மஹிந்திராவின் பழைய e2O எலெக்ட்ரிக் கார்தான்; இப்போது அப்கிரேட் ஆகி பளபளப்பாக ‘மஹிந்திரா e2O ப்ளஸ்’ என்ற பெயரில் வந்திருக்கிறது,

பழசு 2-டோர்; இது 4-டோர். பழைய காரில் பின்னால் இட நெருக்கடி இருக்கும்; இதில் நல்ல இடவசதி. மேலும் டச் ஸ்க்ரீன், 135 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் லெக்ரூம், எலெக்ட்ரிக் விங் மிரர்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வாகனத்தின் வேகம், டிரைவ் மோடு விவரம், மைலேஜ், சார்ஜிங் அளவு, டிஸ்ட்டன்ஸ் டு எம்ப்ட்டி போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால், உள்ளே பிளாஸ்டிக்குகள் சீப்பான குவாலிட்டியோ என்று நினைக்கவைக்கின்றன.

41bhp பவர், 9.1kgm டார்க் - இதுதான் e2O ப்ளஸ்ஸின் 72V பேட்டரியின் டெக்னிக்கல் அம்சங்கள். ஃபார்வேர்டு மோடில் வைத்துவிட்டு, ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தால், கார் நகர்வதற்கு கொஞ்சம் யோசிக்கிறது. இத்தனைக்கும் 2-டோர் காரைவிட 69% டார்க் அதிகம். ஆனால், பூஸ்ட் மோடில் திருப்தி கிடைத்தது.

ஒரு ஃபுல் சார்ஜிங்குக்கு 9 மணி நேரம் ஆகும். இதில், 140 கி.மீ வரை போகலாம் என்கிறது மஹிந்திரா. பழைய காரில் 110 கி.மீ வரைதான் போக முடிந்தது. ஆனால், பழைய மாடலில் 5 மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும்; இதில் 3 மணி நேரம் எக்ஸ்ட்ரா. . இதிலேயே 48V பேட்டரி கொண்ட லோ வேரியன்ட்டும் உண்டு.

e2O ப்ளஸ்-ல் குவிக் சார்ஜிங் ஆப்ஷன் இருக்கிறது. வெறும் 90 நிமிடத்தில் 90% சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். ஆனால், இதற்கு மஹிந்திரா பவர் ஸ்டேஷனுக்குத்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால், எக்ஸ்ட்ராவாக 6 லட்சம் செலவழித்து, வீட்டில் பவர் ஸ்டேஷன் அமைத்துக்கொள்ள வேண்டும்.