‘கட்டுமஸ்தான தோற்றத்தில், உறுதியான எஸ்யூவி ஒன்று வேண்டும்; அது சொகுசான 7 சீட்களுடன் கூடிய பிரீமியம் எஸ்யூவியாக இருப்பது அவசியம்' என்பவர்களுக்கான பெர்பெக்ட் சாய்ஸாக இருப்பது, ஃபோர்டு எண்டேவர்! கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒப்பீட்டில், டொயோட்டா ஃபார்ச்சூனர், செவர்லே ட்ரெய்ல்பிளேசர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் போன்ற XL சைஸ் எஸ்யூவிகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், மோட்டார் விகடனின் ‘சிறந்த எஸ்யூவி - 2017' விருதையும் வென்றது. ஒரு எஸ்யூவிக்கு அடிப்படையான ஆஃப் ரோடிங் போன்ற விஷயங்களைத் தவிர சொகுசு, தொழில்நுட்பம் போன்ற ஏரியாக்களிலும் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது எண்டேவர். ஆனால், இந்த எஸ்யூவியுடன் இப்போது போட்டியிட வந்திருக்கும் இசுஸூவின் லேட்டஸ்ட்டான MU-X எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது, எண்டேவர் சுமார் 7 லட்ச ரூபாய் அதிகம். எண்டேவரில் இருக்கும் ஆஃப் ரோடிங் திறன் மற்றும் பல வசதிகள், தனது MU-X எஸ்யூவியிலும் இருப்பதாக இசுஸூ கூறியுள்ளது. ஆக, ஜெயிப்பது அமெரிக்காவா, ஜப்பானா?

டிசைன், கேபின்

இரண்டுமே செம பல்க் டிசைன்; எடை 2000 கிலோவுக்கு மேலே! சாலையில் இரண்டு கார்களையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது, பாகுபலியும் பல்வாள் தேவனும் மோதக் காத்திருப்பதுபோல் இருக்கிறது. MU-X-விட எண்டேவர் சிறிதளவே நீளம் அதிகம். ஆனால், MU-X-ல் எண்டேவரைவிட அட்டகாசமான கிரில்லும், பெரிய வீல் ஆர்ச்சுக்குக் கீழே ஸ்டைலான 17 இன்ச் அலாய் வீல்களும் இருக்கின்றன. இசுஸூ MU-X எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது, எண்டேவரின் டிசைனில் எந்த ஆடம்பரமும் இல்லாவிட்டாலும், தனது சைஸ், க்ரோம் வேலைப்பாடு, 18 இன்ச் அலாய் வீல் ஆகியவற்றாலேயே மிரட்டுகிறது. இசுஸூ MU-X எஸ்யூவியின் டேஷ்போர்டு, அழகான டிசைனைக் கொண்டிருக்கிறது. இதற்கு வட்ட வடிவத்தில் இருக்கும் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் கறுப்பு நிறம் மற்றும் தரம் ஆகியவை, சிறப்பாக இல்லாதது நெருடலாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, எண்டேவரின் டேஷ்போர்டு செம ரிச். லெதர் மேல்பகுதி, கன் மெட்டல் நடுப்பகுதி, பீஜ் கீழ்ப்பகுதி என அசத்தல் ரகம்; டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி-யும் உண்டு.

சிறப்பு அம்சங்கள், இடவசதி

4 வீல் டிரைவுடன், ஒரே வேரியன்ட்டில் கிடைக்கும் இசுஸூ MU-X எஸ்யூவியில், தேவையான சிறப்பம்சங்கள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், டைட்டானியம் வேரியன்ட்டில் கிடைக்கும் எண்டேவர், சிறப்பம்சங்களில் எகிறி அடிக்கிறது. இரண்டு கார்களிலுமே டச் ஸ்க்ரீன் இருந்தாலும், இரண்டுக்கும் பல வித்தியாசங்கள்; இசுஸூவில் இருப்பது வழக்கமான MonoChromatic ஸ்க்ரீன் என்றால், ஃபோர்டில் இருப்பது Sync 3, வாய்ஸ் கமாண்ட், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி உடனான ஹை-ரெசொல்யூஷன் கலர் ஸ்க்ரீன். இசுஸூ MU-X எஸ்யூவியில் இருக்கும் கீலெஸ் என்ட்ரி, பின்பக்க இருக்கைகளில் இருப்பவர்களுக்குப் பிரத்யேகமாக, ரூஃப்பில் இருக்கும் 10 இன்ச் ஸ்க்ரீன் ஆகியவை மட்டுமே எண்டேவரில் இல்லை; மற்றபடி செமி ஆட்டோ பார்க்கிங் அசிஸ்ட், சாட்டிலைட் நேவிகேஷன், எலெக்ட்ரிக் டெயில் கேட், பனோரமிக் சன்ரூஃப், 7 காற்றுப்பைகள், எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய கடைசி வரிசை இருக்கை என எண்டேவர், MU-X எஸ்யூவியைவிட படு ஹைட்டெக்காக இருக்கிறது.

எண்டேவரைவிட MU-X எஸ்யூவியின் இருக்கைகள் சொகுசாகவும், அதிக இடவசதியுடனும் இருக்கின்றன. MU-X எஸ்யூவியின் முன்பக்க இருக்கைகள், பார்ப்பதற்கு விசாலமாகவும் சொகுசாகவும் இருக்கின்றன. நடுவரிசையில் நல்ல இடவசதி இருக்கிறது. கடைசி வரிசை இருக்கை பொசிஷன் செய்யப்பட்ட விதம் மற்றும் நடுவரிசை இருக்கை Flip ஆவதால், போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் கிடைக்கிறது. எண்டேவரின் முன்பக்க இருக்கைகள் பார்க்க நன்றாக இருந்தாலும் குஷனிங் தட்டையாக இருக்கிறது. MU-X எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது, எண்டேவரின் நடு வரிசை இருக்கையில் இருக்கக்கூடிய லெக்ரூம் மற்றும் தொடைகளுக்கான சப்போர்ட் குறைவுதான். கடைசி வரிசை இருக்கையில், இடநெருக்கடி அதிகமாக இருக்கிறது. நடுவரிசை இருக்கை Flip ஆகாததால், கடைசி வரிசை இருக்கையை எட்டிப்பிடிப்பதும் கடினமாகவே இருக்கிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

இசுஸூவின் MU-X எஸ்யூவியில் இருப்பது, 177bhp பவரையும் - 38kgm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர் டீசல் இன்ஜின்; ஃபோர்டு எண்டேவரில் இருப்பதோ, 200bhp பவரையும் - 47kgm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 3.2 லிட்டர் டீசல் இன்ஜின்! எனவே, எண்டேவர் பெர்ஃபாமென்ஸில் அதிரடிக்கும் என எதிர்பார்த்தால், அது ஓரளவுக்குத்தான் உண்மை; ஏனெனில், 0 - 100 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு, எண்டேவரைவிட MU-X எஸ்யூவி, 1.35 விநாடிகள் மட்டுமே கூடுதலாக எடுத்துக்கொள்கிறது. கியர்களுக்கு இடையேயான வேகத்தைப் பொறுத்தமட்டில், எண்டேவரைவிட MU-X எஸ்யூவி சுமார் ஒரு விநாடியே அதிகம்!

இரண்டு எஸ்யூவிகளுமே பிக்-அப் ட்ரக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாலோ என்னவோ, இவற்றில் இருக்கும் டீசல் இன்ஜின்கள் அதிகமாகச் சத்தம் போடுகின்றன. ஃபோர்டில் Noise Cancellation தொழில்நுட்பம் இருப்பதால், அது இசுஸூவைவிடக் கொஞ்சம் ஸ்மூத்தாகத் தெரிகிறது. மேலும், ஆரம்ப வேகம் முதலே, எண்டேவரின் இன்ஜின் ரெஸ்பான்ஸிவாக இயங்குகிறது.

ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, MU-X எஸ்யூவியின் இன்ஜின், அதிக சத்தத்துக்குப் பிறகு, ஒருவித தயக்கத்துடன்தான் பணிபுரியத் துவங்குகிறது. இதற்கு அதில் இணைக்கப்பட்டுள்ள 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இயங்கும் விதம்தான் காரணம். ஆனால், மித வேகங்களில் கியர்பாக்ஸ் தனது பணியைச் செய்கிறது. இதனுடன் ஒப்பிடும்போது, எண்டேவரின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், சிறப்பாகச் செயல்படுகிறது.

ஓட்டுதல் தரம், கையாளுமை

இசுஸூ MU-X எஸ்யூவியின் ஹைட்ராலிக் ஸ்டீயரிங், குறைவான வேகங்களில் எடை அதிகமாக இருக்கிறது. இதனால் பார்க்கிங்கும் யூ-டர்ன் செய்வதும் கடினமாக இருக்கிறது. மேலும் ஸ்டீயரிங்கிலும் அவ்வப்போது அதிர்வுகள் தெரிவது மைனஸ். ஆனால், இதன் டர்னிங் ரேடியஸ், குறைவாக இருப்பது ஆறுதல்; ஃபோர்டு எண்டேவரின் டர்னிங் ரேடியஸ் அதிகமாக இருந்தாலும், அதில் இருப்பது எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் என்பதால், பிரச்னையில்லை. எனவே நகரம், நெடுஞ்சாலை என எங்கு பயணித்தாலும், இவ்வளவு பெரிய எஸ்யூவியை ஓட்டுவது, கொஞ்சம் ஈஸியாக இருக்கிறது. இதனுடன் சிறப்பாக ட்யூன் செய்யப்பட்டிருக்கும் சஸ்பென்ஷன் சேரும்போது, திருப்பங்களில் குறைவான பாடி ரோலுடன் கூடிய அற்புதமான கையாளுமை கிடைத்து விடுகிறது. இசுஸூ MU-X எஸ்யூவியின் ஓட்டுதல் அனுபவம், அப்படியே எண்டேவருக்கு நேர் எதிராக இருக்கிறது. குறைவான வேகங்களில் செல்லும்போது, மிகவும் சொகுசான ஓட்டுதல் கிடைக்கிறது. இதை நம்பி வேகத்தை அதிகரிக்கும்போது, கார் ஏகத்துக்கும் அலுங்கிக் குலுங்குகிறது. மேலும், திருப்பங்களில் செல்லும்போது, பாடி ரோல் அதிகமாக இருக்கிறது.

உங்கள் பட்ஜெட் குறைவு என்றால், இசுஸூ MU-X எஸ்யூவி சரியான சாய்ஸாக இருக்கும். ஏனெனில், கிட்டத்தட்ட இதே விலையில் கிடைக்கும் ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் எஸ்யூவியைத் தாண்டி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 4 வீல் டிரைவ் ஆப்ஷனுடன் கூடிய ஆஜானுபாகுவான எஸ்யூவி எதுவும் இல்லை. சொகுசான இருக்கைகள், அற்புதமான இடவசதி, குறைவான வேகங்களில் சிறப்பான ஓட்டுதல், போதுமான வசதிகள் எனச் சில ப்ளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், எண்டேவருடன் ஒப்பிடும்போது பல விஷயங்களில் (டல்லான இன்ஜின் - கியர்பாக்ஸ், அதிக வேகங்களில் சுமாரான ஓட்டுதல் தரம் - கையாளுமை) இது பின்தங்கிவிடுகிறது.

MU-X எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது, எண்டேவரில் இடவசதி மற்றும் சொகுசான இருக்கைகள் இல்லாததுடன், இசுஸூவின் MU-X எஸ்யூவியைவிடச் சுமார் 7 லட்ச ரூபாய் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால், லக்ஸூரியான கேபின் - அதிக வசதிகள் - மாடர்ன் தொழில்நுட்பம் - அட்டகாசமான ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை - பவர்ஃபுல் இன்ஜின் ஆகியவற்றால் ஈடுகட்டுகிறது எண்டேவர். எனவே, விலை அதிகமாக இருந்தாலும், ஓர் ஆல்ரவுண்டர் பேக்கேஜாக இருக்கும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் அதற்காகச் செலவழிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதன் அடிப்படையில், ஃபோர்டு எண்டேவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.