர். சீட்கள் சொகுசாக உள்ளன. காரணம், மல்ட்டி டென்ஸிட்டி ஃபோம் கொண்ட சீட்டுகள். எவ்வளவு தூரம் போனாலும் சொகுசாகவே இருக்கிறது. வலியில்லா சுகமான பயண அனுபவத்தைத் தருகின்றன இதன் சீட்கள்.

இது என்னோட பென்ஸ்!

ஸ்டீயரிங் செட்-அப்பும் சூப்பர். ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏ.சி செட்-அப் உள்ளது. எல்லாம் சேர்ந்து, காரை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றுகிறது. எஸ்யூவி என்றால், சஸ்பென்ஷன்தானே முக்கியம். சஸ்பென்ஷனிலும் சொகுசு காட்டுகிறது ஹெக்ஸா. 19 இன்ச் வீல்கள், வேறு எந்த டாடா கார்களிலும் இல்லை. 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், மேடு பள்ளங்களைப் பற்றிக் கவலை படத் தேவையில்லை. எந்த அதிர்வுகளும் இல்லை. ரைடிங்கில் செம கம்ஃபர்ட். வசதியான, சொகுசான பயண அனுபவம் ஒவ்வொரு நாளும் கிடைக்கிறது. 4 டிரைவிங் மோடுகளும் சூப்பர். ரிவர்ஸ் கேமரா வசதியாக இருக்கிறது.

மேனுவல் கியர்பாக்ஸ் ஹெவியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படி எதுவும் ஃபீல் இல்லை. ‘ஏ' பில்லர், சாலையை லேசாக மறைக்கிறது. மூன்றாவது வரிசை இடவசதி குறைவுதான் என்றாலும், எனது பழைய சஃபாரியைவிட சூப்பர். அனைவரும் உட்கார்ந்த பிறகு, பூட் ஸ்பேஸ் 128 லிட்டர்தான். ஆனால், வேறு வழியில்லை. மற்றபடி, என்னைப் பொறுத்தவரை பிடிக்காத அம்சங்கள் ஹெக்ஸாவில் இல்லை. சொல்லப்போனால், பென்ஸ் காருக்கு இணையாக நான் ஹெக்ஸாவைச் சொல்வேன்.

தீர்ப்பு

எந்த அலுப்பும் இல்லாமல் சொகுசாகப் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஹெக்ஸா சரியான சாய்ஸாக நிச்சயம் இருக்கும். ஆனால், இதன் விலை சற்று அதிகம்தான்.