மோ.அருண்ரூபபிரசாந்த் ஜெ.தான்யராஜு
##~## |
இனோவா என்றால், புதுமை என்று அர்த்தம். புகழ் பெற்ற கார் டிசைனரான திலீப் சாப்ரியா நிறுவனத்தின் கை வண்ணத்தில் ரீ-டிசைன் செய்யப்பட்ட இனோவா ஒன்றை 'எலீட் சார்ட்டர்ஸ்’ (பர்வீன் டிராவல்ஸின் அங்கம்) விஐபி வாடிக்கையாளர்களுக்காக இயக்கி வருகிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காரின் வெளிப்புறத்திலோ, இன்ஜின் பர்ஃபார்மென்ஸிலோ எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. என்றாலும், இன்டீரியர் வேலைப்பாடுகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஆறரை லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள்.
காரின் முதல் வரிசை தவிர, மற்ற பகுதிகள் அனைத்தையும் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. முதல் வரிசையையும் காரின் பின் பகுதிக்கும் இடையில் கண்ணாடி இழைத் தடுப்பை ஏற்படுத்தி தனி கேபினாக மாற்றி இருக்கிறார்கள். காரின் பின் பக்கம் இரண்டே சீட்டுகள்; இரண்டும் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு, ஆர்ம் ரெஸ்ட், சவுண்ட் ப்ரூஃப் சரவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட எல்சிடி டிவி, டிவிடி ப்ளேயர், குட்டியூண்டு ஃபிரிஜ், சீட் அட்ஜஸ்மென்ட் செய்ய ஃபெதர் டச் கன்ஸோல், லேப் டாப், பாட்டில் வைப்பதற்கான ஃபோர்டபிள் டேபிள் என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறது திலீப் சாப்ரியாவின் நிறுவனம்.


வெளிப்புற வெளிச்சம் உள்ளே வரும்படி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி ஜன்னல்கள், எல்இடி விளக்குகள் என பல வசதிகள் இருந்தாலும், எலிகன்ஸின் முக்கியமான அம்சம், அதன் முன்பக்க கேமராதான். ஆம், கேபினுக்குள் இருப்பவர்கள், சாலையைப் பார்ப்பதற்கு வசதியாக, முன்புற விண்ட் ஷீல்டுக்கும், ரியர் வியூ கண்ணாடிக்கும் இடையில் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பட்டனைத் தட்டினால் எல்சிடி திரையில், முன்புற சாலை, காட்சியாக விரிகிறது!
இத்தனை வசதிகளுக்குமான மின் தேவையைப் பூர்த்தி செய்ய 12 வோல்ட்ஸ் இன்வெர்ட்டரும் பொருத்தி இருக்கிறார்கள். டிரைவருக்கும் தனியாக ஒரு மியூஸிக் சிஸ்டமும் உண்டு. எட்டு மணி நேரப் பயணத்துக்கு 4,500 ரூபாய் வாடகைக் கட்டணம் வசூலிக்கிறார்கள்!