சில கார்களில், USB சார்ஜிங் போர்ட் இருக்காது. ஆனால் மொபைல் சார்ஜிங்குக்கான சாக்கெட், எல்லா கார்களிலும் இருக்கும். லோக்கலாகக் கிடைக்கும் 100 ரூபாய் சார்ஜர்களில், சில நேரங்களில் வோல்ட்டேஜ் டிராப் ஆவதும், எகிறுவதும் நடக்கும். இது உங்கள் போனுக்கும் பவர் சாக்கெட்டுக்கும்தான் ஆபத்து. அப்படியே இருந்தாலும், உங்கள் ஆண்ட்ராய்டு போனையோ, USB-யையோ சார்ஜ் செய்வதற்கு சான்ஸே இல்லை. அப்படிப்பட்ட நேரங்களில், இந்த CurioCity USB டூயல் சார்ஜரை வாங்கி வைத்துக் கொள்ளுதல் நலம். டூயல் டைப் என்பதால் போன், USB என இரு விஷயங்களுக்கு, ஒரே நேரங்களில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், 11.8 V-க்குக் கீழேயோ, 18 V-க்கு மேலேயோ வோல்ட்டேஜ் இறங்கி ஏறினால், அலார்ம் அடித்துத் தானாகவே சார்ஜும் கட் ஆகிவிடும். இதில் LED டிஸ்ப்ளேவும் உண்டு என்பதால், ரிச் லுக்கிலும் இருக்கிறது. அமேஸான் வலைதளத்தில் இதை ஆர்டர் செய்யலாம்.

வீட்டில் இருந்து காரின் பம்பர் வரைக்கும், கிரில் போட்டாலே தனி அழகு என்பதுடன், பாதுகாப்பாகவும் இருக்கும். அந்த வகையில் ஹெட்லைட்டுகளுக்கும் கிரில் இருக்கிறது. சின்னச் சின்ன உரசல்களின்போது, ஹெட்லைட் சேதாரமாகாமல் இருப்பது அவசியம். சின்னப் பிரச்னை என்றால்கூட ஹெட்லைட் அசெம்பிளியை மொத்தமாக மாற்ற வேண்டும். இதற்காகத்தான் இந்த கிரில்லை, ஹெட்லைட்டைச் சுற்றி ஃபிக்ஸ் செய்துவிட்டால், ஹெட்லைட்டுக்கும் பாதுகாப்பு; கீறல்களும் விழாது. இண்டிகேட்டர், டெயில் லைட் போன்றவற்றுக்கும் கிரில் தனித்தனியாகக் கிடைக்கிறது. கறுப்பு, சில்வர் க்ரோம் என்று வெரைட்டியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எல்லா ஆக்சசரீஸ் கடைகளிலும் கிடைக்கிறது. ஆன்லைன் பர்ச்சேஸிங்கும் உண்டு.

ஏ.சி ஃபுல் ஸ்விங்கில் ஓடிக்கொண்டிருக்கும்; டெம்பரேச்சரும் 18 டிகிரியில் சில்லென இருக்கும்; ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் பின்புறமும் அடிப்புறமும் வியர்ப்பதுபோல் ஃபீல் பண்ணுவார்கள். இன்னும் சிலருக்குச் சட்டை நனைந்தே போயிருக்கும். இதற்குக் காரணம், ரூம் டெம்பரேச்சரைத் தாண்டி, நம் உடம்பிலிருந்து வெளிவரும் சூடு. கார்களில் ரெக்ஸின் மெட்டீரியலைக் கொண்டுதான் சீட்கள் தயாரிப்பார்கள். லெதர் சீட்டுகள் என்றால், கேட்கவே வேண்டாம்; இன்னும் சூடு பிடிக்கும். பாசிமணி சீட்கள், பருத்தித் தலையணைகள் போன்றவற்றையெல்லாம் வாங்கிச் சீட்டில் வைத்துப் பார்த்தாலும், சூட்டுப் பிரச்னைக்கு முடிவு கிடைக்காது.

‘‘இதற்காகத்தான் வெட்டிவேர் தலையணை இருக்கிறது’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுபத்ரா சந்திரசேகரன். ‘‘நான் ஸ்விஃப்ட் கார் வைத்திருக்கிறேன். நீண்ட தூரப் பயணங்களில், எனக்கும் இதே வியர்வைப் பிரச்னை வந்தது. நிறைய பேருக்கு உடல் சூடுதான் பல பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. அதைத் தவிர்க்கத்தான் இந்த ஐடியா! வெப்பத்துக்குச் சரியான சிம்மசொப்பனம் வெட்டிவேர்தான். இந்தத் தலையணை முழுக்க முழுக்க வெட்டிவேரைக் கொண்டு மட்டுமே தயார் செய்யப்படுவதால், எந்தச் சூழ்நிலையிலும் வெப்பமோ, சூடோ நம்மைத் தாக்காது’’ என்கிறார்.

இந்த வெட்டிவேர் தலையணையை, சீட்டுக்கு மேலும் முதுகுக்குப் பின்புறமும், வைத்து உட்கார்ந்து பயணித்தால் சூடே தெரியவில்லை! பிளாஸ்டிக் போன்ற மற்ற செயற்கைச் சமாச்சாரங்கள் எதுவும் இதில் இல்லாததால், நீண்ட தூரப் பயணங்களின்போது இதில் அமர்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தைரியமாகப் பயணிக்கலாம். லெதர் சீட்டுகள், சீட் ஃபேப்ரிக்குகள் என்று பயன்படுத்துவதற்குப் பதிலாக, சுத்தமான வெட்டிவேர் தலையணை, நிச்சயம் நல்ல சாய்ஸ்தான்; ஆனால், சடர்ன் பிரேக் போது, இதில் கொஞ்சம் கவனம் வேண்டும். தலையணை என்பதால், உட்காரும்போது சிலருக்கு கிரிப் கிடைக்காமல் போகலாம். (கிரீன்பஸ் ஆர்கானிக்ஸ்: 9884356639)