இந்தியாவில் யுட்டிலிட்டி வகை கமர்ஷியல் வாகனங்களுக்கான செக்மென்ட்டில், 29 சதவிகித மார்க்கெட் ஷேர் மஹிந்திராவிடம்தான். ஒரு டன் (1,050 கிலோ) வரையிலான யுட்டிலிட்டி வாகனங்களைப் பொறுத்தவரை, சின்ன யானை என்று அன்போடு அழைக்கப்படும் டாடா ஏஸ், அசைக்க முடியாத முன்னிலையுடன் இருக்கிறது. அதேபோல 700 கிலோ வரையிலான பே-லோடு கொண்ட யுட்டிலிட்டி வாகனப் பிரிவில், ஜீத்தோ வாயிலாக 53 சதவிகித மார்க்கெட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது மஹிந்திரா. டாடா ஏஸ் மற்றும் மேஜிக் ஆகியவற்றுக்குப் போட்டியாக, சுப்ரோ மினி டிரக் மற்றும் சுப்ரோ மினி வேன் இருக்கின்றன. S, L, X, Digisense, CNG என ஏற்கெனவே பல வேரியன்ட்களில் ஜீத்தோ விற்பனை செய்யப்பட்டாலும், டாடா மேஜிக் ஐரிஸ் போல இங்கு பாசஞ்சர் மாடல் இல்லாதது குறையாகவே இருந்தது. எனவே, சுப்ரோ பாணியைப் பின்பற்றி, ஜீத்தோவிலும் மினி வேன் ஒன்றை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது மஹிந்திரா. இது தற்போது சென்னையில் தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் ஸ்பை படங்களை எடுத்துள்ளார், தாம்பரத்தைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகி எஸ்.செல்வகுமாரி. படங்களைப் பார்க்கும்போது, இதில் 5 சீட் மற்றும் 8 சீட் ஆப்ஷன் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் ஜீத்தோவைப் போல இதுவும் இரு பவர் ஆப்ஷன்களில் வெளிவருவதற்கான சாத்தியங்கள் அதிகம்!