Published:Updated:

எப்போது வழி பிறக்கும்?

எப்போது வழி பிறக்கும்?

மோ.அருண் ரூப பிரசாந்த் >> ஜெ.தான்யராஜு 

 ##~##

சைரன் வைத்த அமைச்சரின் காருக்கு வழிவிடும் நாம், உயிருக்குப் போராடுபவரைக் காப்பாற்றும் ஆம்புலன்ஸுக்கு வழி விடுவதில் தயக்கம் காட்டுகிறோம். 'நமக்குத்தான் வழிவிட இடமில்லையே... என்ன செய்வது’ என நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு வேடிக்கை பார்ப்போம். இன்னும் சிலரோ, ஒதுங்கி வழி விடுவதுபோல முயற்சி மட்டுமே செய்வார்கள்?! ஆனால், நாம் அனைவரும் ஒன்றாகச் செய்ய வேண்டியது என்னவென்றால், 'ஆம்புலன்ஸ் இந்த நெரிசலில் இருந்து விடுபட்டுச் செல்ல வேண்டும்’ என ஒரே மாதிரி சிந்தித்தால்... அடுத்த நிமிடத்தில் அது சாத்தியமாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆம்புலன்ஸ் பற்றிய சில கருத்துகள் மக்களிடம் இருக்கிறது. பீக் ஹவரில், சைரன் போட்ட ஆம்புலன்ஸ் ஒன்று, நோயாளி யாரும் இல்லாமல் செல்வதைப் பலர் பார்த்திருக்கலாம். ஏதோ, ஆம்புலன்ஸ் ஓட்டுபவர் அவரது சொந்த வேலைக்காகச் செல்வதாக நினைத்து, அவரைத் திட்டியிருக்கவும் கூடும். ஆனால், பாதிக்கப்பட்ட நோயாளியை பிக்-அப் செய்ய, நோயாளிக்கு அவசரமாக ரத்த மாற்று செய்ய என அதிமுக்கியமான வேலைகளுக்கும் ஆம்புலன்ஸ் ஆளில்லாமல்தான் செல்லும். எனவே, ஆம்புலன்ஸுக்கு நீங்கள் விடும் வழி, நிச்சயமாக ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்குத் தான்.

எப்போது வழி பிறக்கும்?

நகரம் முதல் பட்டி தொட்டி வரை புகழ் பெற்ற, 108 ஆம்புலன்ஸ் சேவை செய்து வரும் GVK - EMRI(எமர்ஜென்ஸி மேனேஜ் மென்ட் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்) அமைப்பின் சென்னை மேலாளர் பிரபுதாஸைச் சந்தித்துப் பேசினோம்.  

எப்போது வழி பிறக்கும்?

''நம் நாட்டில் ஆம்புலன்ஸ் தொடர்பான விழிப்பு உணர்வு குறைவுதான். வளர்ந்த நாடுகளில் ஆம்புலன்ஸின் சைரன் ஒலி கேட்டாலே, எந்தப் பக்கம் போகும் வாகனமானாலும் அப்படியே ஒதுங்கி நின்று... ஆம்புலன்ஸ் சென்ற பிறகுதான் நகரவே வேண்டும். ஆனால், இப்போது நம் நாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக இதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். தூரத்தில் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டதுமே, சாலையின் இடது அல்லது வலதுபுறத்துக்கு ஒதுங்கி விட்டு, சாலையின் நடுப் பகுதியை ஆம்புலன்ஸுக்குக் கொடுத்தால் போதும். சுலபமாக அந்த இடத்தை அது கடந்துவிட முடியும்.  சாலையில் உள்ள அனைவரும் ஒத்துழைத்தால்தான் இது சாத்தியம்!'' என்றார்.

108 ஆம்புலன்ஸ் டிரைவர்களை 'பைலட்’ என்று அழைக்கிறார்கள். பைலட்டுகளுக்கு டிரைவிங் பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு மனப் பயிற்சியும் முக்கியம்!'' என்கிறார் பிரபுதாஸ்.

எப்போது வழி பிறக்கும்?
எப்போது வழி பிறக்கும்?
எப்போது வழி பிறக்கும்?

மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட 108-ஆம்புலன்ஸ் சேவையை, தமிழக அரசுடன், GVKஎனும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்துகிறது. இந்தியா முழுவதும் பன்னிரண்டு மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளது இந்தச் சேவை.

எப்போது வழி பிறக்கும்?

பாரா மெடிக்கல் டீம் மற்றும் பைலட்டுகள் முறையான, முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு, எந்த நேரமும் தயாராக இருப்பார்கள்.

எப்போது வழி பிறக்கும்?

108 எண்ணுக்கு வரும் அவசர கால கால்களுக்குப் பதில் சொல்ல, துரித நடவடிக்கை எடுக்க, உயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய கால் சென்டர் ஒன்று சென்னையில் இருக்கிறது.

எப்போது வழி பிறக்கும்?

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட நோயாளிக்கு, அந்த விநாடியில் இருந்தே சிகிச்சையை ஆரம்பிக்க, பாரா மெடிக்கல் டீமுடன், எந்த நேரமும்  டூட்டி டாக்டர்கள் தொடர்பில் இருப்பார்கள்.

எப்போது வழி பிறக்கும்?

தென்கோடி குமரியில் இருந்து ஒருவர் 108 எண்ணுக்கு டயல் செய்தாலும், அது சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள கால் சென்டருக்குத்தான் வரும். அந்த கால் சென்டரை 'சென்ஸ்’ (SENSE) என்று அழைக்கின்றனர். சூழ்நிலையின் தன்மையை முதலில் உணர்வதால், அவர்களுக்கு இந்தப் பெயர்.

எப்போது வழி பிறக்கும்?

சென்ஸில் உள்ள முதல் டீம் - கம்யூனிகேசன். வரும் போன் கால்களுக்குப் பதில் அளித்து, பாதிக்கப்பட்டவரைப் பற்றிய தகவல்களையும், அவர்களது முகவரியையும் வாங்குவது இவர்களது வேலை. அவர்கள் சேகரித்த தகவல்களை அடுத்த டீமுக்கு அனுப்புவதோடு அவர்கள் வேலை முடிவடைந்து விடும்.

எப்போது வழி பிறக்கும்?

வரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத கிராமமாக இருந்தாலும்கூட, அங்கே ஆம்புலன்ஸ் நிற்பதற்கு டெஸ்பாட்ச் டீம் முழுப் பொறுப்பு. ஜிபிஎஸ் மூலம் ஆம்புலன்ஸ் தேவைப்படும் இடத்துக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸை அனுப்புவது, சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போய் சேர்வதற்கான ரூட் மேப் ஆகிய தகவல்களை பைலட்டுக்கு அனுப்புவது போன்ற வேலைகளை இந்த டீம் செய்யும்.

எப்போது வழி பிறக்கும்?

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட நோயாளிகளுக்கு, எந்த மாதிரியான சிகிச்சையை பாரா மெடிக்கல் டீம் மேற்கொள்ள வேண்டும் என்பதை, அடுத்த டீமான டாக்டர் குழு, கால் சென்டரில் இருந்து சொல்லிக் கொண்டே இருக்கும். வாகனத்தில் ஏற்றப்பட்ட இருதய நோயாளி ஒருவருக்கு, உள்ளேயே ஈசிஜி எடுத்து, அதை எம்.எம்.எஸ் மூலம் டாக்டர் டீமுக்கு அனுப்பும் அளவுக்குப் பக்காவான டெக்னாலஜி கொண்டது 108 ஆம்புலன்ஸ். ஆம்புலன்ஸுக்கு உள்ளேயே சிகிச்சை ஆரம்பிக்கப்படுவதால்தான், சில சமயம் நீங்கள் சாலையில் பார்க்கும் ஆம்புலன்ஸ், மிதமான வேகத்தில் செல்வதற்கு இதுதான் காரணம்!