உலகளவில் எவ்வளவு பெரிய பைக் நிறுவனமாக இருந்தாலும், அவர்கள் தமது என்ட்ரி லெவல் பைக்குகளை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, அந்த நிறுவனத்தின் வெற்றி அமையும். ஏனெனில் அது சரியாக அமைந்துவிட்டால், ஒரு ரைடர் தனது ஆரம்பகாலம் தொட்டு, பைக்கில் போதிய அனுபவம் பெறும் வரைக்கும், அதே நிறுவனத்தின் தயாரிப்புகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் டுகாட்டி நிறுவனம், அதன் வெளிப்பாடாகக் களமிறக்கியுள்ள பைக்தான் மான்ஸ்டர் 797. மான்ஸ்டர் 795 மற்றும் மான்ஸ்டர் 796 மாடல்களின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டதால், இப்போது டுகாட்டியின் என்ட்ரி லெவல் பைக்காக இருப்பது ஸ்க்ராம்ப்ளர்தான்! அது ஓட்டுவதற்கு அற்புதமான பைக்காக இருந்தாலும், அதன் டிசைன் அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம். எனவேதான் மான்ஸ்டர் 797 பைக்கை, தனது என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்காக பொசிஷன் செய்திருக்கிறது டுகாட்டி.

என்ட்ரி லெவல் பைக் என்பது, விலை குறைவாக இருப்பதைத் தவிர, ஓட்டுவதற்கும் ஈஸியான பைக்காகவும் இருக்க வேண்டும். இதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறது டுகாட்டியின் பொறியாளர்கள் குழு. மும்பை எக்ஸ் ஷோரூம் விலையான 8.07 லட்சத்துக்குக் கிடைக்கக்கூடிய இந்த பைக்கின் அளவுகளை இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இதனுடன் 805மிமீ சீட் உயரம், 1,435 மிமீ வீல்பேஸ், 193 கிலோ எடை என்று காம்பேக்ட்டான 800சிசி பைக்காகவும் இருக்கிறது மான்ஸ்டர் 797. மேலும் மான்ஸ்டர் 821 பைக்குடன் ஒப்பிடும்போது, அகலமான ஹேண்டில்பார் மற்றும் தாழ்வாக பொசிஷன் செய்யப்பட்டுள்ள ஃபுட் பெக்ஸ் ஆகியவை சேர்ந்து, சொகுசான ரைடிங் பொசிஷனைக் கொடுக்கிறது.

மான்ஸ்டர் 797 பைக்கில், 803சிசி L-Twin Desmo2 இன்ஜினைப் பொருத்தியுள்ளது டுகாட்டி. இது 75bhp@8,250rpm பவரையும் - 6.89kgm@5,750rpm டார்க்கையும், பின்பக்கச் சக்கரங்களுக்கு செயின் டிரைவ் உதவியுடன் வெளிப்படுத்துகிறது.

இது இன்னும் அதிக பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய திறனைக் கொண்டிருந்தாலும், அனைத்து ஆர்பிஎம்மிலும் சீரான டார்க் டெலிவரிக்காக, டுகாட்டி இன்ஜினை டியூன் செய்திருப்பது புரிகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் APTC கிளட்ச், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் வசதிகளைக் கொண்டிருக்கிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்குகளைப் பொறுத்தவரை, முன்பக்கத்தில் 43 மிமீ Kayaba USD ஃபோர்க் - 320 மிமீ பிரெம்போ இரட்டை டிஸ்க் பிரேக் செட்-அப் மற்றும் பின்பக்கத்தில் Preload - Rebound அட்ஜஸ்ட்மென்ட்டுடன் கூடிய Sachs மோனோஷாக் - ஒற்றை 245மிமீ பிரெம்போ டிஸ்க் பிரேக் செட்-அப்பும் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஒரு 800சிசி பைக்கில், ஏபிஎஸ் தவிர எந்த எலெக்ட்ரானிக் அம்சங்களும் இல்லாதது மைனஸ்தான்!

யமஹாவின் FZ , FZ-S போல, டுகாட்டியும் மான்ஸ்டர் 797 பைக்கில் ‘மான்ஸ்டர் 797+’ எனும் வேரியன்ட்டைக் கூடுதலாக வைத்திருக்கிறது. இதிலாவது எலெக்ட்ரானிக் அம்சங்கள் இருக்குமென எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆம், ஹெட்லைட்டுக்கு மேலே சிறிய விண்ட் ஸ்க்ரீன் மற்றும் பின்பக்க சீட்டுக்கான கவர் மட்டுமே கூடுதலாக இருக்கிறது. ஆக, என்ட்ரி லெவல் பைக் என்பதற்காக, பெர்ஃபாமென்ஸ் விஷயத்தில் கொஞ்சம் தியாகம் செய்திருக்கும் டுகாட்டி, டிசைனில் நல்லவேளையாக எந்தச் சமரசமும் செய்யவில்லை. 1993-ம் ஆண்டில் வெளிவந்த மான்ஸ்டர் பைக்கைப் போன்ற சிம்பிளான டிசைனையே இது கொண்டிருந்தாலும், ஒரு டுகாட்டி பைக்குக்கே உரித்தான அத்தனை குணாதிசயங்களும் (சிவப்பு நிற ட்ரெல்லிஸ் ஃப்ரேம், 17 இன்ச் பைரலி டயர்கள், 2in1 எக்ஸாஸ்ட் பைப், LED பொசிஷன் லைட் உடனான வட்டமான ஹெட்லைட், கட்டுமஸ்தான பெட்ரோல் டேங்க், ஒட்டுமொத்தத் தரம்) மான்ஸ்டர் 797 பைக்கில் இருக்கின்றன.