‘‘கார் ஓட்டுவது நிறைய பேருக்கு ஹாபி; எனக்குப் பழைய கார் வாங்குவது ஹாபி. எலான்ட்ரா, சான்ட்ரோ, ஸ்விப்ட்னு என்கிட்ட இருக்கிறது எல்லாமே யூஸ்டு கார்ஸ். ஹூண்டாய் மீது எனக்கு நல்ல அபிமானம் உண்டு. பழைய வெர்னா VGT CRDi மாடல் எப்படி சார் இருக்கும்?’’ என்று கேட்டிருந்தார் கரூரைச் சேர்ந்த கணேசன்.

கரூரில் உள்ள கொங்கு கார்ஸ் உரிமையாளர் மோகன், ‘‘நீங்க கேட்ட வெர்னா என்கிட்ட இருக்கு. தாராளமா டெஸ்ட் டிரைவ் பண்ணலாம்!’’ என்று நம்மை ஷோரூமுக்கு வரவேற்றார்.

வெள்ளை நிற வெர்னா... 70,000 கி.மீ ஓடியிருந்தது; டீசல் மாடல். ‘‘பழைய நடிகர் மோகன் பாட்டுகளை, வெர்னாவோட ஒப்பிடலாம். வெர்னா ரிலீஸானப்போ, மோகனைப்போல எக்கச்சக்க மார்க்கெட். இப்போ நீங்க வெர்னாவை ஓட்டினாலும், அந்தச் சுகம் வேறெந்த கார்லேயும் கிடைக்காதுங்கிறது இந்த மோகனோட அபிப்ராயம்!’’ என்றார் மோகன்.

“வெர்னாவை ரொம்ப புகழ்றீங்க!” என்று தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெர்னாவைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார் கணேசன். கரூரில் கார்மென்ட்ஸ் தொழிற்சாலை நடத்தும் கணேசனுக்கு, இது நான்காவது கார், ‘‘பாப்பாவுக்கு ஒயிட் கலர் பிடிச்சுருக்கா?’’ என்று தனது குட்டி மகளிடம் அபிப்ராயம் கேட்டபடி, வெர்னாவில் சில சந்தேகங்களைக் கேட்டார்.

வெர்னாவில் பெட்ரோல், டீசல் மாடல் இரண்டுமே வந்தது. ஸ்மூத் டிரைவிங் வேண்டும் என்றால், யாரிடமும் ஐடியாவே கேட்க வேண்டியது இல்லை. 1.6 லி பெட்ரோலுக்குப் போகலாம். டீசலையும் பெர்ஃபாமென்ஸில் அடிச்சுக்க முடியாது. அப்போதைய ஃபியஸ்டா, SX4, லீனியா எல்லாம் வெர்னாவுக்குப் பின்னால்தான். இதன் 1.5 லிட்டர், 110bhp பவர் கொண்ட CRDi இன்ஜின், நகரத்தில் டர்போ லேக்கால் லேசாக கோபம் வரவழைத்தாலும், ஹைவேஸில் பட்டையைக் கிளப்பும். ‘‘ஓட்டிப் பார்த்தா தெரிஞ்சுடும்!’’ என்ற கணேசன், சேலம் பைபாஸில் ஒரு ரவுண்ட் அடித்தார். இரண்டாவது, மூன்றாவது கியர்களில் முன்செல்லும் வாகனங்களை ஈஸியாகவே ஓவர்டேக் செய்ய முடிந்தது. ஆனால், சாப்ட் சஸ்பென்ஷன் செட்-அப் என்பதால், பின்பக்கம் லேசாகக் குலுங்கியது. ‘‘ஹோண்டா சிட்டியில் இந்த மாதிரி கிடையாது. ஹைவேஸில் கார் ஸ்டெடியாகப் பறக்கும்’’ என்றார் கணேசன்.

ஹூண்டாய் கார்களில் முன்பு பெரிய குறையாகப் பேசப்பட்ட விஷயம் - இதன் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங். நகரத்தில் லைட் ஆகவும், நெடுஞ்சாலையில் டைட் ஆகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஸ்டீயரிங்கின் விதி. அதாவது, அதிக வேகங்களில் நேர்கோடுகளில் ஸ்டீயரிங்கின் எடை வழக்கத்தைவிடக் கூடுதலாக இருந்தால், சிறந்த ஸ்டீயரிங். வெர்னா லேசாக அலைபாய்ந்தது. ‘‘ஆனா இது எனக்குப் பெரிய குறையா தெரியலை! கியர்பாக்ஸ் இன்னுமே ஸ்மூத்தா இருக்கு’’ என்றார் கணேசன்.

காரை நிறுத்திவிட்டு, உள்ளே உட்கார்ந்து ஏ.சி-யை ஆன் பண்ணி, ஸ்டீரியோவை ஓடவிட்டு, இருக்கையில் அமர்ந்து காலை நீட்டி மடக்கி உட்கார்ந்து பார்த்தார்கள். ‘‘புது ஃப்ளூயிடிக் வெர்னாவில்கூட இந்தளவு ஸ்பேஸ் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா, சிறப்பு அம்சங்கள் இப்போ மாதிரி இல்லை. கரெக்ட்டா?’’ என்று சந்தேகம் கேட்டார் கணேசன். வசதிகளில் ஹூண்டாயை அடித்துக்கொள்ள முடியாதுதான். ஆனால், அது ஃப்ளூயிடிக் வெர்னாவுக்குப் பிறகுதான். அதற்கு முன்பு ஹூண்டாயும் வசதிகளில் கஞ்சத்தனம்தான் காட்டி வந்தது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்ஸ், LED DRL, புரஜெக்டர் ஹெட்லைட்ஸ், பட்டன் ஸ்டார்ட், கீ-லெஸ் என்ட்ரி, காற்றுப் பைகள் என்று எதுவும் வெர்னாவின் டாப் மாடலான SX-ல்கூட இல்லாமல் இருந்தது. ‘ஆனா ஏபிஎஸ், கிளைமேட் கன்ட்ரோல் இருக்குதுங்க!’’ என்றார் மோகன்.

பழைய கார் வாங்கும்போது, டயர்களைத் தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும். ஹோண்டா சிட்டி, வெர்னா போன்ற செடான் கார்களில் 14 இன்ச் டயர்கள்தான். ஆனால், இதில் ஸ்போர்ட்ஸ் காரில் இருப்பதுபோல், 15 இன்ச் அலாய் வீலுடன் அகலமான டயர்களையும் பொருத்தியிருந்தார்கள். ‘இதுனால மைலேஜ் குறையாதாங்க?’’ என்று சந்தேகம் கேட்டார் கணேசனின் மனைவி.

மைலேஜைப் பொறுத்தவரை 14 முதல் 15 கி.மீ வருவதாகச் சொன்னார் மோகன். நெடுஞ்சாலையில் இன்னும் அதிகமாகவே கிடைக்கலாம். வெர்னா போன்ற பவர்ஃபுல் செடான்களுக்கு, நெடுஞ்சாலையில் 17கி.மீ கிடைப்பது ஆரோக்கியமான விஷயம். 70,000 கி.மீ ஓடியிருப்பதால், டயர்கள் மாற்றி 20,000 கி.மீ ஓடியிருக்கலாம். பட்டன்களை எப்படி செக் செய்ய வேண்டும் என்று வகுப்பு எடுத்தார் மோகன். பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, புது ஃப்ளூயிடிக் வெர்னாவில் 465 லிட்டர். பழைய வெர்னாவில் 352 லிட்டர்தான். ‘‘டிசையரை கம்பேர் பண்ணும்போது, வெர்னா டூர் அடிக்க ஓகேதான்!’’ என்றார் கணேசன். சிங்கிள் ஓனர், 70000 கி.மீ, 3.75 லட்சம் - இந்த கொட்டேஷனைச் சொன்னதும் வெர்னாவைவிட கணேசனுக்கு மனசில்லை. ‘‘ஏங்க, வாங்கிடலாம்ங்க!’’ என்று மனைவியிடம் இருந்தும் ஆர்டர் வந்துவிட, அப்போதே ஃபைனான்ஸியர் வரவழைக்கப் பட்டு, 3.50 லட்சத்துக்கு வெர்னாவை, ஸ்பாட் புக்கிங் செய்தார் கணேசன்!

வாசகர் தீர்ப்பு

‘‘ஹோண்டா சிட்டிதான் என் சாய்ஸாக இருந்தது. ஆனால், வெர்னாவை ஒப்பிடும்போது, அதன் ரீ-சேல் விலை அதிகமாக இருக்கிறது. இன்னொரு விஷயம் - பழைய சிட்டியில் டீசல் மாடல் இல்லை. சொகுசில் ஹோண்டா சிட்டிக்கு இணையாகவே இருக்கிறது வெர்னா. இந்த கார், கம்மியான கி.மீ.தான் ஓடியிருக்கு. இன்னும் 2 அல்லது 3 லட்சம் கி.மீ வரைக்கும் வெர்னாவைத் தைரியமா விரட்டிட்டு, மறுபடியும் சேல் பண்ணினாலும், வெர்னா நல்ல விலைக்குத்தான் போகும்! அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு!”