ஆந்திராவில் கியா!

மாருதி சுஸூகிக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் ஹூண்டாயின் குழும நிறுவனங்களில் ஒன்றான கியா மோட்டார்ஸ், நீண்ட காலமாக இந்திய கார் சந்தையைக் கவனித்து வந்தது. தற்போது ஒரு வழியாக, ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தாபூரில் தொழிற்சாலை தொடங்க முடிவெடுத்திருக்கிறது. சுமார் 7,050 கோடி ரூபாய் முதலீட்டில், 536 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலை, 2019-ம் ஆண்டின் இறுதியில் கார்களை உற்பத்திசெய்யத் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய 2 மாடல் கார்கள் முதலில் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யக்கூடிய வகையில், கியா மோட்டார்ஸின் தொழிற்சாலை கட்டமைக்கப்படும் எனவும், முதற்கட்டமாக 40 சதவிகிதம் வரையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்களுடன், ஹூண்டாயின் இன்ஜின்களும் கார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பில் டஸ்ட்டர் எப்படி?

ஒரு விபத்து நேரும்போது, நாம் பயணிக்கும் காரின் கட்டுமானம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்பதைச் சொல்லும் சர்வதேச அமைப்புதான் ‘Global NCAP’. இவர்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பிரபலமான கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து, அவற்றின் பாதுகாப்பு அளவுகளைப் புட்டுப்புட்டு வைப்பது தனிக்கதை. தற்போது ஒரகடத்தில் உள்ள ரெனோ - நிஸான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியை, சமீபத்தில் க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்தியது Global NCAP. இதில் காற்றுப்பை இல்லாத பேஸ் வேரியன்ட் ஜீரோ ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கையும் ஓட்டுநருக்கான காற்றுப்பை கொண்ட மிட் வேரியன்ட் (RXL) 3 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கையும் பெற்றுள்ளன.

செவர்லே கார்கள் இனி இல்லை!

அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், இந்தியாவில் கால்பதித்து ஏறக்குறைய 21 ஆண்டுகள் (1996 - 2017) ஆகிவிட்டன. அவர்களால் போட்டி மிகுந்த இந்திய கார் சந்தையில், ஒரு நிலையான இடத்தைப் (வெறும் 0.85% மார்க்கெட் ஷேர்) பிடிக்க முடியவில்லை. மிக மந்தமான கார் விற்பனை மற்றும் அதிக நஷ்டம் என நிறுவனம் ஒரேடியாகக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக, தனக்குச் சொந்தமான Opel, Vauxhall பிராண்டுகளை ஃபிரான்ஸின் Peugeot - Citroen நிறுவனத்திடம் விற்றுவிட்டதுடன், தான் ஆப்ரிக்காவில் கவனித்துவந்த கார் விற்பனையையும், ஜப்பானிய நிறுவனமான இசுஸூவிடம் கைமாற்றிவிட்டது. குஜராத்தில் (Halol) உள்ள தனது கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, கடந்த ஏப்ரல் 28-ல் ஜெனரல் மோட்டார்ஸ் மூடுவிழா நடத்திவிட்டது. இதனைச் சீனாவின் SAIC நிறுவனம் வாங்க உள்ளதாகத் தகவல். தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக புனேவில் (Talegaon) இருக்கக்கூடிய மற்றொரு கார் தொழிற்சாலையில், இனி ஏற்றுமதி சந்தைகளுக்குத் தேவையான கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என அந்த நிறுவனம், கடந்த மே 18-ல் அறிவித்தது. மேலும், 2017 இறுதியோடு, இந்தியாவில் தனது கார்களின் விற்பனையை நிறுத்த முடிவெடுத்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். ஆனால், இந்தியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் 150 டீலர்களும், தொடர்ந்து செவர்லே கார்களுக்கான சர்வீஸ் - உதிரிபாகங்கள் போன்ற வசதிகளைச் செய்து தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறையுமா வால்வோ?

இந்தியாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றுவரை CBU முறையில் (V40, V40 Cross Country, S60, S60 Cross Country, S60 Polestar, S90, XC60, XC90) - தன் கார்களை இறக்குமதி செய்தே விற்பனை செய்து வருகிறது வால்வோ. ஆனால், உள்நாட்டிலேயே கார்களை அசெம்பிள் செய்யும் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஜாகுவார் நிறுவனத்தின் கார்களுடன் ஒப்பிடும்போது, அதிக இறக்குமதி வரி இருந்தாலும், தனது கார்களின் விலையை அசத்தலாகவே இந்த நிறுவனம் நிர்ணயித்து வந்திருக்கிறது. தற்போது லக்ஸூரி கார்களுக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டை மனதில் வைத்து, உள்நாட்டிலேயே தனது கார்களை அசெம்பிள் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறது வால்வோ. தனக்குச் சொந்தமாக, பெங்களூரில் இருக்கும் டிரக் தயாரிக்கும் தொழிற்சாலையில், கான்ட்ராக்ட் அடிப்படையில் கார்களை அசெம்பிள் செய்ய உள்ளது வால்வோ.

மிட்சுபிஷி... இப்போ பிஸி!

மிட்சுபிஷி நிறுவனம், இந்தியச் சந்தையில் தான் விற்பனையிலிருந்து நிறுத்திய கார்களை இப்போது ஒன்றன்பின் ஒன்றாக மீண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2012-ல் ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக பஜேரோ ஸ்போர்ட், 2016-ல் ஜெர்மன் லக்ஸூரி எஸ்யூவிகளுக்குப் போட்டியாக மான்ட்டெரோ ஃபேஸ்லிஃப்ட் எனக் கொஞ்சம் பிஸியாகி விட்டது மிட்சுபிஷி. தற்போது டூஸான், CR-V காம்பஸ் ஆகிய பெட்ரோல் மாடல் எஸ்யூவிகளுக்குப் போட்டியாகத் தனது அவுட்லேண்டர் காரை விரைவில் களமிறக்க உள்ளது. 2008-ல் இந்தியாவில் அறிமுகமான இந்த எஸ்யூவியின் 3-வது தலைமுறை மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனைத்தான், ஜப்பானில் இருந்து CBU முறையில் இறக்குமதி செய்து, இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது மிட்சுபிஷி. மோனோகாக் கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் அவுட்லேண்டரில், S-AWC 4 வீல் டிரைவ் - 7 இருக்கைகள் இருப்பது ப்ளஸ்; இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.4 லிட்டர், 4 சிலிண்டர் (4J12) பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு CVT கியர்பாக்ஸ் கூட்டணி, 169bhp பவரையும் - 22.5kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள தனது 50 டீலர்களில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லாவிட்டாலும், இதற்கான புக்கிங் (உத்தேச எக்ஸ் ஷோரூம் விலை - 29 லட்சம்) ஏற்கனவே துவங்கி விட்டன.

ஃபோக்ஸ்வாகனின் எஸ்யூவி!

ஃபோக்ஸ்வாகனில் எஸ்யூவிகளே இல்லை என்ற கார் ஆர்வலர்களின் கேள்விக்குப் பதிலாக, கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டதுதான் டிகுவான். தற்போது 27.98 - 31.38 லட்ச ரூபாயில் (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) அந்த எஸ்யூவி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Comfortline, Highline எனும் இரு வேரியன்ட்டில் வெளிவந்திருக்கும் இந்த எஸ்யூவியை, மஹாராஷ்ட்ராவில் இருக்கும் தனது தொழிற்சாலையில், MQB பிளாட்ஃபார்மில் தயாரிக்கிறது ஃபோக்ஸ்வாகன். பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 143bhp பவர் - 34kgm டார்க் - 17.06 கி.மீ அராய் மைலேஜை அளிக்கக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 4WD ஆப்ஷனுடன் மட்டுமே களமிறங்கியிருக்கிறது டிகுவான்.
ABS, ESC, பார்க்கிங் சென்ஸார், ரெயின் சென்ஸார், 18 இன்ச் அலாய் வீல்கள், LED ஹெட்லைட் - டெயில்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, பனோரமிக் சன்ரூஃப், காற்றுப்பைகள் எனச் சிறப்பம்சங்களின் பட்டியல் மிக நீளம்! டிமாண்டைப் பொறுத்து, பின்னாளில் 2 வீல் டிரைவ் மற்றும் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல்கள் வெளிவரும் என நம்பலாம்.

GST-க்குப் பிறகு கார் வாங்குவது லாபமா? நஷ்டமா?

கார் வாங்க நினைக்கும் எல்லோருக்கும் இப்போது இந்த ஒரு பொதுவான கேள்விதான் மண்டையைக் குடைந்துகொண்டிருக்கிறது. இதற்கான பதில் கடைசி பத்தியில்.

இந்த 14-வது GST அதாவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் மீட்டிங்கில், ஆட்டோமொபைல் துறைக்கு இதுதான் ஹைலைட்டான விஷயங்கள்.

1. வாகனங்களுக்கு GST வரி விகிதம் 28% என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

2. சின்ன கார்களுக்கும் சொகுசு கார்களுக்கும் கூடுதல் செஸ் (CESS)

3. 350 சிசிக்கு மேற்பட்ட பைக்குகளுக்கு கூடுதல் CESS வரி.

சரி; முதலில் GST என்றால் என்ன?

‘Goods and Service Tax’ - இதுதான் GST. புரியும்படிச் சொன்னால்... என்ட்ரி, சர்வீஸ், சென்ட்ரல் எக்ஸைஸ், பர்ச்சேஸ், VAT, CST - இப்படி தனித்தனியாக இருக்கும் குட்டிக் குட்டி வரிகளை ஒரே வரியாக இணைத்துத் தருவதுதான் GST. ஆட்டோமொபைலுக்கு மட்டுமில்லை; நாம் வாங்கும் பொருட்கள் எல்லாவற்றுக்கும் இந்த வரி பொருந்தும்.

CESS என்றால் என்ன?

இதுவும் ஒரு வரிதான். மற்ற வரிகளிலிருந்து இது லேசாக வித்தியாசப்படும். பெர்சனல் இன்கம் டேக்ஸ், எக்ஸைஸ், கஸ்டம்ஸ் டியூட்டி - இப்படி கலெக்ட் செய்யப்படும் வரிகள், அரசாங்கத்தின் Consolidated Fund of India (CSF) மூலமாக ஸ்வச் பாரத், கல்வி போன்ற முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படும். செஸ் வரி, இந்த CSF உடன் சம்பந்தப்படாமல், எந்தப் பொருளுக்காக வரி விதிக்கப்படுகிறதோ, அதற்காக மட்டுமே செலவழிக்கப்படும் விஷயம்.

இந்த GST மசோதாவில், ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி; கெட்ட செய்தி; பொதுவான செய்தி என்று எல்லாமே உண்டு.

முதலில் கெட்ட செய்தி: இந்த GST-யில் CESS-ஐப் பொறுத்தவரை 4 மீட்டருக்குட்பட்ட சின்ன பெட்ரோல் கார்களுக்கு 1 சதவிகிதமும், (1,200 சிசிக்கு உள்ளே)... டீசல் கார்களுக்கு 3 சதவிகிதமும்... நான்கு மீட்டருக்கு மேற்பட்ட செடான் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு (1,500 சிசிக்குக் குறைவாக) 15 சதவிகிதமும் செஸ் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், எல்லா வாகனங்களுக்கும் 28 சதவிகித GST-யுடன் இந்த CESS வரியும் சேரும்போது, முறையே 29%, 31%, 43% வரிகள் வந்து விழுகின்றன.

இப்போது நாம், கார்களுக்குக் கலால் வரியாக (எக்ஸைஸ் டியூட்டி) 12.5%-ம், VAT ஆக 12.5% முதல் 14.5%-ம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் சின்ன கார்களுக்கு 25% முதல் 27% செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், இனி நாம் கட்டப் போகும் வரி 29%. அப்படியென்றால், சின்ன கார்களின் விலை 2% முதல் 4% வரை விலை ஏற்றம் காத்திருக்கிறது. அதேபோல் ஹைபிரிட் வாகனங்களுக்கும், லக்ஸூரி கார்களுக்கு இணையாக 43% வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல செய்தி: இது 1,500 சிசிக்கு மேற்பட்ட செடான் மற்றும் எஸ்யூவி வாங்கப் போகிறவர்களுக்கு மட்டும்தான். இந்த இரண்டுக்கும் இப்போது கணிசமான வரி குறைப்பு நடக்க இருக்கிறது. நாம் ஏற்கெனவே சொன்னதுபோல், அந்த வரி, இந்த வரி என்று மொத்தம் 50%-க்கு வரி கட்டிக் கொண்டிருக்கிறோம். இப்போது 43%-க்கு வரி கட்டினால் போதும். அதாவது, 7% வரை விலை குறைந்திருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை 12% ஆக GST-யில் வரி கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது பைக்குகள், ஆட்டோக்களுக்கும் பொருந்தும்.

பொதுவான செய்தி: நடப்பில் நாம் கட்டும் வரியும் கிட்டத்தட்ட 43% என்பதால், 1,500 சிசிக்குக் குறைவான மிட் சைஸ் காரின் விலையில் ஏற்றமும் இல்லை; இறக்கமும் இல்லை.

இந்த GST-க்குப் பிறகு,

* சின்ன பெட்ரோல் கார் வாங்குவது நஷ்டம்.

* சின்ன டீசல் கார் வாங்குவது பெரிய லாபம் இல்லை.

* சொகுசு கார் மற்றும் எஸ்யூவி வாங்குபவர்களுக்கு இது சிறந்த சேமிப்பு.