Published:Updated:

மேஸ்ட்ரோ... வசதிகளில் விஞ்ஞானி!

மேஸ்ட்ரோ... வசதிகளில் விஞ்ஞானி!
பிரீமியம் ஸ்டோரி
மேஸ்ட்ரோ... வசதிகளில் விஞ்ஞானி!

ரீடர்ஸ் ரெவ்யூ - ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்தமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார்

மேஸ்ட்ரோ... வசதிகளில் விஞ்ஞானி!

ரீடர்ஸ் ரெவ்யூ - ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்தமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
மேஸ்ட்ரோ... வசதிகளில் விஞ்ஞானி!
பிரீமியம் ஸ்டோரி
மேஸ்ட்ரோ... வசதிகளில் விஞ்ஞானி!

‘‘ஹாய், நான் விக்னேஷ். மாவட்ட அளவில் பாக்ஸரா இருந்தேன். பாடி பில்டரும்கூட. பைக் ஓட்டுறது உயிர். என் ஆர்வத்தையும் உடம்பையும் பார்த்துட்டு ராயல் என்ஃபீல்டு கம்பெனியில் டெஸ்ட் ரைடர் வேலைக்குக் கூப்பிட்டாங்க. பாக்ஸரா இருந்த நான், ரைடர் விக்னேஷ் ஆனேன். புல்லட்டுங்க மேலதான் எனக்கு ரொம்ப கனெக் ஷன். 600 கி.மீ-யை சாதாரணமா 5 மணி நேரத்துல கடக்கிறது என்னோட வேலையாவே ஆயிடுச்சு.

மேஸ்ட்ரோ... வசதிகளில் விஞ்ஞானி!

ஏன் மேஸ்ட்ரோ எட்ஜ்?

எல்லா புல்லட்டும் ஓட்டியிருக்கேன். ஆனா, என்கிட்ட புல்லட் பைக் இல்லை. வீட்ல புல்லட் பைக் வாங்கக் கூடாதுன்னு திட்டு. காரணம், ஒரு ஆக்ஸிடென்ட். அதுதான் ‘ஸ்கூட்டர் வேணா வாங்கிக்கோ’னு அப்பா பெர்மிஷன் கொடுத்தார். ஆக்டிவா வாங்கினேன். அது ஏகப்பட்ட கி.மீ ஓட்டி போர் அடிச்சுடுச்சு. ஸ்கூட்டரை மாத்தவும் பெர்மிஷன் கிடைச்சது. ஏப்ரிலியா, யமஹா ரே பார்த்தேன். புல்லட் ஓட்டின எனக்கு எல்லாமே லைட் வெயிட்டாவே இருந்துச்சு. ‘உன் எடைக்கு எல்லாமே கொசு மாதிரி இருக்குடா’னு கமென்ட்ஸ் வந்துச்சு. அப்புறம்தான் மேஸ்ட்ரோ பத்தி மோ.வி-யில படிச்சேன். 110 கிலோ எடை, என்னோட எடையை ஒப்பிடும்போது கம்மிதான். இருந்தாலும், இதோட ஸ்டைல் ரொம்பப் பிடிச்சுடுச்சு. கமென்ட்ஸும் பாஸிட்டிவ் ஆகவே வந்துச்சு. திருவொற்றியூர் தர்ஷன் மோட்டார்ஸில் புக் பண்ணின ஒரே வாரத்தில் டெலிவரி கொடுத்துட்டாங்க.

பிடித்தது

ஹீரோவில் பெண்களுக்கான ஸ்கூட்டர் - டூயட்; ஆண்களுக்கான ஸ்கூட்டர் - மேஸ்ட்ரோ எட்ஜ். ஆனா, டூயட்டைவிட இது 6 கிலோ கம்மி. அதையும் தாண்டி மேஸ்ட்ரோவில் எனக்குப் பிடிச்ச விஷயம், இதோட டிசைன். முன்பக்கம் செம ஸ்டைலா  இருக்கு. வழக்கமா ஹெட்லைட்தான் ஒரு பைக் டிசைனைத் தூக்கிக் காட்டும். ஆனா, இதில் இரண்டு ஏர்-ஸ்கூப் வென்டிலேட்டரே கழுகோட கண்கள் மாதிரி தெரியுது. ரியர்வியூ மிரர் - ஸ்போர்ட்டியா இருக்கு. ட்வின் பார்க்கிங் லைட்டை DRL-ஆகவும் பயன்படுத்திக்கலாம். தூரத்தில் இருந்து வரும்போது, செம ஸ்டைல். நல்லவேளை - இப்போ இருக்கிற மேஸ்ட்ரோவில் Automatic Headlights On வருது. என் ஸ்கூட்டரில் அது இல்லை. AHO எனக்குப் பிடிக்காது. பின் பக்கம் LED டெய்ல் லைட் சூப்பர் ஸ்டைல்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிசைன் - கசகசன்னு ஏகப்பட்ட சுவிட்ச்கள் கொடுத்துக் குழப்பாம, சிம்பிள் அண்டு நீட். ஸ்கூட்டரில் பாஸ் லைட் இருப்பது அருமை. எனக்கு ஒரு சந்தேகம் - எந்த ஸ்கூட்டரிலுமே ஏன் இன்ஜின் கில் சுவிட்ச் இல்லை?

சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், என்னை மாதிரி அவசரக் குடுக்கைகளுக்குப் பயனுள்ளதா இருக்கும். ஒரே ஒரு சாவிதான் - ஆனா 3 வேலை பார்க்குது. இக்னீஷன் ஆன் பண்ண, பெட்ரோல் டேங்க் திறக்க, சீட்டைத் திறக்க... எல்லாத்துக்குமே ஒரே சாவிதான். பெட்ரோல் போட, சீட்டை விட்டுக் கீழே இறங்க வேண்டியதில்லை. அப்புறம், பூட் ஸ்பேஸ் எனக்கு ரொம்பப் பிடிச்ச அம்சம். 22 லிட்டர். இதுபோக, USB சார்ஜிங் பாயின்ட்... நைட் நேரத்துல உள்ளே இருக்கிற லைட்... வசதிகளில் மேஸ்ட்ரோ, நிஜமாகவே வாடிக்கையாளர்களைப் புரிஞ்சுக்கிட்ட ஞானி!

மேஸ்ட்ரோ... வசதிகளில் விஞ்ஞானி!

மேஸ்ட்ரோவின் டயர் கிரிப் சூப்பர். முன் பக்கம் 12; பின்பக்கம் 10 இன்ச் MRF டயர், சூப்பர் கிரிப். எனக்கு விரட்டி ஓட்டுறதுதான் பிடிக்கும். ஸ்பீடா போய் பிரேக் பிடிக்கும்போது, நச்! ஹோண்டாவுக்கு CBS மாதிரி, ஹீரோவில் IBS. இன்டெக்ரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் அருமை. ஒரு பிரேக்கைப் பிடிச்சாலே போதும்; ரெண்டுமே அப்ளை ஆகுது. என் நண்பனோட அவென்ஜருக்கும் எனக்கும் போட்டியே வெச்சோம். பைக் நீளம் குறைவா இருக்கிறதால, கட் அடிச்சு ஓட்டவும் செமையா இருக்கு. ஒரு விஷயம் கவனிச்சீங்களா... இதோட சிசியும் 110; எடையும் 110. மிட் ரேஞ்ச்சுக்குப் பிறகு ஸ்கூட்டர் பறக்குது. மேஸ்ட்ரோவோட மேக்ஸிமம் பே-லோடே 130 கிலோதான்; ஆனா நான் டபுள்ஸ் போனா 200 கிலோவைத் தாண்டிடும். 75 கி.மீ ஸ்பீடுல போனாக்கூடா, ஆடாம அலைபாயாமப் பறக்குது. சீட்டும் நல்லா அகலமாவே இருக்கு. என்னை மாதிரி ஆளுங்களுக்கு இதுதான் சரியா இருக்கும். டயர், ட்யூப்லெஸ்ங்கிறதால கவலையே இல்லை. டெலஸ்கோப்பிங் சஸ்பென்ஷன் அருமை. பிரேக் லாக் கிளாம்ப் இருக்கிறதால, மேடு பள்ளங்களில் ஈஸியா பார்க் பண்ணிக்கலாம்.

பிடிக்காதது

ஆரம்பத்தில் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினா பொறுமையாத்தான் ஸ்கூட்டர் போறது மாதிரி ஒரு ஃபீலிங். ஒருவேளை - பிக்அப் இல்லையோ? இது எல்லாம் ஆரம்ப வேகத்துல மட்டும்தான். இதுவே 50-க்கு மேல ஜாலி ரைடு கிடைக்குது. நான் 90 கி.மீ வரை விரட்டியிருக்கேன். திணறவே இல்லை. அதேபோல், பாடி பிளாஸ்டிக்ஸ் மேல எனக்கு அவ்வளவா உடன்பாடில்லை. ரொம்ப லைட் வெயிட். ஹெட்லைட் பவர், 35Wதான். இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல்லா இருக்கணும். IBS பிரேக்ஸ் எனக்குத் திருப்திதான்; ஆனா, டிஸ்க் இருந்திருக்கலாம். ஆக்டிவா 125, வீகோ, ஏவியேட்டர் ஸ்கூட்டர்களில் எல்லாம் டிஸ்க்தான். டிரம் பிரேக்ஸ் பயன்படுத்த கூச்சமா இருக்கு. மஹிந்திரா மாதிரி சீட் அட்ஜஸ்ட்மென்ட் இருந்திருந்தா, என்னைப் போல  உயரமா இருக்கிறவங்களுக்கு இன்னும் பயனுள்ளதா இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ் விஷயத்தில் நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா, ரொம்ப ஏமாற்றம். சிட்டி ரைடிங்குக்கு எனக்கு 26 கி.மீதான் கிடைக்குது. ஹைவேஸில் 30-ல் இருந்து 32 கி.மீதான் மைலேஜ் கிடைக்குது. அதனால எப்பவுமே டேங்க்கை ஃபில் பண்ணித்தான் வெச்சிருப்பேன். ஒருவேளை - என்னுடைய ரைடிங் ஸ்டைலை மாத்தினா நல்ல மைலேஜ் கிடைக்குமா என்னன்னு தெரியலை. இப்போ விரட்டி ஓட்டுறதைக் குறைக்க ஆரம்பிச்சுருக்கேன்; பார்க்கலாம்.

என் தீர்ப்பு

மேஸ்ட்ரோவில் ஹேண்ட்லிங் ரொம்ப அருமை. கட் அடிச்சு, வளைச்சு ஒடிச்சு ஓட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. செம ஜாலி ரைடுக்கு சூப்பர் ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ.