Published:Updated:

இணைந்த தேசங்கள்!

இணைந்த தேசங்கள்!

  நா.சிபிச்சக்கரவர்த்தி >>   பா.காயத்ரி அகல்யா 

 ##~##

விதவிதமான பைக் கிளப்புகள் ஏராளம். ஆனால், 'முற்றிலும் மாறுபட்ட பைக்  கிளப் ஒன்றை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்து உள்ளனர்’ என்றதால், அவர்களைச் சந்தித்தோம். அப்பாச்சி, பல்ஸர், யமஹா எஃப்.ஸி 16, அவென்ஜர் என வழக்கமான பைக்குகள்தான் இருந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அப்படி என்ன இந்த கிளப்பில் ஸ்பெஷல்?'' என கிளப் உறுப்பினர் சிம்புவிடம் கேட்டபோது, ''நாங்க எல்லாரும் ஃபர்ஸ்ட் இயர் படிக்கறப்ப வேற வேற டிபார்ட்மென்ட்; ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமே இல்லை. பைக் பார்க்கிங் பண்ணும்போதுதான் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் ஆனோம். எல்லாத்துக்கும் பைக் மேல ரொம்ப பிரியம்ன்னு தெரிஞ்சது. அப்படியே இந்த நட்பு, பைக் கிளப்பா மாறிடுச்சு. இந்த பைக் கிளப் பேரைக் கேட்டா ஆச்சரியப்படுவீங்க... அது, ஒன் குலோப், ஒன் கிளப்!'' எனச் சொல்லி முடிக்கவும், தொடர்ந்தார் கௌதம்.

''இந்த பேரு ஏன் வெச்சோம்னா... நானும் சிம்புவும் தமிழ்நாடு. மத்த மூணு பேரு வேற மாநிலத்தைச் சேர்ந்தவங்க. இன்னும் ரெண்டு பேரு வேற வேற நாடு. அதுனாலதான் இப்படி ஒரு பேரு வெச்சோம். எப்படி இருக்கு எங்க கிளப் பேரு?'' என்று கேள்வியோடு முடித்தார் கௌதம்.

இணைந்த தேசங்கள்!

அடுத்துப் பேசியவர் ஆந்திராவைச் சேர்ந்த அனீஷ் குமார். ''பைக்ல வீலிங் பண்ண மாட்டோம். ஹெல்மெட் மாட்டிட்டுதான் பைக் ஓட்டுவோம். நாங்களும் முதல்ல வேகமாதான் ஓட்டிட்டு இருந்தோம். அப்புறம் இந்த கிளப் ஆரம்பிச்ச பின்னாடிதான், பைக் கிளப்ன்னா இவ்வளவு ரூல்ஸை ஃபாலோ பண்றவங்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சது. எங்க காலேஜ்ல எங்களைப் பார்த்துட்டு நெறைய பேரு ஃபாலோ பண்ணும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது'' என்றவரை இடைமறித்தார் கேரளாவைச் சேர்ந்த அர்ஸு.

''நாங்க எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் ஆனது எங்களோட பைக்காலதான். கேரளாவில இருந்து நான் இங்க வரும்போது யாரையும் எனக்குத் தெரியாது. பிறகுதான் இந்த ஃப்ரெண்ட்ஸ் எனக்குக் கிடைச்சாங்க. பிறகு, வெளிமாநிலத்தில் இருந்து இங்க பைக் கொண்டு வந்து ஓட்டணும்னா, அங்கிருந்து என்.ஓ.சி சர்டிஃபிகேட் வாங்கணும். இது இங்குள்ள சில நண்பர்களுக்குத் தெரியலை. பிறகு, நான் சொல்லித்தான் என்.ஓ.சி அப்ளை செய்து வாங்கினாங்க!'' என்றார் அர்ஸு.

''லாங் டிரிப் போகும்போது ரூட் மேப், டூல்ஸ் பாக்ஸ், ஹெல்மெட், முக்கியமா லைசென்ஸ்... அப்புறம் எங்க சாப்பிடணும்; எங்க நிறுத்தணும் எல்லாம் பிளான் பண்ணி பக்காவா போறதால இது வரைக்கும் ஒரு பிரச்னையும் வந்தது இல்லை'' என படபடவென பேசிய சவுதியைச் சேர்ந்த சைத்தானியாவை முந்திக்கொண்டு பேசத் தொடங்குகிறார் டெல்லி முகிலன்.

இணைந்த தேசங்கள்!

''எங்க அம்மா, அப்பா எல்லாம் பல மைல் தொலைவில் எங்கேயோ இருக்காங்க. நாங்க பாதுகாப்பா போய்ட்டு வருவோம்கிற நம்பிக்கையிலதான் பைக் வாங்கிக் கொடுத்து இருக்காங்க. அதுனால, நாங்க எங்களுக்குன்னு கட்டுப்பாடு வெச்சுக்கிட்டு பைக் ஒட்டுறோம். எங்க கேங்ல எல்லாரும் வேற வேற மொழி, மதம், நாடு, படிப்புன்னு இருந்தாலும் எங்களை ஒண்ணு சேர்த்த எங்க பைக்குங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்!'' என்று பெருமிதத்துடன் பேசினார்.

இலங்கையைச் சேர்ந்த அபிஷேக் பேசியபோது, ''இங்கு ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கக் காரணமாக இருப்பது எங்கள் பைக் என்பதை நினைக்கும்போது மிக்க சந்தோஷமாக இருகிறது. இந்த பைக் கிளப்பில் இணைந்ததன் மூலமாக நல்ல நண்பர்களும், பைக் பற்றிய புதிய விஷயங்களும் அறிந்து கொண்டேன். உண்மையில் நாங்கள் பைக்கால் இணைந்த தேசங்கள்!'' என நெகிழ்ச்சியாகக் கூறி முடித்தார்!