1966-ல் நடந்த ‘லெ மான்ஸ்’ ரேஸை மறக்க முடியாது. மூன்று ஃபோர்டு GT40 கார்கள், ஃபெராரி கார்களைத் தோற்கடித்து போடியம் ஃபினிஷ் கொண்டாடி, வரலாற்றில் இடம் பிடித்தன. 50 ஆண்டுகள் கழித்து, இந்த வெற்றியைக்கொண்டாட மீண்டும் லெ மான்ஸ் ரேஸில் பங்கேற்க முடிவெடுத்தது ஃபோர்டு. இதற்காகவே ஃபோர்டு புதிய GT ரேஸ் காரை உருவாக்கியது. 2016 ‘லெ மான்ஸ்’ ரேஸில் GTE கிளாஸில் போட்டியிட்டு மீண்டும் ஃபெராரியை வீழ்த்திச் சாதனை செய்தது.

இங்குதான் ஒரு டிவிஸ்ட். போட்டியின் விதிகளின்படி... ரேஸில் பங்கேற்க வேண்டுமானால், ரேஸ் காருக்குச் சமமாக, சாதாரண சாலைகளில் ஓடக்கூடிய ஒரு காரையாவது ரேஸ் நடக்கும் ஆண்டே ஃபோர்டு விற்பனை செய்தாக வேண்டும். இந்த விதிமுறையால் பிறந்த கார்தான், நாம் இப்போது டெஸ்ட் செய்யும் ஃபோர்டு GT கார்.

ஆண்டுக்கு 250 கார்கள் வீதம் நான்கு ஆண்டுகளில் மொத்தம் 1,000 கார்களை மட்டுமே ஃபோர்டு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் 2017 - 2018 -ம் ஆண்டு தயாரிக்கப்படும் கார்களுக்கு ஏற்கெனவே ஆர்டர்கள் பெறப்பட்டுவிட்டன. எனவே, மிகப் பிரத்யேகமான வாடிக்கை யாளர்களுக்கு மட்டுமே இந்த காரை விற்பனை செய்கிறது போர்டு.

RHD (Right Hand Drive) மாடல் இல்லை என்பதால், இந்தியாவுக்கு இந்த கார் வராது. டிசைனைப் பொறுத்தவரை முழுக்கவே ஏரோடைனமிக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் GT கார் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஸ்மார்ட்டாக மிரட்டுகிறது. காரின் கூரையையும், ஃபெண்டரையும் டிசைனர்கள் இணைத்த விதம் அபாரம். காரின் டவுன்ஃபோர்ஸை அதிகரிக்கச் செய்வதற்காகவாம். அதேசமயம், இன்ஜின் இன்டேக்குகளுக்கும் காற்று செல்லும்படி வடிவமைத்துள்ளார்கள்.

காரின் கேபின் நெருக்கமாக உள்ளது. சீட் அட்ஜஸ்ட்மென்ட் கிடையாது. ஆனால், நமக்கு ஏற்றவாறு ஸ்டீயரிங் வீல், பெடல்களை முன்னும் பின்னும் நகர்த்திக்கொள்ளலாம்.இந்திய மதிப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய் விலை கொண்ட இந்த காரின் உள்பக்கம் சாதாரணமாகவே உள்ளது. ட்ராக் மோடுக்கு மாற்றினால், கிரவுண்ட் கிளியரன்ஸ் டக்கென்று 50 மிமீ குறைந்துவிடுகிறது.

3.5 V6 இன்ஜின் 656 bhp சக்தியையும், 76.04 kgm டார்க்கையும் அளிக்கிறது. பெர்ஃபாமென்ஸில் இந்த இன்ஜின் மிரட்டுகிறது. ஆனால், ஒரு சூப்பர் காருக்குரிய சத்தம் இல்லவே இல்லை. காரின் எடையும் 1,385 கிலோதான். விரட்டி ஓட்டினால், அவ்வளவு த்ரில். காரின் சேஸியும், ஏரோடைனமிக்ஸும் கச்சிதமாக இருப்பதால், வளைவுகளில் காரின் கையாளுமை அருமை.

இன்று சந்தையில் இருக்கும் சூப்பர் கார்களில், கையாளுமையில் இதுதான் பெஸ்ட் என்று அடித்துச் சொல்லலாம். இத்தாலிய சூப்பர் கார்கள்போல அழகில் வசீகரிக்கவில்லை என்றாலும், V8, V10 இன்ஜின்களின் சத்தம் இல்லாவிட்டாலும், ஒரு பக்கா ரேஸ் காரின் வழித்தோன்றல் என்பதை GT காரில் உணர முடிகிறது. கிடைக்காது என்று தெரிந்தும் எத்தனையோ பேர் காரை வாங்க க்யூவில் நிற்கிறார்கள் என்பதே இதன் வெற்றிக்குச் சாட்சி!