மகள்/மகன்களைப் பெற்ற அப்பா-அம்மாக்களுக்குக்கூடத் தெரியாத விஷயம்... குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் 4,000 மணி நேரத்தைப் பள்ளிக்குச் செல்வதற்காக மட்டும் செலவழிக்கிறார்கள். ‘அந்த 4,000 மணி நேரத்தைச் சந்தோஷமாக ஆக்குவதற்குத்தான் இந்த முயற்சி!’ என்று ‘சன்ஷைன்’ பேருந்தைக் கைகாட்டுகிறது அசோக் லேலண்டு.

‘சன்ஷைன்’ என்பது அசோக் லேலண்டில் இருந்து புதிதாக ரிலீஸாகியிருக்கும் பேருந்து. ‘ஸ்கூல் பஸ்’ என்ற லோகோவுடன் பள்ளிப் பேருந்தாகவே வெளிவந்திருக்கிறது சன்ஷைன். குழந்தைகளுக்குப் பிடித்த பளிச் கலரில், வண்ண வண்ண இருக்கைகளுடன், வெளிச்சாலை தெரியும் அளவுக்குத் தாழ்வான சீட் டிசைனுடன் இருந்த சன்ஷைன் பேருந்தை, அசோக் லேலண்ட்டின் டெஸ்ட் ட்ராக்கில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். பள்ளிப் பேருந்து என்பதால், பெர்ஃபாமென்ஸ், இன்ஜின் போன்றவற்றுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. 4 சிலிண்டர் BS4 டீசல் இன்ஜின். 32kgm டார்க், குறைந்த ஆர்பிஎம்-களில் பட்டையைக் கிளப்புகிறது. அதாவது, ராணுவ வாகனங்கள் டெஸ்ட் செய்யப்படக் கூடிய ‘டார்ச்சர் ட்ராக்’கில்கூட இரண்டாவது கியரிலேயே சன்ஷைன் ஜம்மென்று பயணத்தை ஜாலியாக்கியது. ‘‘இந்தக் குலுங்கல் பயணத்தைக் குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்!’’ என்றனர் லேலண்ட் இன்ஜினீயர்கள்.

5 ஸ்பீடு கியர்பாக்ஸ். ஷார்ட் கியரிங் என்பதால், சட்டென கியர்களை மாற்ற வேண்டியிருந்தது. ஆனால், இதுதான் பேருந்துகளுக்குச் சரியான நடைமுறை. மேலும் ஸ்பீடு கவர்னர் இருப்பதால், ஹைஸ்பீடு டெஸ்ட் ட்ராக்கில், ஆக்ஸிலரேட்டரில் ஏறி நின்றால்கூட 60 கி.மீ-யைத் தாண்ட முடியவில்லை. இது நல்ல ஆப்ஷன். ‘ரோடு காலியாத்தானே இருக்கு’ என்று எந்த டிரைவரும் பஸ்ஸை விரட்ட முடியாது. சன்ஷைனில் பாதுகாப்பையும், ஃபன்னையும் முக்கிய அம்சமாக்கி இருக்கிறார்கள். “பொதுவாக குழந்தைகள் பஸ்களில் ஏறியதும், வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஒரு குகைக்குள் இருப்பதுபோல் இருக்கும். இதில் விண்ட்ஷீல்டில் இருந்து விண்டோஸ் வரைக்கும் தாழ்வாக வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனால், வெளிச்சாலை நன்றாகத் தெரிவதால், குழந்தைகள் குதூகலமாக இருக்கலாம்!’’ என்றார் அசோக் லேலாண்ட் R&D-யின் துணைத் தலைவர் சத்யபிரசாத்.

இதில் முக்கியமாக ‘i-அலர்ட்’ என்னும் பாதுகாப்பு சிஸ்டம்; அதாவது, டிரைவர் எங்கே இருக்கிறார் என்கிற தகவல், GPS மூலமாகச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளின் மொபைலுக்கு மெசேஜ் போய்விடும். விபத்தின்போது உள்ளே பயணிப்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதால், இதன் பாடி ஷெல், ‘ஃப்ரன்டல் இம்பேக்ட் க்ராஷ் புரொடக்ஷன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக ‘ரோல்-ஓவர் புரொடக்ஷன்’ டிசைனுடன் வெளிவந்துள்ள பேருந்து, சன்ஷைன்தான்.

பாக்டீரியாக்கள் மூலம் தொற்றுநோய் பரப்பாத ஆன்ட்டி மைக்ரோபயல் இருக்கைகள் என்று இன்டீரியரிலும் லைக்ஸ் வாங்குகிறது அசோக் லேலண்டு.

ஏ.சி, டியூப்லெஸ் டயர்கள், ஏபிஎஸ், 2X2, 3X2 சீட் லே-அவுட் என்று குட்டிக் குட்டி மாற்றங்களுடன் மொத்தம் 100 வேரியன்ட்களில் கல்லூரிப் பேருந்தாகவும் வெளிவர இருக்கிறது சன்ஷைன்.