ஹாய்... என் பெயர் தினேஷ் தேவராஜன். நான் SRM மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகவும் பணிபுரிகிறேன். முதன்முறையாக நான் பைக் ஓட்டியது யமஹாவின் RX 100 மற்றும் சுசூகியின் ஷோகன்தான். கல்லூரியில் சேர்ந்த பிறகு, பல்ஸர் 180 பைக்கை வாங்கினேன். பின்பு, பல்ஸரை மட்டுமே கொண்ட எனது நண்பர்கள் 12 பேரை ஒன்று திரட்டி, ஒரு குழுவாவை உருவாக்கினோம்.

கடந்த 14 ஆண்டுகளாக, இப்போதும் நான் அந்த பைக்கைத்தான் பயன்படுத்தி வருகிறேன். அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி என்ன தெரியுமா? ‘என்ன சார் டாக்டர் ஆகிட்டீங்க, இன்னும் பைக்கிலேயே போறீங்க; கார் வாங்கலையா?’ என்பதுதான். எனது வீட்டிலும் கார் வாங்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எனக்கோ, பைக்குகள் மீதிருந்த ஈர்ப்பு காரணமாக, கார் மீது பெரிதாக ஆர்வம் எழவில்லை.

ஏன் டொமினார்?

பைக்கும் ரொம்ப பழையதாகிவிட்டதால், ‘சரி, கம்யூட்டர் பைக்கை ரொம்ப நாள் ஓட்டியாச்சு; பிரீமியம் பைக் ஏதாவது வாங்குவோம்’ என்ற மனநிலைக்கு வந்தேன். இது நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. பெனெல்லி TNT 300, கவாஸாகி நின்ஜா 300, யமஹா R3, UM ரெனிகாடே பைக்குகள் என்னைக் கவர்ந்தன என்றாலும், அவற்றின் விலை மிக அதிகமாக இருந்ததுடன், டீலர் நெட்வொர்க்கும் குறைவாகவே இருந்தன.

இப்படிப் பல குழப்பங்களுடன் இருந்த என்னை, பஜாஜின் CS400 பைக் மயக்கிவிட்டது. நாளடைவில் அது பல்ஸர் 400, Kratos, VS400 எனப் பல பெயர்கள் மாறினாலும், அந்த பைக்தான் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஷோரூம் அனுபவம்

கிவ்ராஜ் பஜாஜ் ஷோரூமில் பைக்கைப் பார்த்த மாத்திரத்திலேயே, அதனை ஸ்பாட் புக்கிங் செய்து வாங்கினேன். டொமினார் பைக் வாங்கியவர்களுக்கு எனப் பிரத்யேகமாக ஒரு வாட்ஸ்-அப் க்ரூப்பை வைத்திருக்கிறார்கள். எனவே, பைக் தொடர்பான எந்தச் சந்தேகம் மற்றும் பிரச்னைகளுக்கும், உடனடியாகத் தீர்வு கிடைத்துவிடுகிறது. மேலும் காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரத்தில் அழைத்தாலும், வீட்டுக்கே வந்து பைக்கை எடுத்துச் சென்று சர்வீஸ் செய்து தருகிறார்கள். அதனை வீடியோவாகவும் எடுத்து நமக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

பிடித்தது

சிங்கம் போன்ற கெத்தும், பளிச் LED ஹெட்லைட்டும் தான் டொமினாரின் அட்ராக்ஷன்! இதனாலேயே பைக்கில் உட்காரும்போது, ஒரு பெரிய பைக்கை ஓட்டுகிறோம் என்ற உணர்வு தானாக வந்துவிடுகிறது.
பைக்கின் இருபுறமும் அகலமான டயர்கள் மற்றும் பெரிய டிஸ்க் பிரேக்ஸ் என்பதால், அதிக வேகம் செல்வதற்கான நம்பிக்கை தானாகக் கிடைக்கிறது. டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பது மிகப் பெரிய பிளஸ்; டொமினாரின் அதிரடியான பிக்-அப் மற்றும் வேகம், கிட்டத்தட்ட இதே அளவு இன்ஜின் திறன் கொண்ட ராயல் என்பீல்டு பைக்குகளைவிட நன்றாக இருக்கிறது. டார்க் அதிகம் என்பதால், சிட்டியில் ஓட்டுவதும் உற்சாகம் கொடுப்பதாக இருக்கிறது.

இத்தனை விலை குறைவான பைக்கில், ஸ்லிப்பர் கிளட்ச் இருப்பது வரவேற்கத்தக்க அம்சம். ஓட்டுநர் இருக்கையும், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றபடி சொகுசாக இருக்கிறது. சீட்டிங் பொசிஷன் பக்கா. ராயல் என்பீல்டுடன் ஒப்பிடும்போது, டொமினாரில் அதிர்வுகள் மிக மிகக் குறைவு.

இதில் 100 கி.மீ வேகத்தில் ஸ்டேபிளாக க்ரூஸ் செய்யவும் முடியும்; தேவைபட்டால் 150 கி.மீ வேகத்தில் பறக்கவும் முடியும். பைக்கின் அதிக எடை, அதன் அசத்தலான கையாளுமையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மேலும், டயாவெல் பைக்கில் இருப்பதுபோன்ற ஸ்ப்ளிட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், பயனுள்ள தகவல்களைத் தெளிவாகத் தருகிறது. டொமினாரில் செல்லும்போது காலில் செருப்பு போட்டிருந்தால்தான், இன்ஜின் சூட்டை உணர முடிகிறது. ஆனால், இப்போது அடிக்கும் வெயிலும், அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஷூ போடும்போது அதுகூடத் தெரியவில்லை.

பிடிக்காதது

பைக்கின் பெட்ரோல் டேங்க் பார்க்க பெரிதாக இருந்தாலும், அதில் 13 லிட்டர் பெட்ரோல்தான் நிரப்ப முடியும் என்பது மைனஸ். சஸ்பென்ஷன் செட்-அப் சரியாக இருந்தாலும், தேவைப்பட்டால் அதனை அட்ஜஸ்ட் செய்யவும் முடியும். ஆனால், சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்பதால், உயரம் குறைவானவர்களுக்கு இது வசதிக் குறைபாடாக இருக்கும். மேலும், UM ரெனிகாடே பைக்கில் இருப்பதுபோன்ற யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயனில் இருக்கும் Hazard வார்னிங் இண்டிகேட்டர்கள், டொமினாரில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

LED இண்டிகேட்டர் பளிச்சென இருந்தாலும், அது அளவில் மிகச் சிறிதாக இருக்கிறது. அதேபோல, டொமினாரின் முன்பக்கத்தில் இருக்கும் பிரம்மாண்டம், பின்பக்கத்தில் மிஸ்ஸிங். டெயில் லைட்டும் வழக்கமான பல்ஸர் பைக்குகளைப் போலத்தான் இருக்கிறது. பைக்கின் வொயர்கள் ஒன்றுகூட வெளியே தெரியாமல் பக்காவாக பேக்கிங் செய்யப்பட்டிருந்தாலும், கிளட்ச் கேபிள் போல, ஏபிஎஸ் வொயர் வெளியே நீட்டிக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. செயினும் சத்தம் போடுவதுடன், அது விரைவாகவே தளர்ந்துவிடுகிறது. மெயின் ஸ்டாண்ட் இல்லை என்பதால், செயினை டைட் செய்து ஸ்பிரே அடிப்பது கடினமாக இருக்கிறது. விண்ட் ஸ்க்ரீன் ஏதும் இல்லை என்பதால், அதிக வேகத்தில் செல்லும்போது, முகத்தில் காற்று அறைவதைத் தடுக்க முடியவில்லை.

டியூக்கில் இருக்கும் Metzeler டயர்களை, டொமினாரில் பஜாஜ் பொருத்தி இருக்கலாம். ஏனென்றால், சில சந்தர்ப்பங்களில் பைக்கில் உள்ள MRF டயர், சிறப்பாக இல்லையோ என்ற உணர்வைத் தருகிறது. ஓட்டுநர் இருக்கை சொகுசாக இருந்தாலும், பின்னால் உட்காருபவரின் இருக்கை, அளவில் சிறிதாக இருக்கிறது. அது, நீண்ட தூரப் பயணங்களுக்கு வசதியாக இல்லை. மேலும் டியூக்போல, ஏபிஎஸ் சிஸ்டத்தைத் தேவைபட்டால் ஆஃப் செய்யக்கூடிய வசதி மற்றும் கியர் இண்டிகேட்டர் இங்கே மிஸ்ஸிங். தவிர, பிரேக்ஸும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். என்னதான் LED ஹெட்லைட் பிரகாசமாக இருந்தாலும், அது பக்கவாட்டுப் பகுதிகளில் அவ்வளவு வெளிச்சம் இல்லை. எனவே, க்ராஷ் பாரில் கூடுதலாக விளக்குகளைப் பொசிஷன் செய்திருக்கலாம். சிட்டி மைலேஜ் மிகக் குறைவாக இருக்கிறது (21 - 24 கிமீ). ஆனால், இதுவே நெடுஞ்சாலைகளில், 37 கிமீ மைலேஜ் கிடைக்கிறது.

தீர்ப்பு

ஒரு பக்காவான டூரிங் பைக் என டொமினார் பைக்கைக் கைகாட்ட முடியாது என்றாலும், வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் குழுவாகச் செல்வதற்கு ஏற்ற பைக்காக இது இருக்கிறது. சூப்பர் ஸ்டைல், அதிக வசதிகள், மிரட்டல் பெர்ஃபாமென்ஸ், அசத்தலான ஸ்டெபிலிட்டி மற்றும் கையாளுமை, போதுமான சொகுசு என, முதன்முறையாகப் பிரீமியம் பைக் வாங்குபவர்களுக்கான பக்கா பேக்கேஜாக இருக்கிறது டொமினார். இதன் விலையும், பராமரிப்புச் செலவுகளும் போட்டியாளர்களைவிடக் குறைவு என்பதால், ஒரு சரியான பைக்கைத்தான் வாங்கியிருக்கிறோம் என்ற மனநிறைவும் கிடைக்கிறது.