எனது பட்ஜெட் நான்கு லட்சம் ரூபாய். மூன்று வரிசை இருக்கைகளுடன், சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க் கொண்ட கார் எனக்குத் தேவைப்படுகிறது. யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய ஹோண்டா CR-V, மிட்சுபிஷி அவுட்லேண்டர், மஹிந்திரா ஸைலோ, மஹிந்திரா பொலேரோ ஆகியவற்றில் எதை வாங்கலாம்?

- பழனிசாமி, ஈரோடு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள கார்களில், ஹோண்டா CR-V மற்றும் அவுட்லேண்டர் ஆகியவை பிரீமியம் செக்மென்ட்டைச் சேர்ந்தவை என்பதுடன், உற்பத்தி நிறுத்தப்பட்ட மாடல்கள். எனவே, அவை உங்களுக்குக் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைத்தாலும், இவற்றின் பராமரிப்புச் செலவு மற்றும் உதிரி பாகங்களின் விலை அதிகமாகவும், காரின் ரீ-சேல் மதிப்பு குறைவாகவும் இருக்கும். எனவே, உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, மஹிந்திரா ஸைலோ உங்களுக்கு ஏற்ற காராக இருக்கிறது. உங்கள் பட்ஜெட்டை நீங்கள் சற்று அதிகரித்தால், மாருதி சுஸூகியின் எர்டிகா காரைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.

நான் தற்போது எலீட் i20 பெட்ரோல் காரைப் பயன்படுத்தி வருகிறேன். ஹூண்டாயின் i30 எப்போது இந்தியாவுக்கு வரும்?

- வனமாமலை, திருநெல்வேலி.

ஹூண்டாய் நிறுவனம் தற்போது தயாரிக்கும் அனைத்து ஹேட்ச்பேக் கார்களும் நன்கு விற்பனையாகும் நிலையில், பலவிதமான பாடி ஸ்டைல்கள் கொண்ட அடுத்த தலைமுறை i30 காரை, இந்தியாவில் தற்போது களமிறக்கும் எண்ணத்தில் இல்லை. நீங்கள் வைத்திருக்கும் i20 காருக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரீமியம் செக்மென்ட்டின் டிரெண்டைப் பொறுத்து, வருங்காலத்தில் i30 குறித்து ஹூண்டாய் முடிவு செய்யும்.

யமஹா R15 V3.0 பைக், இந்தியாவுக்கு எப்போது அறிமுகமாகும்? நான் R15 V2.0 பைக்கை வாங்கலாம் என்று இருக்கிறேன். எனக்கு உங்களின் ஆலோசனை என்ன?

- விக்னேஷ், மதுரை.

தற்போது விற்பனையில் இருக்கும் பைக்குடன் ஒப்பிடும்போது, பல அதிரடியான மாற்றங்களைக் கண்டிருக்கிறது R15 வெர்ஷன் 3.0. LED ஹெட்லைட்ஸ், முன்பக்க USD ஃபோர்க், Ram Air Intake, ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல் டோன் கலர்கள் கொண்ட புதிய ஃபுல் ஃபேரிங், ஸ்லிப்பர் கிளட்ச் என விலை அதிகமான பைக்குகளில் காணப்படும் பல வசதிகளைக் கொண்டிருக்கிறது, யமஹாவின் புதிய R15 வெர்ஷன் 3.0. இதில், R15 பைக்குக்கே உரித்தான DeltaBox ஃப்ரேமில், புதிய 155சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. ஃப்யூல் இன்ஜெக் ஷன் தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், யமஹாவின் புதிய Variable Valve Actuation தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. எனவே, தற்போதைய மாடலைவிட, புதிய R15-ன் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டர்போ லேக் என்றால் என்ன?

- மாரிமுத்து, கோயம்புத்தூர்.

பெரும்பாலும் டீசல் இன்ஜின்கொண்ட கார்களில் டர்போ சார்ஜர் பயன்படுத்தப்படுகின்றன. டர்போ சார்ஜர் என்பது, இன்ஜினுக்குத் தேவையான காற்றை அதிக அழுத்தத்துடன் அனுப்புவது. டர்போ சார்ஜர், எக்ஸாஸ்ட் கேஸ் மூலமே இயக்கப்படுவதால், அதிக அழுத்தத்துடன் எக்ஸாஸ்ட் கேஸ் வெளியேறினால் மட்டுமே இது சீராக இயங்கும். எனவே, இன்ஜின் ஆர்பிஎம் அதிகரிக்கும்போதுதான், கூடுதல் அழுத்தம் டர்போ சார்ஜருக்குக் கிடைக்கிறது. குறைவான ஆர்பிஎம்-ல் டர்போ சார்ஜர் சரிவர இயங்காது என்பதால், இன்ஜினுக்குச் செல்லும் காற்று அழுத்தத்துடன் செல்லாது. அதைத்தான் டர்போ லேக் என்கிறோம். உதாரணத்துக்கு, ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களில், 2,000 ஆர்பிஎம் வரை பவரே இல்லையென்றும், அதைத் தாண்டிய பிறகு பெர்ஃபாமென்ஸ் சூப்பர் எனச் சொல்கிறோம். இங்கே 2,000 ஆர்பிஎம் தாண்டிய பிறகு, டர்போ சார்ஜர் பணிபுரியத் தொடங்கிவிடுகிறது என்பதால், மிட் ரேஞ்ச் தொடங்கி டாப் எண்ட் ஆன 5,000 ஆர்பிஎம் வரை கெத்து காட்டுகிறது இந்த இன்ஜின்.

நான் புதிதாக 150 சிசி பைக் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். வாரம் ஒருமுறை ஊருக்குச் சென்று வருவேன் என்பதால், 200 கி.மீ வரைக்கும் பயணிப்பேன். ஹோண்டா யூனிகார்ன், ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ், பஜாஜ் பல்ஸர் 150, டிவிஎஸ் அப்பாச்சி 160 - ஆகியவற்றில் சிறந்த, பாதுகாப்பான பைக் எது?

- பழனிகுமார், சென்னை.

நீங்கள் குறிப்பிட்டுள்ள 150 சிசி பைக்குகள் அனைத்தும் கம்யூட்டர் வகையைச் சேர்ந்ததுடன், அந்த செக்மென்ட்டின் பழைய மாடல்கள். வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்கி, யூனிகார்ன் 150 சிசி பைக்கை மறு அறிமுகம் செய்தது ஹோண்டா. ஆனால், இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, அதன் விலை அதிகம்; மேலும் ஸ்மூத் இன்ஜின் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷனைத் தாண்டி, இதில் ஈர்க்கும் அம்சங்கள் எதுவும் இல்லை. நீங்கள் கூறியதிலேயே சற்று ஸ்போர்ட்டியான மாடல்கள் அப்பாச்சி மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் ஆகியவையே. ஆனால், இதில் அப்பாச்சிதான் சிறந்த சாய்ஸாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட BS-IV இன்ஜினுடன் கூடிய பல்ஸர் 150 பைக்கை, கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது பஜாஜ். இது உங்களுக்குப் பொருத்தமான பைக்காக இருக்கும்.