ஆடி, ஜாகுவார், பென்ஸ், பிஎம்டபிள்யூ என்று எந்தச் சொகுசு கார்களுடனும் போட்டி போடாத ‘தனி ஒருவன்’ கார் லெக்ஸஸ். ஆனால், லெக்ஸஸ் வைத்திருப்பதே ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்தான். லெக்ஸஸின் பூர்வீகம், ஜப்பான். ஜப்பானில் அதிகமாக விற்பனையாவது லெக்ஸஸ்தான். நீங்கள் நினைப்பது சரிதான்; டொயோட்டாதான் லெக்ஸஸ் நிறுவனத்தின் ஓனர்.

அப்படிப்பட்ட லெக்ஸஸ் RX எஸ்யூவி, LX எஸ்யூவி. LX 450... என்று அடுத்தடுத்து புதுப்புது மாடல்களை நம் நாட்டில் இறக்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்ட்ரி லெவல் செடான் காரான ‘ES 300h’ ஹைபிரிட் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது லெக்ஸஸ். டிசைனிலிருந்து ஹைபிரிட் பவர் டிரெய்ன் வரை அப்படியே கேம்ரியின் காப்பியாக இருக்கிறது ES 300h.

லெக்ஸஸில் ஹைபிரிட் காரை ஈஸியாகக் கண்டுபிடிக்க ஒரு வழி, முன்பக்க கிரில்லில் இருக்கும் லோகோ, நீல வண்ணத்தில் மின்னினால், அது ஹைபிரிட்; அதாவது, பெட்ரோல் + எலெக்ட்ரிக் இரண்டிலும் ஓடக்கூடிய கார். முன்பக்கம் முழுவதுமே கிரில். இது லெக்ஸஸ் கார்களின் இன்னொரு அடையாளம். ஷார்ப் ஹெட்லைட்ஸ், ஸ்போர்ட்டி. ஒரு சந்தோஷமான விஷயம் - லக்ஸூரி கார்களில் ஸ்பேர் டயர் வராது. ஆனால், லெக்ஸஸ் ES 300h-ல் எக்ஸ்ட்ரா டயர் ஸ்டாண்டர்டு ஆப்ஷனாக உண்டு.

பிரௌன்+கறுப்பு நிறம் என இன்டீரியர் செம ரிச் லுக். ஆனால், சென்டர் கன்ஸோலில் சில பிளாஸ்டிக் பாகங்கள் பிரீமியம் லுக் தரவில்லை. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டச் ஆப்ஷன் கிடையாது. கியர் லீவருக்குப் பக்கத்தில் இருக்கும் கன்ட்ரோலர் மூலம்தான் ஆபரேட் செய்ய வேண்டும். மற்றபடி 10 காற்றுப்பைகள், 15 ஸ்பீக்கர் கொண்ட லெவின்ஸன் சிஸ்டம், சன்ரூஃப், ரிவர்ஸ் கேமரா, மெமரி சீட்டுகள் என்று வசதிகள் ஓகே! ES 300h-ல் இருப்பது கேம்ரியில் இருக்கும் அதே 142bhp (105KW) பவர் கொண்ட ஹைபிரிட் பேக்கேஜ் சிஸ்டம்தான். பெட்ரோல் இன்ஜினைப் பொறுத்தவரை 160bhp, 2.5 லிட்டர்.
இரண்டையும் சேர்த்து மொத்த பவராக 205bhp கிடைக்கிறது. பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்துவிட்டு, ஃபுல் எலெக்ட்ரிக் மோடில் அதிக தூரம் போக முடியவில்லை. CVT கியர்பாக்ஸ், ஓவர்டைம் பார்க்கிறது என்றே சொல்லலாம். 8.5 விநாடிகளில் 0-100 கிமீ-யை எட்டியது ES 300h. இது டீசன்ட்டான பெர்ஃபாமென்ஸ். ‘அடிச்சு விரட்டணும்’ என்பவர்களுக்கான கார் ES 300h இல்லை. ரிலாக்ஸ் டிரைவிங்குக்குத்தான் இந்த லெக்ஸஸ் பெஸ்ட் சாய்ஸ்.

அராய் மைலேஜாக 17.8 கிமீ தரும் என்கிறது லெக்ஸஸ். முழு காராக அப்படியே இறக்குமதி செய்து விற்கப்பட இருக்கும் ES 300h-ன் விலை 65 லட்சத்தைத் தாண்டும். ES 300h காரை லெக்ஸஸின் ஸ்டார் கார் என்று சொல்ல முடியாது. இந்தியாவுக்கு ஒரு மிகப் பெரிய அறிமுகம் காத்திருக்கிறது.