Published:Updated:

தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் பிரீமியம் மீண்டும் எகிறுகிறது!

தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் பிரீமியம் மீண்டும் எகிறுகிறது!

சி.சரவணன் 

 ##~##

டந்த ஏப்ரலில்தான் தேர்டு பார்ட்டி மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்கப்பட்டது. அதாவது, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு 10 சதவிகிதமும், வர்த்தக வாகனங்களுக்கு 83 சதவிகிதமும் பிரீமியம் உயர்த்தப் பட்டது. இப்போது மீண்டும் இந்த பாலிஸிக்கான பிரீமியம் அதிகரிக்கப்பட இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாகனம் வைத்திருக்கும் அனைவரும் சட்டப்படி அவசியம் எடுக்க வேண்டிய ஒன்று இந்த 'தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ்.’ தற்போது, இந்த பாலிஸி மூலம் வசூலிக்கப்படும் பிரீமியம் தொகை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஒரு தொகுப்பில் 2006-ம் ஆண்டிலிருந்து வைக்கப்பட்டு வருகிறது. எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட பாலிஸியாக இருந்தாலும், இழப்பீடு இந்த மொத்த தொகையிலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7,500 கோடி ரூபாய்க்கு அளவுக்கு இந்தத் தொகுப்பில் பணம் சேரும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் கிளைம் தொகை இதைவிட அதிகமாக இருக்கிறது என்பதுதான் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கல்.  

தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் பிரீமியம் மீண்டும் எகிறுகிறது!

இந்த அதிகரிப்பு எந்த அளவுக்கு இப்போது வளர்ந்துவிட்டது என்றால்... வர்த்தக வாகனங்களுக்கான கிளைம் விகிதம் சுமார் 190 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது, 1,000 ரூபாய் பிரீமியம் வசூலிக்கப்பட்டால், 1,900 ரூபாய் கிளைம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. கூடுதலாக வழங்கப்படும் தொகை, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்தே வசூலிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில், மோட்டார் இன்ஷூரன்ஸ் கிளைம் விகிதம் 200 சதவிகிதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இன்னும் அதிக இழப்பீடு கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில், அவை வாங்கிய பிரீமியத்தைவிட இரு மடங்கு தொகையை இழப்பீடாகக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகி இருப்பதாகக் கூறுகிறார்கள். மேலும், இந்த கூடுதல் தொகையை அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், அவற்றின் மார்க்கெட் ஷேருக்கு ஏற்ப இழப்பீடு அளிக்க வேண்டும். இதில், ஒரு நிறுவனத்துக்கு குறைவான எண்ணிக்கையில் இழப்பீடு கோரிக்கை வந்திருந்தாலும், அந்த நிறுவனம் அதிக தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கிறதாம்.

தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் பிரீமியம் மீண்டும் எகிறுகிறது!

இதனால், பல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், 'தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும்’ என இந்திய காப்பீடு மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ-வுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றன. இதனை ஏற்று ஐ.ஆர்.டி.ஏ விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் பாலிஸிக்கான பிரீமியத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அப்போது, இழப்பீட்டையும் அந்தந்த நிறுவனங்களே வழங்க வேண்டும். அப்போது, இழப்பீடு விகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், பிரீமியத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகும்.

பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தென்மண்டல துணைத் தலைவர் கே.என்.முரளி கூறும்போது, ''தேர்டு பார்ட்டி இன்ஷ§ரன்ஸ¨க்கான தொகுப்பு நிதியை ரத்து செய்தாலும், செய்யாவிட்டாலும் பிரீமியத்தை அதிகரித்துக் கொள்ள ஐ.ஆர்.டி.ஏ அமைப்பிடம் கேட்க இருக்கிறோம். தற்போது தேர்டு பார்ட் இன்ஷூரன்ஸில், தனி நபர்கள் கிளைம் செய்யும் விகிதம் தற்போது 80-90 சதவிகிதத்துக்குள் இருக்கிறது. அதே நேரத்தில், வர்த்தக வாகனங்களில் இந்த கிளைம் விகிதம் 200 சதவிகித்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில், இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிக்கவில்லை என்றால், பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படும். இதனால், அவை சுமூகமாகச் செயல்பட முடியாத நிலை ஏற்படும்!'' என்றார்.

யுனைடெட் இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் கூறும்போது, ''தேர்ட் பார்ட்டி இன்ஷ§ரன்ஸ் பிரீமியத்தை அதிகரிக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். வர்த்தக வாகனங்களுக்கு பிரீமிய அதிகரிப்பு 60-70 சதவிகிதமாக இருக்கக் கூடும்'' என்றார்.

இந்த பிரீமியம் அதிகரிப்பு என்பது பைக் மற்றும் கார்களுக்கு குறைவாகவும், வர்த்தக வாகனங்களுக்கு அதிகமாகவும் இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

'ஏற்கெனவே வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அடிக்கடி விலையை உயர்த்திக்கொண்டு இருக்கும் நிலையில், இன்ஷூரன்ஸ் பாலிஸியும் உயர்ந்துகொண்டே இருந்தால், வாகன விற்பனை இன்னும் மந்தமாகும் சூழ்நிலை ஏற்படும்’ என்கிறார்கள் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள்!