எடை அதிகமான, ஆனால் உறுதியான லேடர் ஃப்ரேம் சேஸியைக் கொண்டு, Body On Frame முறையில் தயாரிக்கப்படும் பல்க் எஸ்யூவிகளுக்குத்தான் இப்போது டிமாண்ட்.

சமீபத்திய அறிமுகமான இசுஸூவின் MU-X, இதற்குச் சிறந்த சான்று! இந்தியாவில் யுட்டிலிட்டி வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மஹிந்திராவின் தயாரிப்புகள் பெரும்பாலும், மேலே சொன்ன விதியின்படிதான் அமைந்திருக்கின்றன.

மஹிந்திராவின் துணை நிறுவனமான ஸாங்யாங் வடிவமைத்திருக்கும் புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவியின் கட்டுமானத்தில், லேடர் ஃப்ரேம் சேஸி அமைப்பையே பயன்படுத்தியிருக்கிறது. எப்படி இருக்கிறது புதிய ரெக்ஸ்டன்?

டிசைன், கேபின், இடவசதி

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெக்ஸ்டனுக்கும், உலகளவில் வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ரெக்ஸ்டனுக்கும் துளிகூட ஒற்றுமை இல்லை. 2016 பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தப்பட்ட LIV-2 கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டுதான், புதிய ரெக்ஸ்டன் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இது, பார்ப்பதற்கு வழக்கமான டிசைனாகத் தெரிந்தாலும், பழைய ரெக்ஸ்டனுடன் ஒப்பிடும்போது, சரியான அளவுகளுடன் பக்குவப்பட்ட டிசைனாக இருக்கிறது; ஹெட்லைட்டையும், கிரில்லையும் இணைக்கக் கூடிய குரோம் பார், வீல் ஆர்ச்களின் இடையே இருக்கும் பாடி லைன், சூப்பர் டீட்டெய்லிங்குடன் கூடிய ஹெட்லைட் - டெயில் லைட் மற்றும் பம்பர்கள் என ஆங்காங்கே, வித்தியாசமான டிசைன் அம்சங்களும், புதிய ரெக்ஸ்டனில் எட்டிப்பார்க்கின்றன. 4.8 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் உயரம், 1.9 மீட்டர் அகலம் என அளவுகளில் மிரட்டும் ரெக்ஸ்டன் எஸ்யூவி, பார்க்கிங் ஏரியாவிலும் - சாலையிலும் தனி அந்தஸ்தைத் தருகிறது.

காரின் அகலத்தைக் கருத்தில் கொண்டு, படுக்கைவசத்தில் இருக்கக்கூடிய டிசைன் அம்சங்களுடன் டேஷ்போர்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், சென்டர் கன்ஸோல் ஆகியவை, ஸ்மார்ட்டாக டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. க்விட், இயான் போன்ற பட்ஜெட் கார்களே, பெரிய டச் ஸ்க்ரீனுடன் அசத்தும்போது, இந்த பிரீமியம் எஸ்யூவி மட்டும் விதிவிலக்கா என்ன? ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே சாட்டிலைட் நேவிகேஷன் வசதிகளுடன் கூடிய 9.2 இன்ச் HD டச் ஸ்க்ரீனை ரெக்ஸ்டனில் பொருத்தியிருக்கிறது ஸாங்யாங். இந்த வகை கார்களிலே இதுதான் மிகப்பெரிய டச் ஸ்க்ரீன் என்பதுடன், 360 டிகிரி கேமரா, தானாகத் திறக்கக்கூடிய டெயில்கேட், 10 ஸ்பீக்கர்களைக் கொண்ட Infinity சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ லாக்கிங் கதவுகள் எனத் தொழில்நுட்பத்தில் அசத்துகிறது ரெக்ஸ்டன். அதாவது, டெயில்கேட்டைத் திறக்க முடியாத அளவுக்குக் கையில் பைகளுடன் இருந்தாலும், பாக்கெட்டில் சாவி இருந்தாலே போதும்; நீங்கள் காரில் டெயில்கேட் அருகில் சென்றாலே, அது தானாகத் திறந்துவிடுகிறது.

இப்படி சிறப்பம்சங்களில் அசத்தும் ரெக்ஸ்டனின் கேபினின் தரம், வாவ் ரகம்; இதனுடன் ஒப்பிடும்போது, டொயோட்டா ஃபார்ச்சூனரின் கேபின், ஏதோ குகைக்குள் இருப்பதுபோன்ற உணர்வையே தருகிறது.
மற்ற Body On Frame முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிகளைப் போல, ரெக்ஸ்டன் எஸ்யூவியும் அதிக உயரத்தைக் கொண்டிருக்கிறது. எனவே, காரின் பக்கவாட்டில் இருக்கும் ரன்னிங் போர்டில் ஏறித்தான், காருக்குள்ளே நுழைய வேண்டியிருக்கிறது. ஆனால், சொகுசான இருக்கையில் அமர்ந்த பிறகு, அற்புதமான இடவசதி கிடைப்பது ப்ளஸ். இருவரிசை இருக்கைகளிலும் அதிக லெக்ரூம் - ஹெட்ரூம் இருக்கின்றன.

பின்பக்க இருக்கை கொஞ்சம் அதிக உயரத்தில் இருப்பதுபோலத் தோன்றினாலும், அருமையான சீட்டிங் பொசிஷன் கிடைப்பதால், அது குறையாகத் தெரியவில்லை.

படங்களில் இருப்பது, 5 சீட்டர் மாடல்; ஆனால், இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும்போது, 7 சீட்டர் ஆப்ஷனுடன் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். மேலே சொன்ன அத்தனை சிறப்பம்சங்களும் இருக்குமா என்பதற்கு, மஹிந்திராவிடமிருந்து இப்போதைக்குத் தெளிவான பதில் இல்லை.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ரெக்ஸ்டன் எஸ்யூவியில், 2 2 லிட்டர், 4 சிலிண்டர் e-XDi220 டீசல் இன்ஜினைப் பொருத்தியுள்ளது ஸாங்யாங். இது 187bhp பவரையும், 42kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இன்ஜின்களில் ஆப்ஷன் இல்லாவிட்டாலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என கியர்பாக்ஸ்களில் ஆப்ஷன்கள் உண்டு; இந்த டார்க் கன்வெர்ட்டர் வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. எனவே, ஆட்டோமேட்டிக் மாடலைத்தான் இங்கே டெஸ்ட் டிரைவ் செய்திருக்கிறோம். இன்ஜின் சத்தமின்றி இயங்குகிறது. ஆனால், டீசல் எஸ்யூவிகளில் இருக்கக்கூடிய பஞ்ச் இதில் மிஸ்ஸிங். காரணம், ஸாங்யாங் இன்ஜினைச் சீரான பவர் டெலிவரிக்காக டியூன் செய்திருக்கிறது; மேலும் 4,000 ஆர்பிஎம்மைத் தாண்டும்போது, பவர் சுத்தமாகக் காணாமல் போய்விடுகிறது. டெக்னிக்கல் விபரங்களில் அசத்திய ரெக்ஸ்டனின் இன்ஜின், அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, ஆன் ரோட்டில் அவ்வளவு ஈர்க்காமல் போனது மைனஸ். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை, அதிக மைலேஜுக்காக டியூன் செய்திருப்பது புரிகிறது. எனவே, டாப் கியரில், நெடுஞ்சாலைகளில் காரை விரட்டாமல், ரிலாக்ஸாக க்ரூஸ் செய்ய முடிகிறது,

ஓட்டுதல் அனுபவம்

Body On Frame முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மற்ற எஸ்யூவிகளைப் போல, ரெக்ஸ்டன் எஸ்யூவியும் மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருக்கிறது. திருப்பங்களில் காரைச் செலுத்தும்போதும் அதிக வேகத்தில் செல்லும்போதும் பாடி ரோல் அதிகமாக இருப்பதுடன், காரும் அலுங்கிக் குலுங்குகிறது. ரெக்ஸ்டனின் அதிக உயரமும், இதற்கான காரணிகளுள் ஒன்று; ஆனால்,

ஸ்டீயரிங்கின் எடை குறைவாக இருப்பதால், இவ்வுளவு பெரிய காரைக் கையாள்வது ஈஸியாக இருக்கிறது. எனவே, ஓனர் கம் டிரைவராக இருந்து, காரை விரட்டி ஓட்டுபவர்களுக்கு ஏற்ற காராக இல்லாமல், டிரைவர் வைத்துப் பின்சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கான சாய்ஸ்களுள் ஒன்றாக இருக்கிறது, ரெக்ஸ்ட்டன் எஸ்யூவி.

முதல் தீர்ப்பு

மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் இருக்கும் தனது தொழிற்சாலைகளில், ரெக்ஸ்டன் எஸ்யூவியைத் தயாரிக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறது. இதனால், உள்நாட்டில் இருந்து பெறப்பட்ட பாகங்கள் காரில் இடம்பெறும் என்பதுடன், அட்டகாசமான விலையில் காரை பொசிஷன் செய்யவும் முடியும். எனவே, தனது போட்டியாளர்களைவிடச் சுமார் 5 லட்சத்துக்கும் குறைவான விலையில், வருகின்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ரெக்ஸ்டன் எஸ்யூவியைக் காட்சிப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் மஹிந்திரா இருக்கிறது. ஆனால், இது ஸாங்யாங் அல்லது மஹிந்திரா என, எந்த பிராண்டில் வெளிவரும் என்பது அவர்களுக்கே வெளிச்சம். மஹிந்திரா XUV 7OO என்ற பெயர், இதற்கு ஏற்றதாக இருக்கும் எனத் தோன்றுகிறது.