Published:Updated:

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

சினிமா - வின்டேஜ் கார்கள்தமிழ்

கார்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கார் கதைக்களம் கொண்ட சினிமா விறுவிறுவென்று இருக்கும். படம் சுமாராக இருந்தாலும்கூட, ‘இது என்ன கார்? இது என்ன பைக்?’ என்று படம் பார்க்கும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். கவுண்டமணியின் ‘கரகாட்டக்காரனில்’ ஆரம்பித்து நயன்தாராவின்  ‘டோரா’ வரை ஸ்க்ரீனில் கலக்கிய கார்களின் குட்டி பயோடேட்டா!

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

படம்: கரகாட்டக்காரன்
கார்: செவர்லே இம்பாலா
ஊர்: அமெரிக்கா
மாடல்: 1958
இன்ஜின்: 4,640 சிசி, 8 சிலிண்டர்
பவர்: 185 bhp
கியர்: 3 ஸ்பீடு
சிறப்பு: சொப்பன சுந்தரிக்கு மட்டுமில்லைங்க; செவர்லே கம்பெனிக்கும் பேர் வாங்கிக் கொடுத்த கார், இம்பாலா. இதை பல பேர் வெச்சிருந்ததாலதான் செவர்லே கம்பெனி, பெரிய நஷ்டத்திலிருந்து மீண்டு வந்ததாம்.

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

படம்: பையா
கார்: மிட்சுபிஷி லான்ஸர்
ஊர்: ஜப்பான், மாடல்: 2002
இன்ஜின்: 1,800 சிசி
பவர்: 110 bhp
கியர்: 5 ஸ்பீடு மேனுவல், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
சிறப்பு: ஜேம்ஸ்பாண்டுகளுக்கு ஆஸ்டன் மார்ட்டின் என்றால், ஜாக்கிசானுக்கு லான்ஸர். தனது பெரும்பான்மையான படங்களில் லான்ஸரிலும் ஸ்டன்ட் அடிப்பார் ஜாக்கி. பையா படத்தை நீங்கள் உற்றுப் பார்த்தால், முன்பாதியில் ஒரு லான்ஸரும், பின் பாதியில் வேறொரு லான்ஸரும் வருவதைக் கண்டுபிடிக்கலாம்.

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

படம்: பண்ணையாரும் பத்மினியும்
கார்: ஃபியட் பிரீமியர் பத்மினி
ஊர்: இந்தியா
மாடல்: 1973
அப்போதைய விலை: சுமார் ரூ.50,000
இன்ஜின்: 1,100 சிசி
பவர்: 42 bhp
கியர்: 4 ஸ்பீடு மேனுவல்
சிறப்பு: அந்தக் காலத்தில் இரண்டு பேர், மக்களோட கனவுக் கன்னியா இருந்தாங்க. ஒண்ணு - நாட்டியப் பேரொளி பத்மினி. ரெண்டாவது - ஃபியட் பிரீமியர் பத்மினி. இப்போ ரெண்டு பேருமே இல்லைங்கிறது சோகம்.

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

படம்: சரோஜா
கார்: ஃபோக்ஸ்வாகன் டிரான்ஸ்போர்ட்டர்        டைப் 2
ஊர்: ஜெர்மனி
மாடல்: 1960
அப்போதைய விலை: சுமார் 1,95,000
இன்ஜின்: 1,192 சிசி
பவர்: 36 bhp
கியர்: 4 ஸ்பீடு மேனுவல்
சிறப்பு: உலகிலேயே அதிகமாக விற்பனையான வேன் இதுதான். இதுவரை 1 கோடியே 35 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி இருக்கிறது இந்த டிரான்ஸ்போர்ட்டர்.

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

படம்: டோரா
கார்: ஆஸ்டின் கேம்பிரிட்ஜ் A60
ஊர்: இங்கிலாந்து
மாடல்: 1968
அப்போதைய விலை: சுமார் ரூ.70,000
இன்ஜின்: 1,600 சிசி, 4 சிலிண்டர்
பவர்: 61bhp (petrol), 40bhp (Diesel)
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீடு மேனுவல்
சிறப்பு: 1958-ல் இதன் டாப் ஸ்பீடை டெஸ்ட் செய்தபோது, 80 கி.மீ வரை பறந்ததாம். 0-100 கி.மீ-யை எட்ட 24.9 விநாடிகள் எடுத்தது. அப்போதைய தனவான்களின் கார் இது. இப்போது தமிழ்நாட்டில் இரண்டு ஆஸ்டின் கேம்பிரிட்ஜ் கார்கள்தான் உள்ளன. ஒண்ணு ‘டோரா’ நயன்தாராகிட்ட இருக்கு; இன்னொண்ணு?

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

படம்: பாட்டி சொல்லைத் தட்டாதே
கார்: ஃபோக்ஸ்வாகன் பீட்டில்
ஊர்: ஜெர்மனி
மாடல்: 1968
இன்ஜின்: 1,500 சிசி
பவர்: 42 bhp
கியர்: 4 ஸ்பீடு மேனுவல், 3 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
சிறப்பு: ‘இது என்ன வண்டு மாதிரி இருக்கே’ என்று நினைத்தால்... கரெக்ட்! பீட்டில் என்றால் வண்டுதானே. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என்று எல்லா சினிமாக்களிலும் ஹீரோவாகவே நடித்திருக்கும் இந்த வாண்டுக்கு வயசும் மவுசும் அதிகம்.

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

படம்: பாபநாசம்
கார்: மாருதி ஜென்
ஊர்: இந்தியா
மாடல்: 1997
அப்போதைய விலை: சுமார் ரூ.2,75,000
இன்ஜின்: 1,000 சிசி
பவர்: 50 bhp
கியர்: 5 ஸ்பீடு
சிறப்பு: இந்தப் படத்துக்காக, 1 லட்ச ரூபாய்க்கு பழைய ஜென் கார் வாங்கி நிஜமாகவே ஏரியில் மூழ்கடித்திருக்கிறார்கள். படத்தோட பட்ஜெட்டில் 1 லட்சம் எக்ஸ்ட்ரா ஆனதுக்கு இதுதான் காரணம்.

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

படம்: சிவாஜி
கார்: மெர்சிடீஸ் பென்ஸ் S Class 320 CDi
ஊர்: ஜெர்மனி
மாடல்: 2005
அப்போதைய விலை: 90 லட்சம்
இன்ஜின்: 3,200 சிசி
பவர்:  204 bhp
கியர்: 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
சிறப்பு: பென்ஸின் காஸ்ட்லி மாடல் எஸ் க்ளாஸ்தான். யெஸ்... இதன் அப்போதைய விலை கிட்டத்தட்ட 90 லட்சத்தைத் தாண்டும். ஆனால், ‘சிவாஜி’ படத்தில் ரஜினி வெறும் 25 லட்ச ரூபாய்க்கு அந்த காரை விற்பது, அவரது பரந்த மனசைக் காட்டுகிறது.