Published:Updated:

டுகாட்டியின் விலை 5 லட்சம்!

DUCATI MONSTER 795

5 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வர இருக்கிறது டுகாட்டி மான்ஸ்டர் 795 எனும் மாடல்! இந்தியாவில் ரியல் சூப்பர் பைக்குகளின் ஆரம்ப விலையே 10 லட்ச ரூபாய்க்கு மேல்தான். ஆனால், வெறும் 5 லட்ச ரூபாய்க்கு டுகாட்டி சூப்பர் பைக்கை அறிவித்திருப்பது சூப்பர் பைக் பிரியர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்திருக்கிறது!

ஆசியாவுக்கான பைக் என இதை அறிவித்திருக்கிறது டுகாட்டி. 803 சிசி திறன் கொண்டது டுகாட்டி மான்ஸ்ட்டர் 795. 'எல்-ட்வின்’ இன்ஜின் கொண்ட இதிலும் 'ஏர் கூல்டு’ இன்ஜின்தான். இன்ஜின் 'ஓவர் ஹீட்’ ஆவதைத் தடுக்கும் 'லிக்விட் கூல்டு’ இன்ஜின் இல்லை!

டுகாட்டியின் விலை 5 லட்சம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது 8250 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 87 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இந்தியர்களின் சராசரி உயரத்தைக் கருத்தில் கொண்டு, பைக்கின் உயரம் 30 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. பவர்ஃபுல் 'பிரம்போ’ பிரேக்ஸில், கூடுதலாக ஏபிஎஸ் பிரேக்ஸும் பொருத்தப்பட்டுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 795 சிசி பைக், தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனையாக இருக்கிறது. இந்தியாவில் மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக, இதை மிகவும் விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது டுகாட்டி.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் டுகாட்டி, சென்னையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். ஆம், விரைவில் சென்னையில் டுகாட்டி டீலர்ஷிப் துவங்கப்பட இருக்கிறது!

- சார்லஸ்