இட்லி முதல் இன்டர்நெட் வரை இப்போது எல்லாமே எலெக்ட்ரானிக் சிஸ்டத்துக்கு மாறிவிட்டன. அதுவும் ஆட்டோமொபைல் உலகில் பெரும்பான்மையானவை எலெக்ட்ரானிக்ஸ்தான். பவர் ஸ்டீயரிங், பிரேக், பவர் விண்டோஸ், பவர்டு மிரர், பவர்டு சீட்ஸ் என்று ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில், கார்களில் உள்ள ‘டிரைவ் பை வொயர்’ சிஸ்டத்தின் அடுத்த ஸ்டெப்பாக வந்ததுதான் ‘Ride by Wire’ தொழில்நுட்பம். இது முழுக்க முழுக்க சென்ஸார் சிஸ்டம். ‘ரைடு பை வொயர்’ தொழில்நுட்பத்தை முதன் முதலில் யமஹாதான் தனது YZF-R6 சூப்பர் பைக்கில் கொண்டு வந்தது. ரேஸ் ட்ராக்கில் ஓடும் பெரிய இன்ஜின் கொண்ட சூப்பர் பைக்குகளுக்குத்தான் இந்தத் தொழில்நுட்பம் தேவை என்று விதியாக இருந்ததை மாற்றிவிட்டது, கேடிஎம் நிறுவனம். இதைத் தனது 390 சிசி பைக்குகளின் ஃபேவரைட் தொழில்நுட்பமாக்கி விட்டது. இப்போது கம்யூட்டர்களும் ‘ரைடு பை வொயர்’ மூலம் பைக்கில் ஜாலி ரைடு போக ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு பைக்கின் பெர்ஃபாமென்ஸுக்கு த்ராட்டில் ரெஸ்பான்ஸும் ரொம்ப முக்கியம். சில பைக்குகள் ஆக்ஸிலரேட்டர் முறுக்க முறுக்க கை வலி ஏற்படும். அதாவது, த்ராட்டில் ரொம்பக் கஷ்டமாக இருக்கும். ‘கார்புரேட்டர் இன்ஜின்தானே; அப்படித்தான் இருக்கும்’ என்று கடந்துவிடாமல், ஆக்ஸிலரேட்டர் கேபிளை மாற்றினால்கூட ஓகேதான். ஆனால், அதைத் தாண்டி த்ராட்டில் ரெஸ்பான்ஸுக்குப் பெரிதும் உதவுவது, ‘ரைடு பை வொயர்’.

இந்தத் தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளை ஓட்டும்போதே தனி ஃபீல் தெரியும். பழைய பைக்குகளில் கார்புரேட்டருக்கும் ஆக்ஸிலரேட்டருக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். நீங்கள் ஆக்ஸிலரேட்டரை முறுக்கி விடும்போது, ஆக்ஸிலரேட்டர் கேபிளைக் கவனியுங்கள். கார்புரேட்டர் பாடியில் இருக்கும் ஒரு வால்வ், ‘சட் சட்’ என மேலும் கீழும் இயங்கும். இதற்கு ‘பட்டர்ஃப்ளை வால்வ்’ என்று பெயர். அவசரத்திலோ, ஆத்திரத்திலோ பைக்கின் ஆக்ஸிலரேட்டரை நீங்கள் வெறித்தனமாக முறுக்கும்போது, இந்த வால்வ் படுவேகமாக வேலை செய்து பைக் பறப்பதுபோல் இருக்கும். ஆனால், இதனால் அதிகப்படியான காற்றும் எரிபொருளும் கலக்க முடியாமல் கலந்து, மோசமான எரிதல் தன்மை நடந்து இன்ஜின் திணறும். வெளியே சிரித்தாலும் உள்ளே இன்ஜின் அழத்தான் செய்யும். ஆனால், ‘ரைடு பை வொயர்’ சிஸ்டத்தில் இன்ஜின் எப்போதுமே ஹேப்பி அண்ணாச்சி.

கார்புரேட்டர் இன்ஜினில் இருக்கும் ஆக்ஸிலரேட்டருக்கும் த்ராட்டிலுக்கும் உள்ள மெக்கானிக்கல் லிங்க்கேஜ், ‘ரைடு பை வொயர்’ தொழில்நுட்பத்தில் இருக்காது. கார்புரேட்டர் இன்ஜினுக்குப் பிறகு வந்த ஃப்யூல் இன்ஜெக் ஷன் சிஸ்டத்தில்தான் ‘ரைடு பை வொயர்’ வேலை செய்யும். ‘ஏதோ கன்னாபின்னாவென வொயர் சேர்த்திருப்பாங்களோ’ என்று நினைத்தால், அப்படியே அதற்கு எதிர்ப்பதமாக அமைந்திருக்கிறது இந்த சிஸ்டம். இங்கே வொயர்கள் என்பது சென்ஸார்களைக் குறிக்கிறது. நீங்கள் ஆக்ஸிலரேட்டரை முறுக்கிய அடுத்த மைக்ரோ செகண்ட், த்ராட்டில் கேபிள், Transponder-ஐ ஆக்டிவேட் செய்கிறது.

‘ட்ரான்ஸ்பாண்டர்’ என்பது ரேடியோ சிக்னலை ட்ரான்ஸ்மிட் செய்யும் கருவி. இந்த ட்ரான்ஸ்பாண்டர், த்ராட்டில் அளவை எலெக்ட்ரிக் சிக்னலாக மாற்றி, பைக் இன்ஜினில் உள்ள ‘ECU’-க்கு அனுப்புகிறது. த்ராட்டில் செய்தவுடன் எரிபொருள் + காற்று கலவை ஃப்யூல் இன்ஜெக்டர் மூலம் இன்ஜினுக்குள் அனுப்பப்படும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவர் எந்த அளவுக்கு ஆக்ஸிலரேட்டரை முறுக்குகிறாரோ, அதற்குத் தேவையான எரிபொருளையும் காற்றையும் சிலிண்டருக்குள் சரியான விகிதத்தில் அனுப்புவதில்தான் ‘ரைடு பை வொயரின்’ அம்சமே இருக்கிறது. சாப்பாடு கூடினாலும் குறைந்தாலும் வயிற்றுக்கு ஆபத்துதான்; அதுபோல்தான் எரிபொருள்+காற்று கலவையும். கூடவும் கூடாது; குறையவும் கூடாது. மிகச் சரியாக, தேவையான அளவு மட்டுமே எரிபொருள் கலவை இன்ஜினுக்குள் செலுத்தப்படுவதால், ஸ்மூத்தான ஆக்ஸிலரேஷனும், அசத்தலான மைலேஜும் நிச்சயம்.

நாள்பட்ட சில பைக்குகள் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால், சாலையையே மறைக்கும் அளவுக்குக் கரி அள்ளித் துப்பும். ரைடு பை வொயர் பைக்குகளில், எமிஷன் அளவு பக்கா. இன்ஜினுக்குள் ஆயுளுக்கும் கேரன்ட்டி. விமானங்களில் இருக்கும் ‘Fly by Wire’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்துத்தான் கார்களில், ‘Drive by Wire’ சிஸ்டத்தைக் கொண்டுவந்தார்கள். ‘டிரைவ் பை வொயர்’-ஐ வைத்து பைக்குகளுக்கு வந்ததுதான் ‘ரைடு பை வொயர்’.

‘ரைடு பை வொயர்’ மூலம் எக்கச்சக்க நன்மைகள், ரைடருக்கும் பைக்குக்கும் கிடைக்கின்றன. ஸ்மூத்தான ஆக்ஸிலரேஷன், சரியான பவர் டெலிவரி, அதிக மைலேஜ் - இவை தாண்டி பைக்குகளில் க்ரூஸ் கன்ட்ரோல், ட்ராக் ஷன் கன்ட்ரோல், ரைடு மோடு செலெக்டர் போன்ற நல்ல விஷயங்கள் வந்ததற்கு மூலக் காரணமே இந்த ‘ரைடு பை வொயர்’தான். எல்லாமே எலெக்ட்ரிக்கலாக நடப்பதால் க்ரூஸ் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்புச் சமாச்சாரங் களையும் இதுவே பார்த்துக்கொள்ளும்.

அதேநேரத்தில், ‘ரைடு பை வொயர்’ எல்லா நேரங்களிலும் ஸ்மூத்தானது இல்லை. ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதுபோல், சர்வீஸ் என்று வரும்போது பர்ஸைப் பதம் பார்க்கும் சூப்பர் பைக் அம்சம் என்பதால், பல நிறுவனங்கள் இதை அறிமுகப்படுத்தவில்லை. யமஹா, பிஎம்டபிள்யூ, சுஸூகி போன்ற சில சூப்பர் பைக்குகளில் ‘ரைடு பை வொயர்’ சிஸ்டம் மாற்றியமைக்க மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 60,000 எடுத்து வைக்க வேண்டும். குறைந்த சிசி பைக்குகளில் மேற்கண்ட நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பிறகுதான், கேடிஎம் ரொம்பவும் யோசித்து தனது 390 சிசி பைக்குகளில் ‘ரைடு பை வொயர்’-ஐக் கொண்டு வந்திருக்கிறது. சர்வீஸ் காஸ்ட் கொஞ்சூண்டு அதிகமாக இருந்தால் என்ன... செம டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குமே!

‘ரைடு பை வொயர்’ தொழில்நுட்பம் கொண்ட இந்திய பைக்குகள் கேடிஎம் டியூக் 390, கேடிஎம் டியூக் RC390 இரண்டு பைக்குகள் மட்டும்தான். மற்றபடி 1,000 சிசி பைக்குகள் அனைத்திலும் ‘ரைடு பை வொயர்’ தொழில்நுட்பம் இருக்கிறது.

* சுஸூகி GSX 1000
* கவாஸாகி ZX-10R
* ட்ரையம்ப் டேடோனா
* ஹோண்டா CBR1000 RR
* பிஎம்டபிள்யூ S1000 RR
* ஏப்ரிலியா RSV4
* MV அகுஸ்டா F3
* டுகாட்டி டயாவெல்
* டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா
* டுகாட்டி 1299 பனிகாலே
* யமஹா YZF-R6