Published:Updated:

ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!

ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!
பிரீமியம் ஸ்டோரி
ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!

சந்திப்பு - ரேஸர்தமிழ் , படங்கள்: பா.காளிமுத்து

ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!

சந்திப்பு - ரேஸர்தமிழ் , படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!
பிரீமியம் ஸ்டோரி
ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!

‘‘ரேஸ், எங்க குடும்ப ரத்தத்துலயே ஓடுது. ஒருவகையில் எங்களை டங்கல் ரேஸர்ஸ்னு சொல்லலாம்!’’ என்று ஆரம்பித்தார் ஹரிஹரன். இவரின் அப்பா விஸ்வநாதன், 60-களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ரேஸர்களில் ஒருவர். 1968-ல் பிறந்த ஹரிஹரன், மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு 90-களில் ரேஸராக வலம் வந்தவர். இப்போது ஹரிஹரனின் மகள் மாளவிகாவும் ரேஸர் அவதாரம் எடுத்திருக்கிறார். 11-ம் வகுப்பு படிக்கும் மாளவிகாவுக்கு, இன்னும் 15 வயது நிறைவடையவில்லை. அதற்குள், யமஹா R15, ஹோண்டா CBR என்று வெரைட்டியாக பைக்குகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!

‘‘சின்ன வயசில் அப்பா, என்னையும் அண்ணாவையும் ரேஸை வேடிக்கை பார்க்கக் கூட்டிட்டுப் போவார்.

இப்போ நானே அந்த ட்ராக்கில் ரேஸ் ஓட்டப் போறேன். எல்லாப் புகழும் அப்பாவுக்கே!’’ என்று சொல்லும் மாளவிகாவின் அண்ணன் ராகுலும் ரேஸர்தான்.

பள்ளி விட்டால் ரேஸ் ட்ராக்; பிறகுதான் வீடு என்று தனது தினசரி ஷெட்யூலை, கடந்த சில மாதங்களாக மாற்றியிருக்கும் மாளவிகா, கைக்குழந்தையாக இருக்கும்போதே அப்பாவுடன் ரேஸ் ட்ராக்குக்குக் கூட்டிப் போகச் சொல்லி அடம்பிடிப்பாராம். ‘A for Accelerator, B for Bike’ என்றே மாளவிகாவுக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. பைக் மீது அத்தனை பிரியம். வளர்ந்த பிறகு, ‘அண்ணனுக்கு மட்டும் பைக் ஓட்டச் சொல்லித் தர்றீங்க’ என்று சண்டை போட்டு, அப்பாவிடம் பைக் ஓட்டப் பழகியிருக்கிறார் மாளவிகா.

‘‘ஒருநாள் ரேஸ் ட்ராக்குக்கு என்னை அழைத்துச் சென்றார் அப்பா. வழக்கம்போல வேடிக்கை பார்க்கத்தான் கூட்டிட்டு வந்திருக்காருனு நினைச்சேன். திடீர்னு ‘இந்த சூட்டைப் போடுமா’னு ஒரு ரேஸ் சூட்டைக் கொடுத்தார். ‘இனிமே இவர்தான் உன்னோட மாஸ்டர்; இதுதான் உன்னோட பைக்’னு சுதாகர் மாஸ்டரையும் யமஹா R15 பைக்கையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போ இருந்து இவங்க ரெண்டு பேரும்தான் எனக்கு எல்லாமே!’’ என்று குழந்தைத்தனமாகப் பேசினாலும், ரேஸ் ட்ராக்கில் மெச்சூர்டாக  இருக்கிறார் மாளவிகா.

ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!

‘குணா’ படப்பிடிப்பின்போது கமல், தன் மகள் ஸ்ருதிஹாசனை, படப்பிடிப்புத் தளத்துக்கு அழைத்துச் செல்வாராம். அதையே இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு, தன் மகளை ட்ராக்குக்கு அழைத்துச் சென்று, பைக் ஓட்டச் சொல்லிக் கொடுத்து... இப்போது முழுமையான ரேஸராக மாளவிகா வலம்வருவதைப் பெருமையுடன் சொல்லிக் காட்டுகிறார் ஹரிஹரன். ஆனால், வீட்டில் கடுமையான எதிர்ப்பு. ‘ஆம்பளைப் பசங்களுக்கு ஓகே... பொண்ணுங்களுக்கு இதெல்லாம் செட் ஆகாது’ என்று வழக்கம்போல், அம்மா மற்றும் உறவினர்களிடமிருந்து நெகட்டிவ் கமென்ட்கள். அதையே சவாலாக எடுத்து தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் மாளவிகா. ‘‘தாத்தா, அப்பாவைவிட பெரிய ரேஸர் ஆகணும்; அதுதான் லட்சியம்!’’ என்கிறார். இப்போது அம்மாவும் ஓரளவு சமாதானம் ஆகிவிட, ஒரே ஒரு கண்டிஷன்தான்: ‘‘அடிபட்டுட்டு வீட்டுக்குள்ள நுழையாதே!’’ என்பதுதானாம் அது. ஆனால், குட்டிக் குட்டியாக நடக்கும் ரேஸ்களில் கலந்துகொண்டு, விழுந்து வாரிக்கொண்டு வருவதுதான் மாளவிகாவின் வாடிக்கை.

‘‘அதுக்கெல்லாம் பயந்தா ரேஸ் ஓட்ட முடியுமாண்ணா?’’ எனும் மாளவிகாவுக்கு ஒரு பெருமை இருக்கிறது. அடுத்த மாதம் நடக்கும் ஹோண்டா ஒன்-மேக்கில் கலந்துகொள்ளும் முதல் குறைந்த வயது ரேஸர் மாளவிகாதான். ஒன்-மேக்கில் கலந்துகொள்பவர்களுக்கு, பயிற்சியும் வயதும் அனுபவமும் அதிகமாக இருக்கும். மாளவிகாவுக்குக் கடும் சவால் காத்திருக்கிறது.

ஒன்-மேக் ரேஸில் குட்டிப்பொண்ணு!

‘‘ ‘எல்லாருமே புரொஃபெஷனல்ஸா இருப்பாங்க; ப்ராக்டீஸ்தான் முக்கியம்’னு மாஸ்டர் சொல்லியிருக்கார்’’ என்று சொல்லும் மாளவிகா, ஒரு தடவை உடல்நலம் சரியில்லாமல் இரண்டு நாள் ரேஸ் வகுப்புக்கு லீவு எடுத்துவிட, புரண்டு புரண்டு அழுதவரிடம், ‘‘ரெண்டு நாளை காம்பென்சேட் பண்ணிக்கலாம்’’ என்று சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்களாம். ‘ஒருநாள் பயிற்சி என்பது ஒரு வருட அனுபவத்துக்குச் சமம்’ - இப்படித்தான் பெரிய மனுஷிபோல் சொல்கிறார் மாளவிகா.

வகுப்பில், வெளியில்... தான் ஒரு ரேஸர் என்பதைச் சொல்லிக்கொள்வதில்லையாம் மாளவிகா. ‘முதல்ல பைக்கை ஸ்டாண்ட் போடக் கத்துக்கோ... அப்புறம் பைக் ஓட்டலாம்... ரேஸ் சூட் மாட்டி போட்டோ எடுத்தா நீயெல்லாம் ரேஸரா’னு பசங்க எல்லாரும் கிண்டல் பண்றாங்க. அதுக்காகவே இந்த ஒன்-மேக்கில் ஜெயிக்கணும்!’’ என்று வெறித்தனமாக ஆக்ஸிலரேட்டர் முறுக்கிப் பறந்தார் மாளவிகா.