ஹார்லி டேவிட்சனின் கவலையெல்லாம், எங்கே நம்மை ஒரு க்ரூஸர் பைக் கம்பெனி என ஒதுக்கிவிடுவார்களோ என்பதுதான். தன் மீது இருக்கும் அந்த இமேஜை உடைக்க, இரவு பகலாக ஹார்லி டேவிட்சன் உழைத்து, கொண்டுவந்திருக்கும் புது பைக்தான் ஸ்ட்ரீட் ராட். இது, ஏற்கெனவே விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஸ்ட்ரீட் 750 மாடலின் ஸ்போர்ட்டி வெர்சன்.

தோற்றம்

ஹார்லி டேவிட்சனின் V-ராட், நைட் ராட் பைக்குகளின் டிசைன் அம்சங்களை, ஸ்ட்ரீட் ராட் பைக்கில் பார்க்கலாம். எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், இது வேகமான பைக் எனும் தோற்றம் இருக்கிறது. ஹார்லியின் மற்ற பைக்குகளில் இருக்கும் க்ரூஸர் உணர்வு இல்லை. சிறிதாக்கப்பட்ட ஃபெண்டர், ஸ்போர்ட்டியாகக் காட்டுகிறது. ‘Drag’ ஸ்டைல் ஹெட்லைட் கௌல், தட்டையான ஹேண்டில் பார், அதன் முடிவில் ரியர் வியூ மிரர்கள் எனத் தோற்றத்தில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறது ஹார்லி.

பெர்ஃபாமென்ஸ்

ஸ்ட்ரீட் 750 பைக்கில் இருக்கும் அதே 749 சிசி, 8-வால்வு, லிக்விட் கூல்டு, V-twin, Revolution X இன்ஜின்தான், ஸ்ட்ரீட் ராட் பைக்கிலும் உள்ளன. ஃப்யூலிங் சிஸ்டம் இப்போது புதிதாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட் 750 பைக்கில் சிங்கிள் போர்ட் இன்ஜெக்ஷன் இருக்க, இதில் ட்வின் போர்ட் இன்ஜெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. த்ராட்டில் பாடியின் சைஸும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 4,000 ஆர்பிஎம்-ல், 6.32 kgm டார்க் சக்தியை அளிக்கிறது. இது ஸ்ட்ரீட் 750யைவிட 0.31 kgm அதிகம். ஸ்ட்ரீட் 750, ஸ்ட்ரீட் ராட் பைக்குகளின் bhp அளவை, ஹார்லி டேவிட்சன் வெளியிடவில்லை. ஆனால், 8,250 ஆர்பிஎம்-ல், ஸ்ட்ரீட் 750-ஐவிட 11 சதவிகிதம் அதிகச் சக்தியை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. ரெவ் லிமிட்டர், இப்போது 9,000 ஆர்பிஎம். எனவே, பைக்கில் 5 கிலோ எடை கூடியிருந்தாலும், பவர் அதிகரித்திருப்பதால், பெர்ஃபாமென்ஸில் சீற்றம் அதிகரிக்கவே செய்திருக்கிறது. வழக்கமான ஸ்ட்ரீட் 750-ஐவிட, இதில் எக்ஸாஸ்ட் சத்தம் நன்றாகவே இருக்கிறது.

ஸ்ட்ரீட் 750 பைக்கின் மெயின் - ஃப்ரேம் அப்படியே இருக்கிறது. ஆனால், பின்பக்கம் புதிய சப்-ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் தடிமனான 43 மிமீ இன்வெர்டட் ஃபோர்க்ஸ் உள்ளன. பின்பக்கம் ட்வின் ஷாக் அப்ஸார்பர்களுக்கு கேஸ் ரிசர்வாயர்கள் உள்ளன. வீல்பேஸ் இப்போது 1,510 மிமீ.

ஸ்ட்ரீட் ராட் பைக்கில் , MRF-ன் ரேடியல் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் 120/70 R17, பின்பக்கம் 160/60 R17 அளவு டயர்கள் உள்ளன. வளைவுகளில் இந்த டயர்கள், நல்ல கிரிப் அளிக்கின்றன.

பிரேக்ஸ்

பிரேக்ஸ் விஷயத்திலும் ஸ்ட்ரீட் ராட் ஸ்ட்ராங். முன்பக்கம் 2-பிஸ்டன் கேலிப்பர்களுடன், டூயல் 300 மிமீ டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இதுவே ஸ்ட்ரீட் 750-ல் சிங்கிள் டிஸ்க்தான். பின் வீலுக்கு சிங்கிள் 300 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. ஸ்ட்ரீட் ராட் பைக்கில், ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது. கூடுதல் பெர்ஃபாமென்ஸுக்கு ஏற்ப விவேகமாகப் பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது ஹார்லி. பிரேக்ஸ் தரும் ஃபீட்பேக் சுமாராக இருந்தாலும், அதன் இயக்கம் கச்சிதம்.

கையாளுமை

ஸ்ட்ரீட் பைக்கின் கையாளுமை, எதிர்பார்த்ததைவிட ஸ்போர்ட்டியாகவே இருக்கிறது. முன்பக்கம் சாய்ந்து ஓட்டும்படி ரைடிங் பொசிஷன் இருப்பதால், வளைவுகளில் தைரியமாக விரட்டலாம். ஸ்ட்ரீட் 750 பைக்கின் இன்ஜினைவிட, இந்த பைக்கின் இன்ஜின் சீறுவதால், பெர்ஃபாமென்ஸ் மிரட்டல். ஆனால், நீண்ட தூரப் பயணங்களுக்கு, இதன் ரைடிங் பொசிஷன் சரிப்பட்டு வராது. முக்கியமாக இன்ஜினின் சூடு, ரைடரின் தொடையில் படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது

தீர்ப்பு

சமீப காலத்தில் வெளிவந்த சிறந்த ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் இதுவும் ஒன்று. ஒட்டுமொத்தமாக இந்த பைக் நல்ல பேக்கேஜ். 6.71 லட்சம் (சென்னை ஆன்ரோடு) விலையில் இந்த பைக், ஸ்ட்ரீட் 750-ஐவிட கொஞ்சம் அதிக விலைதான். ஹார்லியை முதன்முதலாக வாங்குபவர்கள், பலர் இந்த பைக்கைத்தான் தேர்வு செய்வார்கள். ஹார்லி பைக்குகளும் ஸ்போர்ட்டியாக மாறும் காலம் இது.