Published:Updated:

இன்ஜின் கேட் கீப்பர்!

இன்ஜின் கேட் கீப்பர்!
பிரீமியம் ஸ்டோரி
இன்ஜின் கேட் கீப்பர்!

ஏன்? எதற்கு? எப்படி? - ஏர் ஃபில்ட்டர்தமிழ்

இன்ஜின் கேட் கீப்பர்!

ஏன்? எதற்கு? எப்படி? - ஏர் ஃபில்ட்டர்தமிழ்

Published:Updated:
இன்ஜின் கேட் கீப்பர்!
பிரீமியம் ஸ்டோரி
இன்ஜின் கேட் கீப்பர்!

பைக்கில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென பைக் திணற ஆரம்பிக்கிறது. ‘பெட்ரோல் காலியோ, கார்புரேட்டர்ல எதுவும் அடைப்பா இருக்குமோ, ஏதாவது கேபிள் கட் ஆகியிருக்குமோ’ - இப்படியெல்லாம் சிந்திப்பீர்கள்தானே? ஆனால், இதற்கு ஏர் ஃபில்ட்டரும் காரணமாக இருக்கலாம். இந்த ஏர் ஃபில்ட்டர் பிரச்னை அப்படியே காருக்கும் பொருந்தும்.

இன்ஜின் எரிதலுக்கு காற்று + எரிபொருள் கலவை முக்கியம் என்பதெல்லாம் ஓகே. அதில் காற்று எந்தளவு சுத்தமாக இன்ஜினுக்குள் செல்கிறது என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் வாகனத்தின் பெர்ஃபாமென்ஸும் செயல் திறனும் இருக்கும். அதற்கு ஏர் ஃபில்ட்டர் மிக முக்கியம். இதன் முக்கியப் பணி, காற்றைச் சுத்தம் செய்து இன்ஜினுக்குள் அனுப்புவதுதான். ஏர் ஃபில்ட்டரைப் பற்றி ஒரு சின்ன ரவுண்ட்-அப்.

இன்ஜின் கேட் கீப்பர்!

ஏன்?

சுத்தமில்லாத காற்று, நமக்கு எப்படி மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறதோ, அதேபோல்தான் இன்ஜினுக்கும். தூசு படர்ந்த, மாசு நிறைந்த ஏரியாவில் உங்கள் வாகனம் பயணிக்கும்போது, அந்தக் காற்றை உள்வாங்கிச் சுத்தப்படுத்தி, இன்ஜினுக்கு ஒரு கேட் கீப்பராகச் செயல்படுவது ஏர் ஃபில்ட்டர்தான். சுத்தமான காற்றுதான் பவரைச் சீராக வெளிப்படுத்த அற்புதமான வழி. அதற்கு ஏர் ஃபில்ட்டர் பராமரிப்பு ஓர் அற்புத அம்சம்.
காற்றில் இருக்கும் தூசுகள் இன் ஜினுக்குள் சென்றால், அவை சிலிண்டரில் கிராட்சுகளை உருவாக்கும். இது, நாளைடைவில் இன்ஜின் செயல் திறனை பாதிக்கும்.  காற்றை வடிகட்டுவதுதான் ஏர் ஃபில்ட்டரின் வேலை. அதனால், அதிக தூசுகள் சேர்ந்த அசுத்தமான ஏர் ஃபில்ட்டரும் செயல்திறன் இழந்து இன்ஜினையும் செயலிழக்க வைத்துவிடும்.

ஏர் ஃபில்ட்டர்கள் அசுத்தமானால், இன்ஜினைப் பாதிக்கும்; அதேசமயம், இன்ஜின் பவரும் குறையும்; மைலேஜும் குறையும்.

இன்ஜின் கேட் கீப்பர்!

எப்படி வேலை செய்கின்றன?

பல அடுக்குகள் கொண்ட வடிகட்டி போன்ற அமைப்பில் இருக்கும் ஏர் ஃபில்ட்டர், காற்று உள்புகும் பகுதியில் இருக்கும். இன்ஜின் வேலை செய்யும்போது, எரிதலுக்குத் தேவையான காற்றை, கார்புரேட்டர் அல்லது ஃப்யூல் இன்ஜெக் ஷன் யூனிட்டுகள் உள்ளிழுத்துக்கொள்ளும். இந்தக் காற்று உள்புகுதல் வேலை, இந்த ஏர் ஃபில்ட்டர் வழியாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பைப் மூலமாக நடக்கிறது. காற்றில் வேகமாகச் செல்லும்போது, தூசுகள் நிறைந்த காற்றைச் சுத்தப்படுத்தி இந்த பைப் வழியாக அனுப்பும் வேலையைத்தான் ஏர் ஃபில்ட்டர்கள் செய்கின்றன.

எத்தனை வகைகள்?

பைக்குகளைப் பொறுத்தவரை மொத்தம் மூன்று வகையான ஏர்  ஃபில்ட்டர்கள் இருக்கின்றன. பேப்பர் ஃபில்ட்டர், ஃபோம் ஃபில்ட்டர், காட்டன் ஃபில்ட்டர்.

இன்ஜின் கேட் கீப்பர்!

பேப்பர் ஃபில்ட்டர்

இது, ஓரளவு விலை மலிவு. சுத்தம் செய்வதற்கெல்லாம் இங்கு வேலை இல்லை. யூஸ் அண்டு த்ரோ வகையைச் சேர்ந்தது. பல ஸ்ட்ரீட் பைக்குகள், பேப்பர் ஃபில்ட்டர் கொண்டவைதான். சுத்தம் செய்து பயன்படுத்தலாமே என்றால், இது கிழியக்கூடிய தன்மை கொண்டது. 10,000 கி.மீ வரைதான் இந்த பேப்பர் ஃபில்ட்டர்களின் ஆயுள். இப்போது வரக்கூடிய ஹோண்டா, யமஹா பைக்குகள் எல்லாமே பேப்பர் ஃபில்ட்டர் கொண்டவையே. ஹீரோவில் 125 சிசிக்கு மேற்பட்ட பைக்குகள், ராயல் என்ஃபீல்டு, கேடிஎம் போன்றவற்றிலும் பேப்பர் ஃபில்ட்டர்கள்தான். இதன் விலை 200 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும்.

இன்ஜின் கேட் கீப்பர்!

ஸ்பாஞ்ச் அல்லது ஃபோம் ஃபில்ட்டர்

பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இந்த ஃபில்ட்டர்கள் இருக்கும். இது பேப்பர் ஃபில்ட்டர்களைப்போல் யூஸ் அண்டு த்ரோ வகையைச் சேர்ந்தது அல்ல. ஆயுளும் அதிகம். கிட்டத்தட்ட 15,000-த்தில் இருந்து 20,000 கி.மீ வரை இதைச் சுத்தம் செய்து பயன்படுத்தலாம். ஆனால், ஒவ்வொரு 3,000 கி.மீ-க்கு ஒருமுறை க்ளீனிங் அவசியம்.

ஃபோம் ஃபில்ட்டரில் அடர்த்தி அதிகம் என்பதால், குறைவான ஏர்ஃப்ளோவையே இது அனுமதிக்கிறது. காற்றுக்கே இந்த நிலைமை என்றால், தூசு தும்புகள் உள்ளே செல்ல வழியே இல்லை. ஆனால், சுத்தம் செய்யச் செய்ய இதிலுள்ள ஓட்டைகள் விரிவடைந்தால், இது தன் இயல்பை இழந்துவிடும்.

அதாவது, தூசுகள் ஈஸியாக என்ட்ரி பாஸ் வாங்கி இன்ஜினுக்குள் புகுந்துவிடும். RS, NS தவிர மற்ற பல்ஸர்கள், டிஸ்கவர், பழைய 2 ஸ்ட்ரோக் பைக்குகள், ஹீரோ ஸ்ப்ளெண்டர், கிளாமர் போன்ற பைக்குகளில் இருப்பது ஃபோம் ஃபில்ட்டர்கள். இவை மிக மிக விலை மலிவு என்பது மிகப் பெரிய ப்ளஸ். 80 ரூபாயில் இருந்து இந்த ஃபில்ட்டர்கள் கிடைக்கின்றன.

இன்ஜின் கேட் கீப்பர்!

காட்டன் ஏர் ஃபில்ட்டர்

இது பெஸ்ட் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்கானது. கொஞ்சம் பணக்கார ஃபில்ட்டரும்கூட. அதாவது விலை அதிகம். அதேநேரத்தில், காட்டன் ஃபேப்ரிக்குகளால் தயாரிக்கப்பட்டிருப்பதால், காசுக்கேற்ற தோசை மாதிரி இது ரொம்ப ஸ்ட்ராங். சுத்தமான காற்றுக்கு இந்த காட்டன் ஃபில்ட்டர்கள் கேரன்ட்டி. இதனால் பெர்ஃபாமென்ஸும் அருமை. இதைச் சுத்தம் செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இது கசங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; இதற்கென விற்கப்படும் திரவத்தைக் கொண்டுதான் இதைச் சுத்தம் செய்ய வேண்டும். இதை முறைப்படி பராமரித்தால், இன்ஜினுக்குள் சின்ன தூசுகூட செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்வதற்கு ‘நான் கேரன்ட்டி’ என்று சொல்லும் இந்த காட்டன் ஃபில்ட்டர். இதையும் 20,000 கி.மீ வரை பயன்படுத்தலாம். விலை அதிகமான பெர்ஃபாமென்ஸ் பைக்குகளில் இவை இருக்கும்.

இவை தவிர, லிக்விட் பாத் ஏர் ஃபில்ட்டர் என்றொரு வகை உண்டு. இது மிகவும் அடர்த்தியாகவும் கனமாகவும் இருப்பதால், இதை எந்த பைக் நிறுவனமும் பயன்படுத்தவில்லை. லாரி, ட்ரக் போன்ற கனரக வாகனங்களுக்குத்தான் இது பொருந்தும்.

மொத்தத்தில், ஏர் ஃபில்ட்டர் அடைப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. தாமதம் செய்யாமல், ஏர் ஃபில்ட்டருடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்.