Published:Updated:

தானா ஓடுற கார்!

தானா ஓடுற கார்!
பிரீமியம் ஸ்டோரி
தானா ஓடுற கார்!

தொழில்நுட்பம் - டிரைவர்லெஸ் கார்தமிழ்

தானா ஓடுற கார்!

தொழில்நுட்பம் - டிரைவர்லெஸ் கார்தமிழ்

Published:Updated:
தானா ஓடுற கார்!
பிரீமியம் ஸ்டோரி
தானா ஓடுற கார்!

கூகுளின் டிரைவர்லெஸ் கார்.. சின்னக் குறிப்புகள்!

* இதில் வழக்கமான பானெட் இருக்காது.
* இரண்டு சீட்டர்தான்.
* எலெக்ட்ரிக் ஆப்ஷன் மட்டும்தான். டாப் ஸ்பீடு 40 கி.மீ.
* முன்பக்கம் ‘மெத்து மெத்து’ தன்மை கொண்ட ஃபோம் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். பாதசாரிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு செட்-அப்.
* கூகுள் ரோடு மேப் படிதான் இது இயங்கும்.
* குட்டிக் குட்டிப் பிராணிகளை இது சென்ஸார் செய்யாது.
* ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டனைத் தவிர வேறு எந்த கன்ட்ரோல்களும் இதில் கிடையாது.

தானா ஓடுற கார்!

மில்லெனியல் ஆண்டில் வயர்லெஸ், ஃபயர்லெஸ், ஜாப்லெஸ், ஸ்லீவ்லெஸ், ஸ்லீப்லெஸ் என எல்லாமே லெஸ் ஆகிவிட்டது. ஆட்டோமொபைல் துறையில் கேட்கவா வேண்டும்? கீலெஸ், ட்யூப்லெஸ், ஏர்லெஸ் - இந்த வரிசையில் வியக்கவைப்பது டிரைவர்லெஸ். அதாவது, டிரைவரே இல்லாமல் தானாகவே ஓடக்கூடிய கார்கள்.

‘டிரைவரே இல்லாமல் காரா? இதெல்லாம் சாத்தியமில்லை’ என்று ஆரம்பத்தில் விமர்சனங்கள் பொங்கி வழிந்தன. இப்போது - டிரைவர்லெஸ் கார்களைப் பார்த்து உலகமே வியக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விமானங்களில் ‘ஆட்டோ பைலட் சிஸ்டம்’ எப்படியோ, அதே தொழில்நுட்பம்தான் காருக்குள் புகுந்திருக்கிறது. இதை ‘அட்டானமஸ் கார்’ என்றும் சொல்கிறார்கள். 2009-ல் கூகுள்தான் முதன்முதலில் டிரைவர்லெஸ் காரை அறிமுகப்படுத்தி, ஸ்டீயரிங்கில் இருந்து கையை எடுக்கவும், மூக்கில் விரலை வைக்கவும் செய்தது. பல ஆயிரம் கி.மீ வரை தானாகவே ஓடி, எந்த விபத்தும் இல்லாமல் அலுவலகம் திரும்பியிருக்கிறது கூகுளின் டிரைவர்லெஸ் கார். ஆனால், ‘இதற்கான விதையை முதலில் போட்டது’ மெர்சிடீஸ் பென்ஸ். 1980-லேயே இந்த புராஜெக்ட்டை பென்ஸ் ஆரம்பித்தாலும், அது எடுபடாமல் போனது சோகம். ஓகே! இந்த டிரைவர்லெஸ் கார்கள், ஆட்டோமொபைல் உலகுக்கு அப்படி என்ன நன்மையைச் செய்துவிடப் போகின்றன? விபத்துகளைத் தடுப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கியக் காரணம், கவனக்குறைவுதான். பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பும்போது, மால்களில் பார்க்கிங் செய்யும்போது, சாலைகளில் ரிவர்ஸ் எடுக்கும்போது... ‘க்க்ரீ...ச்’ என முடிந்தவரை அடுத்த கார்களில் கோடு போட்டுவிட்டு, ‘ஸாரி... கவனிக்கலை’ என்று சொல்வதைக்கூட ப்ரெஸ்டிஜ் பிரச்னை யாகக் கருதும் எல்லோருக்குமே டிரைவர்லெஸ் கார்கள், வரப்பிரசாதம்தான்.

Self Parking, Pre-Safe போன்ற தொழில் நுட்பங்கள் போலவேதான் இதுவும். அப்படி யென்றால், டிரைவர் சீட்டில் யாருமே தேவை யில்லையா என்று நினைத்தால், அதுவும் இல்லை. குறைந்த இன்புட்களை மட்டும் டிரைவர்கள் கொடுத்தால் போதுமானது. மிச்ச சொச்சத்தை உங்கள் காரே கவனித்துக்கொள்ளும். திடீரென ஓர் ஆபத்தான நேரத்தில் கியரைக் குறைத்து... பிரேக் பிடித்து... ஸ்டீயரிங்கைத் திருப்பி என்று டிரைவர்கள் மொத்தமாக அவஸ்தைப்பட வேண்டியதில்லை.

தானா ஓடுற கார்!

டிரைவர்லெஸ் கார்களின் முதல் அடித்தளமாகத்தான் க்ரூஸ் கன்ட்ரோல் ஆப்ஷன் வந்தது. நெடுஞ்சாலையில் யாருமே தென்படவில்லை. நீங்கள் ஒரே வேகத்தில் போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்... அந்த வேகத்தை செட் செய்துவிட்டு ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டால் போதும்... கார் நீங்கள் செட் செய்த வேகத்திலேயே பறக்கும். பிரேக் பிடித்துவிட்டால், க்ரூஸ் கன்ட்ரோல் ஆஃப். திரும்பவும் முதலில் இருந்து வர வேண்டும். மொத்தத்தில், நம் இந்தியச் சாலைகளில் இது எடுபடவில்லை.

இதுவே டிரைவர்லெஸ் கார்களில், நீங்கள் பிரேக் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரேக் பிடிப்பது, பார்க்கிங் செய்வது போன்ற வேலைகளையும் சேர்த்தே பார்த்துக் கொள்வதுதான் இதன் ஸ்பெஷல். மற்றபடி ஏபிஎஸ், ட்ராக் ஷன் கன்ட்ரோல், ESP என்று எல்லாமே டிரைவர்லெஸ் கார்களில் முக்கிய அம்சங்கள். அதாவது ப்ரீ சேஃப் சிஸ்டம், செல்ஃப் பார்க்கிங் சிஸ்டம் போன்றவை எல்லாம் சேர்ந்ததுதான் டிரைவர்லெஸ் கார்.

தானா ஓடுற கார்!

எப்படி வேலை செய்கிறது?

கூகுளின் டிரைவர்லெஸ் கார் அமெரிக்காவில் வைரல் ஆகிவிட்டது. டிரைவர்லெஸ் தொழில்நுட்பத்துக்கு கூகுள் முக்கியமாகப் பயன்படுத்தியிருப்பது ‘சாஃபர்’ (Chauffeur) எனும் சிஸ்டம். சாஃபர் என்றால், புரொஃபெஷனல் டிரைவர் என்று அர்த்தம். சுருக்கமாகச் சொன்னால், காஸ்ட்லி கார் ஓட்டும் ஆக்ட்டிங் டிரைவர். இதில் இருப்பது லிடார் (LIDAR) எனும் தொழில்நுட்பம். இது ரேடாருக்கெல்லாம் அண்ணன். அத்தனை துல்லியம். ரேடாரையும் சோனாரையும் (நீருக்கடியில் ஒலி மூலம் துப்பறியும் கருவி) கலந்துகட்டி வேலை செய்யும் தொழில்நுட்பத்துக்குப் பெயர்தான் லிடார். அதாவது, பக்கத்தில் நகரும் பொருளை வைத்தோ, அதன் ஒலியை வைத்தோ ஏற்படவிருக்கும் ஆபத்துகளை, டிரைவருக்கு நானோ செகண்ட்களில் துப்பறிந்து சொல்வது இதன் வேலை.  64 வகையான லேஸர் பீம்களைச் சுழலவிட்டு, லட்சக்கணக்கிலான அளவுகளை ஒரே விநாடிக்குள் 3D ஸ்டைலில் இதன் கம்ப்யூட்டர் மூளைக்குத் தகவல் அனுப்புகிறது. ஏற்கெனவே புரோகிராம் செய்யப்பட்ட மேப்பிங் சிஸ்டம், மற்ற தகவல்களை உடனே சிஸ்டத்துக்கு அனுப்பும். உதாரணத்துக்கு டிராஃபிக் லைட்டுகள், இடையே வரும் குறுக்கீடுகள், ஆபத்தான மேடு பள்ளங்கள் போன்ற தகவல்கள் உடனே பறக்கும். கேமரா வசதியும் ரேடார் வசதியும் கொண்ட சாதாரண GPS சிஸ்டமும் இதில் உண்டு.

‘அதான் லிடார் எல்லாத்தையும் பார்த்துக்குமே’ என்று டிரைவர் ஹாயாகப் படுத்துக்கொள்ளலாம் என்று அர்த்தமில்லை. சில முக்கியமான வளைவுகள், சவால் விடும் ஹைவேக்கள், லேன் அசிஸ்ட் போன்றவற்றில் டிரைவரும் கொஞ்சூண்டு அலெர்ட்டாக இருந்தால் நல்லது. ஏனென்றால், நாட்டுக்கு நாடு வேறுபடும் இடது/வலது லேன் சிஸ்டத்தில் ரோபோ கார்கள்கூடக் குழம்பியிருக்கின்றனவாம்.
இந்த டிரைவர்லெஸ் கார்களை, பெரும்பான்மையாக டொயோட்டா ப்ரையஸ் கார்களை வைத்துத்தான் டெஸ்ட் செய்திருக்கிறது கூகுள். இந்த டிரைவர்லெஸ் லிடார் சிஸ்டத்தை நம் ஊர் ஆல்ட்டோவில்கூட ஃபிட் செய்து டெஸ்ட் செய்யலாம் என்கிறது கூகுள். ஆனால், இதற்கென நிறைய சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கன்னாபின்னா விலையில் இருந்த இந்த ‘சாஃபர் சிஸ்டம்’ இப்போது 1 லட்சம் டாலராக (சுமார் 65 லட்சம் ரூபாய்) விலை குறைந்திருக்கிறது. 2019-க்குள் இதை இன்னும் மலிவு விலையில் தரவிருக்கிறதாம் கூகுள்.

மொத்தத்தில் டிரைவர்லெஸ், டிரைவருக்கு ஸ்ட்ரெஸ்லெஸ் - ஜாப்லெஸ்!