Published:Updated:

59 வயது 47 நாட்கள் 11,000 கி.மீ!

பாரத் தர்ஷன்

சி.சுரேஷ்>>  செ.சிவபாலன் 

 ##~##

ர் சுற்றும் முடிவெடுத்துவிட்டால், அதற்கு வயது ஒரு தடையாக இருக்காது போலிருக்கிறது! அடுத்த ஆண்டு அறுபதாவது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் சண்முகம் - மல்லிகா தம்பதியினர், தங்களது 98-ம் ஆண்டு மாடல் மாருதி ஜென் காரில் 11,000 கி.மீ தூரம் தனியாகச் சுற்றுப் பயணம் செய்து, இளைஞர்களை எல்லாம் நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் இந்த தம்பதியினர். விவசாயத்துடன் ஆட்டோமொபைல் கன்ஸல்டன்ட்டாகவும் இருக்கும் சண்முகத்தைச் சந்தித்தோம்.

''கடந்த பிப்ரவரி மாதம் பயணத்தைத் தொடங்கினோம். மொத்தம் 47 நாட்கள், 11,000 கிலோ மீட்டர்கள் பயணித்து உள்ளோம். கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், சிக்கிம், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா என நம் நாட்டையே ஒரு சுற்று சுற்றி வந்து விட்டோம்' என தங்களது சாதனைப் பயணத்தை விவரித்தார் சண்முகம்.

59 வயது 47 நாட்கள் 11,000 கி.மீ!

''நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே பயணத்துக்குத் தயாராக ஆரம்பித்தோம். இந்தப் பயணத்துக்கு கூகுள் மேப்ஸ், ஜிபிஎஸ் டிவைஸும் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது!'' என்றவரை இடைமறித்து, சண்முகத்தின் மனைவி மல்லிகா பேசத் தொடங்கினார்.

'நாங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வருவோம். அதனால், இந்தமுறை இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் எனச் சொன்னது நான்தான். இந்தப் பயணத்தில், டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில்ஸுக்குப் போன அனுபவம்தான் மிகப் பயங்கரமான இருந்தது. செங்குத்தான மலைப் பாதையில் நாங்கள் மட்டுமே தனியாகப் பயணம் செய்தோம். ஒரு கட்டத்தில் பயம் வந்து திரும்பிவிடலாமா என்றுகூட யோசித்தோம். முதல் இரண்டு கியரில் மட்டுமே காரை நகர்த்திக்கொண்டே சென்ற அனுபவம் மறக்க முடியாதது. இந்த 47 நாட்களில் மொத்தம் 1,25,000 ரூபாய்தான் செலவானது. இதில் பெட்ரோலுக்குச் செலவான தொகை மட்டும் சுமார் 50,000 இருக்கும். இரவு நேரப் பயணத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டதால், பெரிய ரிஸ்க் எதுவும் இல்லை. இந்தப் பயணத்தில் எங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அதனால், தாஜ்மஹால் எங்கள் பயணப் பட்டியலில் இடம் பிடித்து இருந்தது. தாஜ்மஹாலின் அழகை நேரில் பார்த்த கணத்தை வருணிக்கவே முடியாது!' என நெகிழ்ந்தார் மல்லிகா.

59 வயது 47 நாட்கள் 11,000 கி.மீ!
59 வயது 47 நாட்கள் 11,000 கி.மீ!

மீண்டும் தொடர்ந்த சண்முகம், ''எனக்கு கார், பைக் மெக்கானிஸத்தில் ஈடுபாடு உண்டு. அதனால், காரில் ஏற்படும் சாதாரண பிரச்னைகளை எப்படிச் சரி செய்வது எனத் தெரிந்து கொண்டுதான் பயணத்தைத் துவங்கினேன். ஆனால், வழியில் எங்களுக்கு காரால் எந்தப் பிரச்னையுமே ஏற்படவில்லை.

இந்த நீண்ட நெடும் பயணத்துக்கு மாருதி ஜென் காரைத் தயார்ப்படுத்திக் கொடுத்தவர் மெக்கானிக் செல்வராஜிடம் பேசியபோது, 'காரை சரியாகப் பராமரிப்பதன் மூலம் இது போன்ற பயணங்கள் சாத்தியமாகும். இந்த காரைப் பொறுத்தவரை அதிக நாட்கள் பயன்படுத்திய பார்ட்ஸ்களை மாற்றிக் கொடுத்தேன். டயர்கள் அனைத்தும் புதியவை. ஸ்டெப்னி ஒன்றும் ரெடி செய்தேன். ஆனால், அதற்கான வேலை இல்லாத அளவுக்கு கார் சென்று வந்துள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்யும்போது அதிக வெப்பத்தால், கூலன்ட் சிஸ்டத்தில் இருக்கும் ரப்பர் ஹோஸ் லீக் ஆகும் வாய்ப்பு உண்டு. டயனமோ பெல்ட், காயில் இவை பாதிக்கப்படலாம். அதி வேகமாகச் சென்றால் ஏற்படும் தொல்லைகள் இவை. ஆனால், சண்முகம் சார் காரை அழகாக ஓட்டுவார். அவருடைய காரின் மெக்கானிக் என்ற வகையில் எனக்கும் இந்தப் பயணம் பெருமைதான்!' என்கிறார்.