ஹாய்... நான் வருண். எனக்கு கார் ஓட்டுவது பிடித்தமான விஷயம். இதுவரை எத்தனையோ கார்களை நான் ஓட்டியிருக்கிறேன். ஆனால், மாருதி இக்னிஸ் எனக்கு மிகவும் ஸ்பெஷல். கார் வாங்கியது முதல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஏன் இக்னிஸ்?

நான் நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பதால், கார் நிறுத்துவது கொஞ்சம் சிக்கலான விஷயம். பார்க்கிங்குக்காகவே காம்பேக்ட் கார்தான் என் சாய்ஸாக இருந்தது. இக்னிஸின் அழகான டிசைன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உள்வடிவமைப்பு காம்பேக்ட் ஆகவும், நல்ல லுக்காகவும் இருக்கிறது. போக்குவரத்தில் புகுந்து புறப்பட சின்ன கார்கள்தான் சரியான சாய்ஸ். நான் வாங்கியது, பெட்ரோல் மாடல்; 1.2 கே-சீரிஸ் இன்ஜின். போக்குவரத்தில் சிக்காமல் அலுவலகத்துக்குச் சீக்கிரமாகவே அட்டெண்டென்ஸ் போட முடிகிறது.

ஷோரூம் அனுபவம்

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கும் ஆதி நெக்ஸா ஷோரூமில்தான் காரை வாங்கினேன். அங்கே பணியாளர்கள் மிகவும் வாஞ்சையாகப் பேசியதுடன் என், விருப்பங்களையும் புரிந்துகொண்டனர். என்னுடைய பட்ஜெட்டில், என் தேவைகளை எல்லாம் இக்னிஸால்தான் பூர்த்தி செய்ய முடியும் என்று, அவர்கள்தான் எனக்கு புரியவும் வைத்தார்கள். நான் இக்னிஸ் வாங்குவதற்கு இந்த நெக்ஸா ஷோரூமும் ஒரு காரணம். எனக்கு எந்த விஷயங்கள் தேவை, தேவையில்லை என்பது என்னைவிட அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.

பிடித்தது

சிலருக்கு இதன் டிசைன் பிடிக்கவில்லை என்கிறார்கள். ஆனால், இதன் அடக்கமான, ஆடம்பரமில்லாத டிசைனும், ரிச் லுக்கும்தான் என்னை மிகவும் கவர்ந்தது. கண்ணை உறுத்தாமல் கவர்ச்சியாக இருக்கிறது இக்னிஸ். இதன் இன்டீரியர் டிசைனும் மிகவும் கவனத்தைக் கவர்வதாக இருக்கிறது. தேவையானால் பொருத்திக் கொள்ள நிறைய ஆக்ஸசரீஸ்களும் கிடைக்கின்றன. மேலும் 16 வகையான ரூஃப் டிசைன்களில் இருந்து நம் விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். மேனுவல் கியர், ஆட்டோமேட்டிக் கியர் என்று நம் பயன்பாட்டிற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். பகலில் ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட் லைட், என அனைத்தும் இக்னிஸுக்கு அழகு.

இக்னிஸின் எல்லா வேரியன்ட்களிலும் காற்றுப் பைகளும் ஏபிஎஸ் பிரேக்ஸும் கொடுத்திருக்கிறார்கள். ‘அச்சோ; பேஸ் வேரியன்ட் வாங்கிவிட்டோமே’ என்று கவலைப்பட வேண்டியது இல்லை. எனவே, பாதுகாப்பைப் பொறுத்தவரை எந்தப் பயமும் தேவையில்லை. வழக்கமாக ஹூண்டாயில்தான் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கும். இக்னிஸ் இந்த விஷயத்தில் சூப்பர். இந்த விலையில் இவ்வளவு தனிச்சிறப்புகள், இந்தக் காரில் மட்டும்தான் கிடைக்கின்றன.

பிடிக்காதது

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், சீட் ஹைட் அட்ஜஸ்ட், டச் ஸ்க்ரீன் போன்றவை... டாப் வேரியன்ட்களில் இருக்கின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் பேஸிக் மாடல்களிலிலேயே கொடுத்திருக்கலாம்.
ஆட்டோமேட்டிக் என்பதால், ஓவர்டேக் செய்யும் போது தானாக கியர் மாறுவது தெரிகிறது. இந்த நேரத்தில் கார் சின்னதாக ஜெர்க் ஆகிறது. இது எனக்கு நெருடலாக இருக்கிறது.

என் தீர்ப்பு:

டிசைனை வைத்தே சொல்லிவிடலாம். முழுக்க முழுக்க இது ஒரு சிட்டி கார். அதாவது, நகரத்து நண்பன் மாருதி இக்னிஸ்!