இந்தியாவில் இந்த ஆண்டு, புதிதாக ஒரு வெளிநாட்டு பைக் நிறுவனம் கால்பதிக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் கிளீவ்லேண்ட்டைச் சேர்ந்த கிளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ், அவ்வளவாகப் பரிச்சயமில்லாத நிறுவனம். ஏனெனில், அமெரிக்காவில் இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, நூற்றாண்டைக் கடந்திருக்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்தான் பலரது நினைவுக்கு வரும். எனவே அதனுடன் ஒப்பிடும்போது, வெறும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2009-ல் மூன்று அமெரிக்கர்களால் (Scott Colosimo, Jarrod Streng, Curtis Ray) துவக்கப்பட்ட இந்நிறுவனம், பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கடந்த பிப்ரவரி 2010-ல், ‘The Heist’ எனும் பாப்பர் வகை மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்திய கிளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ், அடுத்த 7 ஆண்டுகளில் நான்கு புதிய மோட்டார் சைக்கிள்களை வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 நாடுகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும், தனது மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரிபாகங்களை, சீனாவில் இருந்துதான் கிளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ் பெறுகிறது. 125சிசி முதல் 450சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் இந்நிறுவனம், அந்த பைக்குகளில் இருக்கும் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்கள் அனைத்தும், ஹோண்டாவின் பழைய இன்ஜின்களை அடிப்படையாகக் கொண்டவை; இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும், எளிமையான தொழில்நுட்பத்துடன், அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கும் என்று கிளீவ்லேண்ட் கூறுகிறது.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Laish Madison MotorWerks (LMMW) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இந்தியாவில் கால்பதிக்கிறது இது. எனவே, தெலுங்கானாவில் பைக்குகளை அசெம்பிள் செய்யக்கூடிய தொழிற்சாலையை, இந்தக் கூட்டணி விரைவில் அமைக்க உள்ளது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகளும் ஏற்கனவே துவங்கிவிட்டன. முதல் கட்டமாக, Heist - Hardtail Bobber, Ace - Retro Classic Commuter, Misfit - Cafe Racer Style Premium Commuter, FXr - Dirt Bike, Hooligun - Dual Sport Enduro Style Bike ஆகிய ஐந்து மாடல்களைக் களம் இறக்குகிறது.

கிளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள், அமெரிக்காவில் குறைவான பராமரிப்புக்குப் பெயர் பெற்றவை. இதை உறுதிப்படுத்தும் விதமாக, எந்த எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களும் இந்த பைக்குகளில் இல்லை! $3,000 (இந்திய மதிப்பில் சுமார் 2.1 லட்ச ரூபாய்) விலைக்குக் கிடைக்கும் Ace-தான், இந்த நிறுவனத்தின் ஆரம்பகட்ட மாடல்.

விலை அதிகமாகத் தெரிந்தாலும், உள்நாட்டில் இருந்து பெறப்பட்ட பாகங்களைக் கொண்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்போது, பைக்கின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில், தனது பைக்குகள் மற்றும் டீலர்களை, ஒருசேர அறிமுகப்படுத்துகிறது கிளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ் நிறுவனம்.