Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

மாருதி சுஸூகி இக்னிஸ், ஹூண்டாய் கிராண்ட் i10 ஆகியவற்றில் எதை வாங்கலாம்? எனக்கு AMT/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்தான் வேண்டும்.

- கே. நடராஜன், கோயம்புத்தூர்.


கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான இக்னிஸ், அதிகப்படியான டிமாண்டைப் பெற்றுவிட்டது. நீங்கள் பாதுகாப்பு வசதிகள் இருக்கும் வேரியன்ட்டைத் தேர்வு செய்வதே நல்லது. கிராண்ட் i10 காரில் ஓட்டுநருக்கான காற்றுப்பை மட்டுமே ஸ்டாண்டர்டாகக் கிடைக்கிறது; ஆனால், இக்னிஸின் அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள்  மற்றும் ஏபிஎஸ் பிரேக் உள்ளன. கிராண்ட் i10 காரில் இருப்பது, 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக். மேலும், இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் - 7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் - கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி - DRL ஆகியவற்றைப் பொருத்தியுள்ளது ஹூண்டாய். இக்னிஸ் காரில் இருப்பது 5 ஸ்பீடு AMT. சிறப்பம்சங்கள் மற்றும் இடவசதியில் கிராண்ட் i10 காருக்கு இது கடும் சவாலாக விளங்குகிறது. இக்னிஸின் விலை அதிகமாக இருப்பது நெருடல். ஸ்டைலான கார் வேண்டும் என்றால், இக்னிஸ்; பிராக்டிக்கலான கார் வேண்டும் என்றால் கிராண்ட் i10.

மோட்டார் கிளினிக்

நான் புதிதாக ஸ்கூட்டர் வாங்கும் முடிவில் உள்ளேன். பட்ஜெட் 65,000 ரூபாய். டிவிஎஸ் ஜூபிட்டர் எனக்குப் பிடித்திருக்கிறது. இது எனக்கு ஏற்றதாக இருக்குமா?

- ரமேஷ், சென்னை.


ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர், ஜூபிட்டர்தான். இரண்டுக்கும் 110சிசி இன்ஜின், பவர் - டார்க், பெர்ஃபாமென்ஸ் - மைலேஜ் மெட்டல் பாடி, (கிட்டத்தட்ட) விலை என்று ஏகப்பட்ட ஒற்றுமைகள். மற்றபடி 12 இன்ச் அலாய் வீல், பாஸ் லைட் சுவிட்ச், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக் ஆப்ஷன், எக்கோ - பவர் மோடு, வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி, LED டெயில் லைட், யுஎஸ்பி சார்ஜர் என ஆக்டிவாவைவிடப் பல அம்சங்களைக் கூடுதலாகக் கொண்டுள்ளது ஜூபிட்டர். இப்படி மெக்கானிக்கலாக அசத்தும் ஜூபிட்டரின் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை, எதிர்பார்த்தபடியே ஆக்டிவா ஸ்கூட்டரைவிடச் சிறப்பாகவே இருக்கிறது. உங்களுக்கு இதே பட்ஜெட்டில், ஜூபிட்டரைவிட பவர்ஃபுல்லான ஸ்கூட்டர் வேண்டும் என்றால், சுஸூகி ஆக்ஸஸ் 125-யும், ஸ்டைலான ஸ்கூட்டர் வேண்டும் என்றால், யமஹா ஃபஸினோவையும்கூடப் பரிசீலிக்கலாம்.

மோட்டார் கிளினிக்

பேடில் ஷிஃப்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், EBD இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

- மெய்யரசன், இமெயில்.


ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில், மேனுவல் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடு இருக்கும். மேனுவல் மோடில், கியர் லீவரைப் பயன்படுத்தி நாமே கியர்களை மாற்றலாம். சில கார்களின் ஸ்டீயரிங்கில் இருபுறமும், ரேஸ் கார்களில் இருப்பதுபோன்ற பேடில் ஷிஃப்ட்டர் லீவர் இருக்கும். இதனைப் பயன்படுத்தி, மேனுவல் மோடில் காரின் வேகத்துக்கு ஏற்ப கியர்களை மாற்ற முடியும். இது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவது போன்ற அனுபவத்தைத் தரும். நெடுஞ்சாலையில் செல்லும்போது, டாப் கியரில் நிலையான வேகத்தில் செல்லவே பலரும் விரும்புவர். ஆனால், ஆக்ஸிலரேட்டரைத் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருப்பது அயர்ச்சியைத் தரும். இதற்கான தீர்வுதான் க்ரூஸ் கன்ட்ரோல். எனவே, டாப் கியரில் 60 - 80 - 100 கி.மீ போன்ற நிலையான வேகத்தில் செல்லும்போது, ஸ்டீயரிங்கில் இருக்கும் க்ரூஸ் கன்ட்ரோல் பட்டனை அழுத்தினால், அதே வேகத்தில் கார் தொடர்ந்து பயணிக்கும். ஆனால், பிரேக்கை அழுத்தினால், க்ரூஸ் கன்ட்ரோல் ஆஃப் ஆகிவிடும். EBD என்றால், Electronic Brakeforce Distribution. ABS உடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பின் முக்கிய பணி, சீரான பிரேக்கிங் திறனை நான்கு சக்கரங்களுக்கும் உடனடியாகப் பகிர்ந்து அளிப்பதுதான். ஆகவே, வீல்கள் லாக் ஆகாமல், சொன்ன இடத்தில் அலைபாயாமல் வாகனம் நிற்க உதவும்.

மோட்டார் கிளினிக்

ஹோண்டா CB ஹார்னெட், சுஸூகி ஜிக்ஸர் -  இந்த இரண்டு பைக்குகளில் எது பெஸ்ட் சாய்ஸ்?

- கார்த்திகேயன், இமெயில்.


நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பைக்குகளும், 160சிசி நேக்கட் ஸ்ட்ரீட் பைக் செக்மென்ட்டைச் சேர்ந்தவை. இந்த இரண்டு ஜப்பானிய பைக்குகளும், டிஸைன் விஷயத்தில் சிக்ஸர் அடிக்கின்றன. மெக்கானிக்கலாக ஒரே மாதிரி இருக்கும் இரண்டுமே, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிறப்பம்சங்களைத்தான் கொண்டிருக்கின்றன. என்றாலும், ஜிக்ஸரில் CBS பிரேக்கும் - ஹார்னெட்டில் கில் சுவிட்ச்சும் மிஸ்ஸிங். ஜிக்ஸரைவிட சற்று பெரிய இன்ஜினைக் கொண்டிருக்கும் ஹார்னெட், எதிர்பார்த்தபடியே அதிக பவரை வெளிப்படுத்துகிறது. இந்த இரண்டு பைக்கில் இருக்கும் இன்ஜின்கள், BS-IV விதிகளுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்டவை. எனவே, பெர்ஃபாமென்ஸ் விஷயத்தில் ஹார்னெட் அசத்தினால், ஓட்டுதல் அனுபவத்தில் வெல்வது ஜிக்ஸர்தான். இதற்கு அந்த பைக்கின் குறைவான எடையும் ஒரு காரணம். ஜிக்ஸரின் விலை, ஹார்னெட்டை விடக் குறைவு என்பது ப்ளஸ். ஆனால், டீலர் நெட்வொர்க்கில் ஸ்கோர் செய்துவிடுகிறது ஹார்னெட். அதேசமயம், ஆல்ரவுண்டராக அசத்தும் ஜிக்ஸரே சரியான சாய்ஸாக இருக்கும்.

நான் புதிய கார் வாங்கலாம் என்றிருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் 5 நபர்கள்; எனக்கு டீசல் கார்தான் வேண்டும். ஃபோர்டு எக்கோஸ்போர்ட், ஹோண்டா ஜாஸ், மாருதி சுஸூகி டிஸையர் ஆகிய இந்த மூன்று கார்களில் எதை வாங்கலாம்? எனது பட்ஜெட் காரணமாக, எந்த காரை வாங்கினாலும், அதன்  மிட் வேரியன்ட்டைத்தான் வாங்க உள்ளேன்.

- கனகசெல்வம், இமெயில்
.

நீங்கள் குறிப்பிட்டுள்ள கார்கள் அனைத்துமே வெவ்வேறு செக்மென்ட்டைச் சேர்ந்தவை. டிஸைன்படி பார்த்தால், காம்பேக்ட் எஸ்யூவியான எக்கோஸ்போர்ட் மற்றும் பிரீமியம் ஹேட்ச்பேக்கான ஜாஸ்தான் சிறப்பானதாக இருக்கின்றன. கேபின் விஷயத்தில், 5 பேருக்கான இடவசதியைக் கொண்டிருக்கிறது ஜாஸ். டிஸையர் மற்றும் எக்கோஸ்போர்ட்டில், நால்வர் மட்டுமே சொகுசாக உட்கார முடியும். சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, மூன்று கார்களின் மிட் வேரியன்ட்டிலும் கடும் சவால் நிலவுகிறது; எக்கோஸ்போர்ட் மற்றும் ஜாஸில் இருப்பது, 100bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். டிஸையரில் இருப்பதோ, 75bhp பவரை வெளிப்படுத்தும் சின்ன 1.3 லிட்டர் டீசல் இன்ஜின். எனவே, பெர்ஃபாமென்ஸ் விஷயத்தில் எக்கோஸ்போர்ட் அசத்தினால், மைலேஜ் விஷயத்தில் டிஸையர் வெல்கிறது. ஓட்டுதல் அனுபவத்தில் மூன்று கார்களுமே டிஸ்டிங்ஷன் வாங்குகின்றன. எனவே, டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு, உங்கள் காரைத் தேர்வு செய்யுங்கள்.